உங்க வீட்டில் 1 கப் ஜவ்வரிசி இருந்தா போதும் அசத்தலான சுவையில் 10 நிமிடத்தில் இப்படி லட்டு தயாரிக்கலாமே!

- Advertisement -

லட்டு என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? அனைவரும் விரும்பும் இந்த லட்டு கடையில் தான் வாங்கி சாப்பிட வேண்டி இருக்கிறது. லட்டு விற்கும் விலைக்கு வீட்டில் லட்டு தயாரித்தாலும் இந்த நிலைதான். பொதுவாக கடலை மாவில் செய்யும் லட்டுவை விட, இந்த லட்டு ரொம்பவே ருசியாக இருக்கும். வாங்க ஜவ்வரிசியில் எப்படி சுவையான லட்டு ரெசிபி தயாரிப்பது? என்று தொடர்ந்து இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – ஒரு கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன், ஃபுட் கலர் – தேவைக்கு ஏற்ப, சர்க்கரை – ஒரு கப், பைனாப்பிள் எசன்ஸ் – விருப்பத்திற்கு.

- Advertisement -

செய்முறை

முதலில் ஒரு கப் அளவிற்கு ஜவ்வரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். குறைந்தது 2 மணி நேரம் கண்டிப்பாக ஊற வையுங்கள். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள்.

ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு நன்கு காய விடுங்கள். நெய் காய்ந்து வந்ததும் பொடித்த முந்திரி பருப்புகளை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் அந்த நெய்யில் நீங்கள் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை தண்ணீர் இல்லாமல் நன்கு வடிகட்டி சேர்க்க வேண்டும். இடைவிடாமல் நன்கு கிண்டி கொண்டே இருங்கள்.

- Advertisement -

ஒரு ஐந்து நிமிடம் நன்கு கிண்டி விட்டதும் ஓரளவுக்கு கெட்டியாக வரும் பொழுது தேவையான அளவிற்கு ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு நிமிடம் கழித்து சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை கரைய ஆரம்பிக்கும். இப்பொழுது சர்க்கரையுடன் ஜவ்வரிசி சேர்ந்து நன்கு கெட்டியாக திரண்டு வர வேண்டும். அதுவரை நன்கு கிண்டி கொண்டே இருங்கள்.

இப்போது வாசனைக்கு ஏதாவது ஒரு பிளேவர் சேர்க்கலாம். எல்லோ ஃபுட் கலர் சேர்த்தால், பைனாப்பிள் பிளேவர் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சமயத்தில் ஓரளவுக்கு கெட்டியானதும் பொடித்த ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும் அல்லது ஏலகாய்களை இடித்தும் சேர்க்கலாம்.

- Advertisement -

பின்பு கடைசியாக வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளையும் சேர்த்து நன்கு கெட்டியாக திரண்டு வர கிண்டி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். ஓரளவுக்கு சூடு பொறுக்கும் வரை ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக லட்டு பிடிக்க துவங்க வேண்டியது தான். ரொம்பவே மெத்தென்று சாஃப்டாக பஞ்சு போல இருக்கக் கூடிய இந்த ஜவ்வரிசி லட்டு சுவைப்பதற்கு அலாதியானதாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
அடிக்கிற வெயிலுக்கு உடலை குளிர்ச்சியா வச்சுக்கணும்னா இப்படி சப்பாத்தி செய்து சாப்பிடுங்க. நாள் முழுவதும் டயர்டே ஆகாம ரொம்பவும் ஹெல்தியா இருக்க இந்த சப்பாத்திய கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.

அப்படியே பூந்தி லட்டு போலவே இருக்கக்கூடிய இந்த ஜவ்வரிசி லட்டு பார்ப்பதற்கே எச்சில் ஊறும் அளவிற்கு அற்புதமாக இருக்கும். சட்டென்று ஈசியாக வீட்டிலேயே செய்து அசத்தக்கூடிய இந்த ஜவ்வரிசி லட்டு நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் ரொம்பவே பிடித்து போய்விடும்.

- Advertisement -