மாதத்தின் முதல் நாளே இந்த செலவு செய்யாதீர்கள்! இப்படி செய்தால் பணம் சேரவே சேராது தெரியுமா?

day-1-cash
- Advertisement -

எப்பொழுதும் மாதத்தின் முதல் நாள் அன்று நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமும் அந்த மாதத்தின் எல்லா நாட்களிலும் பிரதிபலிக்கும் என்பார்கள். அதாவது மாதத்தின் முதல் நாளே வீட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அந்த மாதம் முழுவதும் சண்டை, சச்சரவு ஆகவே இருக்குமாம். இது போல ஒவ்வொரு விஷயத்திற்கும் மாதத்தின் முதல் நாள் என்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த விஷயங்களை எல்லாம், மாதத்தின் முதல் நாளில் செய்யாமல் இருப்பது நல்லது. அப்படி நாம் என்ன செய்யக் கூடாது? என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

money4

மாதத்தின் முதல் நாள் தான் பெரும்பாலானோர் தங்களுக்கு சம்பளமாக வருமானத்தை ஈட்டுகின்றனர். சுய தொழில் செய்பவர்களாக இருந்தாலும் கூட அன்றைய நாள் செலவை அன்றே செய்யாமல், இப்படி மாதத்தின் சம்பளமாக கணக்கு வைத்து செய்து பார்த்தால் நிறையவே மிச்சப்படுத்தலாம். தினமும் நீங்கள் உங்கள் மனைவியிடம் பணத்தைக் கொடுத்து, செலவு செய் என்றுக் கூறுவதை விட, மாதம் இவ்வளவு என்று ஒதுக்கிவிட்டு இதில் செலவு செய்ய சொன்னால் நிச்சயம் அதற்குள் செலவை அவர்கள் சாமர்த்தியமாக கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அந்த அளவிற்கு பெண்களுக்கு திறமை இருக்கிறது என்பதால் தான் பெரும்பாலும் மனைவியின் கையில் சம்பளப் பணத்தை முழுமையாக பலரும் ஒப்படைக்கின்றனர்.

- Advertisement -

மாதத்தின் முதல் நாளன்று நீங்கள் பணத்தை கட்டாயம் கடனாக எவருக்கும் கொடுக்கக் கூடாது. முதல் நாளன்று கொடுக்கப்படும் கடனானது கண்டிப்பாக திரும்ப வரவே வராது. யாராவது அவசரமாக அன்றைய நாளில் பணம் கேட்டால் நிச்சயம் அவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படுமாம். சொன்ன தேதிக்குள் அவர்களால் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விடுமாம். எனவே முதல் நாளன்று எப்பொழுதும் கடனை கொடுக்காமல் அதற்கு அடுத்த நாள் நீங்கள் கடன் கொடுக்கலாம்.

kadan

அதே போல மாதத்தின் முதல் நாள் செலவு ஆடம்பர செலவு செய்யாமல், மற்றவர்களுக்காக செலவு செய்வதும் ஒரு நல்ல முறை தான். ஒரு குடும்பத்தில் ஏதாவது ஒரு எதிர்காலம் பற்றிய திட்டமிடல் இருக்கும். சீட்டு போட்டு வைத்து இருப்பார்கள் அல்லது சேமிப்பு கணக்கு துவங்கி இருப்பார்கள் அது போன்ற சேமிப்பதற்காக ஒரு தொகையை முதல் நாளன்று நீங்கள் செலவு செய்தால் நிச்சயம் உங்களுக்கு பன்மடங்கு லாபம் பெருகும்.

- Advertisement -

அதைப் போல நீங்கள் மாதத்தின் முதல் நாள் சம்பளமாக உங்கள் கையில் ஒரு பெரிய தொகையை வாங்குகிறீர்கள் என்றால், அந்த தொகையிலிருந்து ஒரு நூற்றி ஒரு ரூபாயை மட்டும் தனியாக எடுத்து உங்கள் குல தெய்வத்திற்கு என்று சேமித்து பாருங்கள். ஒவ்வொரு மாதமும் இப்படி செய்து வர வருடம் ஒரு முறை குல தெய்வ கோவிலுக்கு சென்று அந்த பணத்தை கொண்டு செலவிட்டு வந்தால் உங்களுக்கு குலதெய்வ அருளும், அள்ள அள்ள குறையாத செல்வமும் பெருகும்.

money

பெண்கள் மாதத்தின் முதல் நாள் அன்று பிள்ளையார் சுழி போட்டு ஒரு தாளில் வரவு, செலவு கணக்கை எழுதி வைத்து வந்தால் அந்த மாதத்தில் துண்டு விழாமல் வரவு-செலவு கட்டுப்படும். எனவே மாதத்தின் முதல் நாளன்று செய்யக்கூடாத விஷயங்களை செய்யாமல், செய்ய வேண்டிய விஷயங்களை இப்படி செய்து வந்தால் கையில் இருக்கும் பணம், பை நிறைய பெருகும்.

- Advertisement -