இந்த சின்ன ஐடியா தெரிஞ்சிருந்தா இவ்வளவு நாள் அழுக்கு மெத்தையில் தூங்கி இருக்கவே மாட்டோமே! பல வருடங்களாக சுத்தம் செய்ய முடியாத மெத்தையை கூட, புது மெத்தை போல மாற்ற சூப்பரான ஐடியா.

bed
- Advertisement -

நம்முடைய எல்லோர் வீட்டிலும் கட்டில் இருக்கிறது. கட்டிலுக்கு மேலே மெத்தை இருக்கிறது. சில பேர் வீட்டில் அந்த மெத்தையை எடுத்து கொண்டு போய் மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ போட்டு வெயிலில் காய வைப்பதற்கு சௌகரியம் இருக்கும். ஆனால் சில பேர் வீட்டில் மெத்தையை காய வைக்க முடியாது. அப்படிப்பட்ட வீடுகளில், மெத்தையிலிருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசும். குறிப்பாக மழைக்காலம், குளிர் காலத்தில் இருந்து மெத்தையில் இருந்து வீசக்கூடிய துர்நாற்றம் அதிகமாக இருக்கும். இன்னும் குழந்தைகள் இருக்கக்கூடிய வீட்டில் மெத்தையிலேயே அந்த குழந்தைகள் பாத்ரூம் போகும். இப்படி எல்லா விஷயங்களும் சேர்ந்து நம்முடைய மெத்தையில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் நிறைய சேர்ந்திருக்கும். பல வருடங்களாக சுத்தம் செய்ய முடியாத மெத்தையை எளிதில் சுத்தம் செய்வதற்கு ஒரு எளிமையான வீட்டுக்குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அழுக்கு மெத்தையை சுலபமாக சுத்தம் செய்ய குறிப்பு:
முதலில் மெத்தைக்கு மேலே இருக்கும் பெட்ஷீட்டை எடுத்து துவைக்க போட்டு விடுங்கள். நீளமான குச்சி ஏதாவது இருந்தால் மெத்தையை நன்றாக அடிக்க வேண்டும். மெத்தையில் இருக்கும் தூசு தும்பு எல்லாம் வெளியேறிவிடும். அதன் பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக சமையலுக்கு பயன்படுத்தும் ஆப்ப சோடா எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ஆப்ப சோடாவை உங்களுடைய மெத்தைக்கு மேலே லேசாக தூவி விட வேண்டும். மெத்தையின் மூளை முடுக்குகளில் எல்லாம் இந்த ஆப்ப சோடா பரவி இருக்கும் அல்லவா. அதை அப்படியே மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் விட்டு விடுங்கள். உங்கள் மெத்தையில் இருக்கும் கிருமி, கெட்ட வாடை அனைத்தையும் இந்த ஆப்ப சோடா உறிஞ்சிக் கொள்ளும்.

மூன்று மணி நேரம் கழித்து இந்த ஆப்ப சோடாவை துடைத்து எடுத்து விட வேண்டும். ஒரு அழுக்கு இல்லாத பழைய துணியை எடுத்து இந்த ஆப்ப சோடா எல்லாவற்றையும் அப்படியே துடைத்து, ஒரு ஓரமாக தள்ளி ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆப்ப சோடாவை சிங்கிள் கொட்டிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் பாத்ரூமில் கொட்டிக் கொள்ளலாம். டிரைனேஜில் அடைப்பு இருந்தால் கூட அது நீங்கிவிடும்.

- Advertisement -

மொத்தமாக நான்கிலிருந்து ஐந்து ஸ்பூன் ஆப்ப சோடாவை பயன்படுத்தி உங்கள் வீட்டு மெத்தையை ஒரே ஒரு முறை இந்த முறையில் சுத்தம் செய்து பாருங்கள். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு மனநிறைவாக, மெத்தையை சுத்தம் செய்த திருப்தி நிச்சயம் கிடைக்கும். உங்களுடைய குழந்தைகள் கணவர் எல்லாம் பள்ளிக்கூடம் அலுவலகம் கிளம்பிய பின்பு இந்த குறிப்பை முயற்சி செய்யுங்கள். (ஆப்ப சோடாவை மெத்தையில் தூவிய பின்பு, கட்டாயம் மூன்று மணி நேரம் ஆவது, ஆப்ப சோடா அந்த மெத்தை மேல் இருக்க வேண்டும் அதற்காக.)

பிறகு ஒரு பெரிய துண்டு அல்லது பெட் சீட்டை வைத்து மெத்தையை நன்றாக அடித்து சுத்தம் செய்தால் அதில் அங்கங்கே மிச்சம் மீதி ஒட்டி இருக்கும் ஆப்ப சோடாவும் பறந்து கீழே விழுந்து விடும். தரையை கூட்டி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இப்போது துவைத்த பெட் கவர் போட்டுக்கோங்க. குறிப்பாக சின்ன குழந்தைகள் இருக்கக்கூடிய வீட்டில் இந்த குறிப்பை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது பயன்படுத்தி மெத்தையை சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் மெத்தையில் துர்நாற்றம் வீசாமல் இருக்கும். சில பேர் மெத்தையில் வியர்வை வாடை கூட வீசும். அந்த வாடையை எல்லாம் கூட இந்த ஆப்ப சோடா சரி செய்து விடும்.

இதையும் படிக்கலாமே: சமையல் எண்ணெயை ஒருபோதும் இப்படி பயன்படுத்தவே கூடாது. குணப்படுத்த முடியாத ஆரோக்கிய பிரச்சனை வருவதற்கு இதுவும் ஒரு காரணம். இல்லத்தரசிகள் கட்டாயம் இந்த குறிப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பிடிச்சிருந்தா ஒரே ஒருமுறை உங்க வீட்லயும் முயற்சி செய்து பாருங்கள். அழுக்கு படிந்த பெட்டில் படுத்தால் தூக்கம் கூட வராது. இந்த மாதிரி சுத்தம் செய்து விட்டு தூங்கி பாருங்க தூக்கம் உங்கள் கண்களை சீக்கிரம் தழுவும்.

- Advertisement -