மசாலா டீ போட ஒவ்வொரு முறையும் இனி, மசாலா பொருட்களை இடிக்கும் வேலை கிடையாது. வீட்டிலேயே ‘இன்ஸ்டன்ட் மசாலா டீ பவுடரை’ அரைப்பது எப்படி?

masla-tea
- Advertisement -

மசாலா டீ தேவை என்றால் ஒவ்வொரு முறையும் ஏலக்காய் கிராம்பு மிளகு இவைகளை போட்டு இடித்து கஷ்டப்பட வேண்டும் என்ற அவசியமே கிடையாது. சரியான அளவுகளில் மசாலா பொருட்கள் அனைத்தையும் வறுத்து ஒரு மசாலா டீ பவுடரை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பொடியை அரைத்து வைத்து விட்டால், தேவைப்படும் போதெல்லாம் மசாலா டீ போட்டு அருமையாக குடிக்கலாம். சரி வாங்க சூப்பரான கமகமக்கும் அந்த மசாலா டீ பவுடர் ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

masla-tea1

மசாலா டீ பவுடரை அரைக்க எந்தெந்த அளவுகளில் என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்த்துவிடுவோம். ஏலக்காய் – 40 கிராம், கிராம்பு – 20 கிராம், மிளகு – 20 கிராம், பட்டை – 8 கிராம், சோம்பு – 10 கிராம், சுக்கு – 30 கிராம், துளசி விதைகள் – 6, இந்த பொருட்களை எல்லாம் சரியான அளவுகளில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஏலக்காய், கிராம்பு, மிளகு, பட்டை, சோம்பு, இந்த ஐந்து பொருட்களையும் சேர்த்து இரண்டு நிமிடம் போல வறுத்து ஒரு தட்டில் தனியாக கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

thulasi-vithai

அடுத்தபடியாக அதே கடாயில் சுக்கை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு 2 நிமிடங்கள் வறுத்து கொள்ள வேண்டும். இந்த சுக்கையும் எடுத்து ஆறிக்கொண்டிருக்கும் மசாலா பொருட்களோடு அதே தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக துளசி விதைகளை கடாயில் போட்டு லேசாக சூடுபடுத்தி இதையும் மசாலா பொருட்களோடு சேர்த்து நன்றாக ஆற வைத்துவிடுங்கள். இப்போது இந்த எல்லாப் பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு டீ போடுவதற்கு தேவையான இன்ஸ்டண்ட் மசாலா பொடி தயார். இதை பாட்டிலில் கொட்டி ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த இன்ஸ்டன்ட் மசாலா டீ பவுடரை வைத்து எப்படி டீ போடுவது. வழக்கம் போலத்தான். 2 டம்ளர் அளவு தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் 4 ஸ்பூன் டீ தூள், நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பவுடர் – 1/2 ஸ்பூன், சேர்த்து 5 நிமிடங்கள் தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். அதன் பின்பு ஒரு டம்ளர் அளவு திக்கான பாலை இந்த தண்ணீரில் ஊற்றி டீ யை நன்றாக கொதிக்கவைத்து, வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நுரை வரும் அளவிற்கு விலாவி ருசித்து தான் பாருங்களேன். இரண்டு பேர் அளவு டீ குடிக்க வேண்டும் என்றால், 1/2 ஸ்பூன் மசாலாப் பவுடர் போதுமானது. (உங்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீர் அதிகமாகவோ குறைவாகவோ சேர்த்து டீ தூளை போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். அது நம்முடைய சவுகர்யம் தான்.)

tea-making

இந்த மசாலா டீக்கு உங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லோருடைய நாக்கும் அடிமையாகி விடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா. உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -