அட மசாலா பால் போடுவது இவ்வளவு ஈஸியான வேலையா? இது தெரியாமல் இவ்வளவு நாள் கடையில் காசு கொடுத்து வாங்கி குடிச்சோமே.

masla-milk
- Advertisement -

எல்லா இடங்களிலும் சுவையான சூப்பரான ஆரோக்கியம் தரும் மசாலா பால் கிடைக்காது. சில பேருக்கு மசாலா பால் குடிக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த மசாலா பாலை நம்முடைய வீட்டிலேயே செய்யலாம். எளிமையான ரெசிபி. இதற்கு தேவையான பொருட்களை மட்டும் முன்பாகவே வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டால் போதும். பால் இருந்தால் போதும். நம்முடைய வீட்டிலேயே மசாலா பாலை போட்டு சுடச்சுட குடித்து என்ஜாய் பண்ணலாம். லேசாக ஜில்லுனு காற்று வீசும் சாயங்கால நேரத்தில் சூடான மசாலா பால், மனதிற்கும் உடம்பிற்கும் சூப்பரான புத்துணர்ச்சியை கொடுக்கும்.

சூடான மசாலா பால் செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் முந்திரி பருப்பு 6, பாதாம் பருப்பு 6, பட்டை 1/2 இன்ச், லவங்கம் 2, ஏலக்காய் 2, மிளகு 5, இந்த பொருட்களை எல்லாம் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

இதை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். தேவை என்பவர்கள் இதில் சிறிதளவு குங்கும பூவை சேர்த்து கூட அரைத்துக் கொள்ளலாம். குங்குமப்பூ உங்கள் விருப்பம் தான். இருந்தால் சேர்க்கலாம். இல்லை என்றால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 பெரிய டம்ளர் அளவு பால் ஊற்றி நன்றாக சூடு செய்யவும். பால் பொங்கி வந்தவுடன் சர்க்கரை 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், நாம் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பொடியை போட்டு பாலை இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பால் லேசாக திக்காகி வரும். அப்போது சுடச்சுட இந்த பாலின் மேலே துருவிய பாதாம் பிஸ்தா தூவி அப்படியே கப்பில் ஊற்றி பரிமாறி குடித்தால் இதன் ருசி அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை பனங்கற்கண்டு சேர்த்து குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும். இதேபோல பொடியை கொஞ்சம் அதிக அளவில் வறுத்து பொடி செய்து பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த கட்லெட்டை செய்ய அடுப்பே பற்றவைக்க வேண்டாம். முழு ஆரோக்கியமும் கிடைக்க இப்படியும் ரெசிபி இருக்கு தெரிஞ்சுக்கோங்க.

இந்த பால் நாவிற்கு ருசி தருவதோடு மட்டுமல்லாமல் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கும். நிறைய இடங்களில் மசாலா பால் கிடைக்கும். ஆனால் அது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பது நமக்கு தெரியாது. நம் கையாலேயே பருப்பு வகைகளை அரைத்து இப்படி பாலாக குடிக்கும்போது மனதிற்கு ஒரு நிறைவு கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாலை தாராளமாக குடிக்கலாம். ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -