மாத கிருத்திகையில் இந்த 1 பொருளை வைத்து முருகனை வழிபட்டால் மண்ணும் பொன்னாகும்! தோஷங்கள், சுபகாரியத் தடைகள் விலகி, குடும்பத்தில் செல்வம் குவிய முருகனை எப்படி வழிபட வேண்டும்?

murugan-vilakku
- Advertisement -

தை கிருத்திகை, ஆடி கிருத்திகை போன்றவை கிருத்திகையில் ரொம்பவே விசேஷமான நாட்களாக கருதப்படுகிறது. சஷ்டியை போலவே கிருத்திகை நாளும் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்நாளில் முருகனை வழிபடுபவர்களுக்கு சுப காரிய தடைகள் அகலும், புத்திரப்பேறு உண்டாகும், செல்வம் சேரும், கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இந்த வகையில் மாத கிருத்திகையில் முருகனை எப்படி எளிதாக வழிபட வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

முருகப்பெருமான் வீற்றிருக்கும் கோயில்கள் எவ்வளவோ இருந்தாலும், அறுபடை கோவில்கள் ரொம்பவே பிரசித்தி பெற்றவையாக இருக்கின்றன. அதில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என்று எல்லா கோவில்களிலும் கிருத்திகை விழாக்கள் பெருமளவு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் இருப்பவர்களுக்கு நிச்சயம் அதற்கு உரிய பலன்கள் கிடைக்கும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை பக்தர்களிடையே இருந்து வருகிறது.

- Advertisement -

முக்கிய கிருத்திகை மட்டுமல்லாமல் மாதம்தோறும் வரக்கூடிய கிருத்திகை நாளில் முருகனை இப்படி வழிபட்டு வந்தால் நமக்கு சகல விதமான செல்வங்களும் சேரும், திருமண தடைகள் அகலும், செவ்வாய் தோஷம் நீங்கும், புத்திர தோஷம் மறையும், மண், பொன், மனை, சொத்து வழக்கு போன்ற விஷயங்களில் ஏற்பட்டுள்ள எத்தகைய தீராத பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்யோன்யமாக வாழ்வதற்கு கிருத்திகை விரதத்தை மேற்கொள்வது உண்டு. வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்க கிருத்திகை விரதம் கண்டிப்பாக மேற்கொள்வது நலம் தரும்.

கிருத்திகை அன்று காலையிலேயே எழுந்து முழுநேர விரதம் மேற்கொள்ள வேண்டும். அன்றைய நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, சண்முக கவசம், முருகன் மந்திரங்கள், முருகன் ஸ்தோத்திரங்கள், முருகனுடைய புராண வரலாற்று கதைகள் ஆகியவற்றை படிக்கலாம். கிருத்திகையில் ஒருமுறை முருகன் கதையை படித்தாலும் முருகனுடைய அருளை நாம் பரிபூரணமாக பெற்றுக் கொள்ளலாம் என்பது நியதி.

- Advertisement -

விரதம் இருப்பவர்கள் பொதுவாக உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். பால், பழம் சிலர் அருந்துவது உண்டு. உங்கள் உடல்நலத்திற்கு ஏற்ப விரதத்தை எப்படி கடைபிடிக்க முடியுமோ, அப்படி கடைபிடிக்க வேண்டும். உடலை வருத்திக் கொண்டு எந்த ஒரு விரதத்தையும் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. உப்பில்லா உணவை எடுத்துக் கொள்வது இந்த கிருத்திகை விரதத்தின் மிக முக்கியமான அம்சம் ஆகும். எனவே நீங்கள் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் உப்பில்லாமல் எடுத்துக் கொள்வது நல்லது. இது உயர்வான விரதமாக கருதப்படுகிறது. முருகனுக்கு சர்க்கரை பொங்கல், ரவை கேசரி போன்றவை நைவேத்தியம் படைக்கலாம். மேலும் செவ்வரளி மலர், செம்பருத்தி, செண்பகம், ரோஜா போன்ற சிவப்பு நிற மலர்களைக் கொண்டு முருகனை அலங்கரிப்பது விசேஷமானது.

மாத கிருத்திகையில் புண்ணிய ஸ்தலங்களில் நீராடுவது, முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்வது போன்றவை மேற்கொள்ளலாம். மேலும் மறுநாள் ரோகிணி நட்சத்திரம் வரையிலும் இந்த விரதத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். முருகனுக்கு தேவையான அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுப்பது அல்லது வீட்டில் பூஜை செய்பவர்கள் முருகனுக்கு உகந்த அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிலை மற்றும் வேலுக்கு பூஜை செய்வது போன்றவையும் செய்யலாம். வாழ்வில் 16 வகையான செல்வங்களையும் பெற, மன்னன் போன்ற வாழ்க்கையை வாழ கிருத்திகை விரதத்தை மேற்கொண்டால் நல்ல பலன் தரும். தொடர்ந்து 12 வருடங்கள் கிருத்திகையில் முருகனை வழிபடுபவர்களுக்கு இத்தகைய பாக்கியங்கள் கிட்டும் என்பது புராணம். எனவே இத்தகைய மாத கிருத்திகையில் முருகனை வழிபட்டு அனைவரும் பலன் பெறுவோம்.

- Advertisement -