மாசி மாதம் தமிழ் பஞ்சாங்கம் குறிப்புக்கள் 2018

Tamil Panchangam 2018 masi month
- Advertisement -

மாசி மாதத்திற்கென்று தனி சிறப்புகள் பல உண்டு. இந்த ஒரு மாதத்தில் நாம் செய்யும் பல விடயங்கள் நமக்கு இரட்டிப்பு பலன்களை தரும் என்று கூறப்படுகிறது. ஆகையால் நாம் இந்த மாதம் முழுக்க நல்லதை மட்டுமே செய்து இரட்டிப்பு பலனை அடைய முயற்சிப்போம்.

மறந்தும் தீமைகளை செய்து இரட்டிப்பு தீய பலன்களை நாம் பெற்றுவிட கூடாது என்பதை நினைவில் கொள்ளவேண்டிய மாதம் இது.

- Advertisement -

மாசி மாதம் 2018 ஆம் ஆண்டிற்கான பஞ்சாங்கம் இதோ உங்களுக்காக.

பஞ்சாங்கம்

- Advertisement -
தேதி      

ஆங்கிலம் /தமிழ்

- Advertisement -

   

கிழமை நட்சத்திரம் திதி யோகம் குறிப்புகள்
பிப்

13

மாசி

1

செவ்வாய் உத்திராடம் திரயோதசி சித்த யோகம் விஷ்ணுபதி புண்யகாலம், மகா சிவராத்திரி, பிரதோஷம்
14 2 புதன் திருவோணம் சதுர்த்தசி சித்த யோகம் சரவண விரதம்
15 3 வியாழன் அவிட்டம் (திருவோணம் காலை 8 மணி வரை) அமாவாசை சித்த யோகம் அம்மாவாசை
16 4 வெள்ளி சதயம் (அவிட்டம் காலை 9.30 மணி வரை) பிரதமை சித்த யோகம் சுப காரியங்களை தவிர்க்கவும்
17 5 சனி சதயம் பகல் 11.10 மணி வரை பிறகு பூரட்டாதி துவிதியை அமிர்த/மரணம் யோகம் சந்திர தரிசனம்
18 6 ஞாயிறு பூரட்டாதி பகல் 12.05 மணி வரை பிறகு உத்திரட்டாதி திருதியை சித்த/அமிர்த யோகம் சுப காரியங்களை செய்யலாம்
19 7 திங்கள் உத்திரட்டாதி பகல் 12.30 மணி வரை பிறகு ரேவதி சதுர்த்தி சித்த யோகம் சதுர்த்தி விரதம்
20 8 செவ்வாய் ரேவதி பகல் 12.30 மணி வரை பிறகு அசுவினி பஞ்சமி சித்த யோகம் சுப காரியங்களை தவிர்க்கவும்
21 9 புதன் அசுவினி பகல் 12.00 மணி வரை பிறகு பரணி சஷ்டி மரண/சித்த யோகம் சஷ்டி விரதம்
22 10 வியாழன் பரணி பகல் 11.05 மணி வரை பிறகு கிருத்திகை சப்தமி சித்த/மரண யோகம் கார்த்திகை விரதம்
23 11 வெள்ளி கிருத்திகை காலை 09.55 மணி வரை பிறகு ரோகிணி அஷ்டமி சித்த/மரண யோகம் சுப காரியங்களை தவிர்க்கவும்
24 12 சனி ரோகிணி காலை 08.30 மணி வரை பிறகு மிருகசீரிஷம் நவமி அமிர்த/சித்த யோகம் சுப காரியங்களை தவிர்க்கவும்
25 13 ஞாயிறு திருவாதிரை தசமி மாலை 5.05 மணிக்கு மேல் ஏகாதசி சித்த யோகம் சுப காரியங்களை செய்யலாம்
26 14 திங்கள் புனர்பூசம் பிற்பகல் 2.45 மணி வரை ஏகாதசி பிறகு துவாதசி அமிர்த/சித்த யோகம் சர்வ ஏகாதசி
27 15 செவ்வாய் அதிகாலை 04.27 வரை புனர்பூசம் பிறகு பூசம் பிற்பகல் 12.56 மணி வரை துவாதசி பிறகு திரயோதசி சித்த யோகம் வளர்பிறை பிரதோஷம்
28 16 புதன் அதிகாலை 02.35 வரை பூசம் பிறகு ஆயில்யம் காலை 10.51 மணி வரை திரயோதசி பிறகு சதுர்த்தசி சித்த யோகம்
மார்ச்

1

17 வியாழன் அதிகாலை 01.12 வரை ஆயில்யம் பிறகு மகம் காலை 08.43 மணி வரை சதுர்த்தசி பிறகு பௌர்ணமி அமிர்த/சித்த யோகம் பௌர்ணமி
2 18 வெள்ளி அதிகாலை 00.04 வரை மகம் பிறகு பூரம்(இரவு 11.14 வரை) அதன் பிறகு உத்திரம் காலை 07.00 மணி வரை பௌர்ணமி பிறகு பிரதமை சித்த யோகம்
3 19 சனி இரவு 10.48 வரை உத்திரம் பிறகு அஸ்தம் காலை 04.56 மணி வரை பிரதமை பிறகு துவிதியை மரண யோகம்
4 20 ஞாயிறு இரவு 10.46 வரை அஸ்தம் பிறகு சித்திரை காலை 04.28 மணி வரை துவிதியை பிறகு திருதியை அமிர்த/சித்த யோகம்
5 21 திங்கள் இரவு 11.15 வரை சித்திரை பிறகு சுவாதி காலை 03.55 மணி வரை திருதியை பிறகு சதுர்த்தி சித்த/அமிர்த யோகம் சங்கடஹர சதுர்த்தி
6 22 செவ்வாய் சுவாதி காலை 03.54 மணி வரை சதுர்த்தி பிறகு பஞ்சமி சித்த/மரண யோகம்
7 23 புதன் அதிகாலை 01.12 வரை சுவாதி பிறகு விசாகம் காலை 04.21 மணி வரை பஞ்சமி பிறகு சஷ்டி சித்த யோகம் சஷ்டி
8 24 வியாழன் அதிகாலை 01.38 வரை விசாகம் பிறகு அனுஷம் காலை 04.20 மணி வரை சஷ்டி பிறகு சப்தமி சித்த யோகம்
9 25 வெள்ளி அதிகாலை 03.36 வரை அனுஷம் பிறகு கேட்டை காலை 06.56 மணி வரை சப்தமி பிறகு அஷ்டமி மரண/அமிர்த யோகம் அஷ்டமி
10 26 சனி அதிகாலை 05.49 வரை கேட்டை பிறகு மூலம் காலை 08.40 மணி வரை அஷ்டமி பிறகு நவமி சித்த யோகம் நவமி
11 27 ஞாயிறு காலை 08.23 வரை மூலம் பிறகு பூராடம் காலை 10.39 மணி வரை நவமி பிறகு தசமி அமிர்த/சித்த யோகம்
12 28 திங்கள் காலை 11.56 வரை பூராடம் பிறகு உத்திராடம் பிற்பகல் 11.56 மணி வரை தசமி பிறகு ஏகாதசி சித்த/மரண யோகம்
13 29 செவ்வாய் அதிகாலை 01.23 வரை உத்திராடம் பிறகு திருவோணம் பிற்பகல் 11.56 மணி வரை ஏகாதசி பிறகு துவாதசி சித்த யோகம் ஏகாதசி
14 30 புதன் பிற்பகல் 03.44 வரை திருவோணம் பிறகு அவிட்டம் மாலை 04.49 மணி வரை துவாதசி பிறகு திரயோதசி சித்த/மரண யோகம் தேய்பிறை பிரதோஷம்

 

இதையும் படிக்கலாமே:
மாசி மாத ராசி பலன் 2018

இந்த வருடம் மாசி மாதம் இரண்டாம் தேதி புதன் கிழமை திருவோணம் வருகிறது. அந்த நன்னாளில் பெருமாளுக்கு விரதம் இருந்தால் நல்ல பலன்களை பெறலாம். இதை சரவண விரதம் என்றும் கூறுவதுண்டு.

இந்த வருடம் மாசி மாதம் மூன்றாம் தேதி வியாழன் கிழமை அமாவாசை வருகிறது. அந்த நாளில் நமது முன்னோர்களை மகிழ்விக்கும் வகையில் தர்ப்பணம் செய்வது போன்ற செயல்களை செய்யலாம்.

இந்த வருடம் மாசி மாதம் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பிரதமை வருகிறது. அந்த நாளில் சுபகாரியங்களை நாம் தவிர்ப்பது நல்லது.

இந்த வருடம் மாசி மாதம் ஐந்தாம் தேதி சனிக்கிழமை மூன்றாம் பிறையாகும். இந்த பிறை சந்திரனையே பரமசிவன் தன் தலையில் சூடி உள்ளார் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். மூன்றாம் பிறையை தரிசிப்பவர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வருடம் மாசி மாதம் 17 ஆம் தேதி பௌர்ணமி மற்றும் மாசி மகம் வருகிறது. அதோடு ஹோலி பண்டிகையும் அன்று தான் வருகிறது.

தமிழ் பஞ்சாங்கம் 2018 பற்றிய குறிப்புகளை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -