இந்த மசாலா அரைத்து ஊற்றி ஒரு முறை மஷ்ரூம் குருமா வைத்து தான் பாருங்களேன். இதன் சுவைக்கு உங்கள் நாக்கு அடிமை.

gravy
- Advertisement -

எல்லோர் வீட்டிலும் தான் மஷ்ரூம் குருமா வைப்போம். ஆனால் மஷ்ரூம் குருமாவை கொஞ்சம் வித்தியாசமான முறையில், மசாலாவை வித்தியாசமாக அரைத்து ஊற்றி இப்படி வைத்து பாருங்கள். சூப்பரா இருக்கும். பரோட்டா சப்பாத்தி இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைட் டிஷ் இது. கொஞ்சம் வித்தியாசமாக இந்த மஷ்ரூம் குருமாவுடன் கொஞ்சம் பச்சை பட்டாணியை சேர்க்கப் போகின்றோம். சரி நேரத்தைக் கடத்தாமல் இந்த குருமா ரெசிபியை பார்க்கலாம் வாங்க.

mushroom1

முதலில் 200 கிராம் அளவு காளான் எடுத்து சுத்தமாக கழுவி வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிரஷ்ஷான பச்சைப்பட்டாணி கிடைத்தால் அதை அப்படியே குருமா வைக்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது காயவைத்த பச்சை பட்டாணி இருந்தாலும் அதை நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் 2 விசில் வைத்து வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

tomato-chutney1

இரண்டு தக்காளி பழங்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக கிரேவிக்கு தேவையான மசாலா விழுதை அரைக்க வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 கைப்பிடி அளவு, சோம்பு 1 ஸ்பூன், பட்டை 2 இந்தப் பொருட்களையெல்லாம் எண்ணெய் ஊற்றாமல் ட்ரையாக 2 லிருந்து 3 நிமிடங்கள் வறுத்து, இதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

mushroom_3

இப்போது குருமா தாளிக்க செல்லலாம். ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக ஒரு கொத்து கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன், சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் வதக்கி அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை கடாயில் ஊற்றி நன்றாக வதக்கவேண்டும். தக்காளியின் பச்சை வாடை போகும் வரை.

gravy1

தக்காளியின் பச்சை வாடை நீங்கியதும் வெட்டி வைத்திருக்கும் காளான், பச்சை பட்டாணி இந்த இரண்டு பொருட்களையும் கடாயில் போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். கூடவே குழம்புக்கு தேவையான அளவு உப்பையும் போட்டு வதக்கவேண்டும். மஸ்ரூமில் தானாகவே தண்ணீர் விட்டு வரும். அடுத்தபடியாக 2 ஸ்பூன் தனியா தூள், 2 ஸ்பூன் மிளகாய்த் தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக இந்த கிரேவியை கலந்து விடுங்கள். கலந்து விடும் போதே நன்றாக தண்ணீர் விட்டு வரும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு ஒரு மூடி போட்டு காளானை வேகவிட வேண்டும்.

gravy2

காளான் நன்றாக வெந்து வந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை இதில் சேர்த்து கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, ஒரு ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கிரேவியை கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி சுடச்சுட சப்பாத்திக்கு பரிமாறி பாருங்கள். இதன் சுவை உங்களுக்கே புரியும்.

- Advertisement -