சமையல் எண்ணெயை ஒருபோதும் இப்படி பயன்படுத்தவே கூடாது. குணப்படுத்த முடியாத ஆரோக்கிய பிரச்சனை வருவதற்கு இதுவும் ஒரு காரணம். இல்லத்தரசிகள் கட்டாயம் இந்த குறிப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.

oil
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு இருக்கக்கூடிய சந்தேகம் இது. அப்பளம் பொறித்தெடுத்த எண்ணெய், பூரி பொறித்தெடுத்த எண்ணெய், இப்படி ஒரு முறை காய்ச்சிய எண்ணெயை மீண்டும் காய்ச்சும் போது கேன்சர் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்போது பொறிச்ச எண்ணெயை மீண்டும் முறையாக பயன்படுத்துவது எப்படி? கடலை எண்ணெய்யாக இருந்தாலும், நல்லெண்ணெயாக இருந்தாலும், ரீபண்ட் ஆயிலாகவே இருந்தாலும் இப்போது நிறைய விலை கொடுத்து வாங்குகின்றோம். அப்பளம், உருளைக்கிழங்கு சிப்ஸ், பூரி என்று பொறித்து எடுத்தால் மீதம் எப்படியும் கால் லிட்டர் எண்ணெய்யாவது கடாயில் இருக்கும். அதை எடுத்து அப்படியே கீழே கொட்ட முடியுமா. இந்த காய்ச்சிய எண்ணெயை என்னதான் செய்வது. எல்லா இல்லத்தரசிகளுக்கும் தேவையான பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

காய்ச்சிய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது எப்படி?
ஒருமுறை பொறிப்பதற்கு பயன்படுத்திய காய்ச்சிய அந்த எண்ணெயை, மீண்டும் பொறிப்பதற்கு அதிக சூடு செய்யவே கூடாது. பொறிப்பதற்காக பயன்படுத்திய எண்ணெயில் கசடுகள் அதிகமாக இருக்கும். அந்த எண்ணெய் நன்றாக ஆரிய பின்பு ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி, பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த எண்ணெயை அதிக சூடு செய்யாமல், சட்னி தாளிப்பதற்கு, வத்த குழம்பு வைப்பதற்கு, சாம்பார், பொரியல் செய்வதற்கு என்று மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் காய்ச்சிய எண்ணெயை இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். அதற்கு மேல் படி எடுத்து வைத்து மீண்டும் சாப்பிடக் கூடாது. ஆனால் காய்ச்சிய எண்ணெயை மீண்டும் அதிகப்படியாக காய்ச்சி, மீண்டும் அப்பளம் பொரிக்க, பூரி பொரிக்க பயன்படுத்தவே கூடாது.

எண்ணெயை மீண்டும் மீண்டும் அடுப்பில் வைத்து காய்ச்சும் போது எண்ணெயில் இருக்கக்கூடிய நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பாக மாறிவிடுகிறது. இதை தான் ஆங்கிலத்தில் trans fats என்று சொல்லுவார்கள். இதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய பிரச்சனைகள் வரும். உதாரணத்திற்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய் வருவதற்கு கூட trans fats தான் காரணம் என்பது மருத்துவர்களால் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

கூடுமானவரை சமைப்பதற்கு மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்துவது ரொம்ப ரொம்ப நல்லது. கடலெண்ணெயாக இருந்தாலும் சரி, அது நல்லெண்ணெயாக இருந்தாலும் சரி. எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரித்து விடும் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்படி கடலெண்ணெயில் பொரித்த உணவு பண்டங்களை அளவோடு சாப்பிடும் போது நம்முடைய உடலுக்கு தேவையான நல்ல சத்துக்களும் கிடைக்கும்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லுவார்கள். உங்களுக்கு உடம்பில் எந்த ஒரு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையும் கிடையாது என்றால் ஒரு நாளைக்கு, ஒருவர் உணவோடு 5 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது 20 கிராம் எண்ணெயை ஒரு நாளைக்கு, சராசரியாக ஒரு சராசரி மனிதன் எடுத்துக்கொண்டால் நல்லது.

- Advertisement -

ஆனால் இன்று நிறைய பேருக்கு இருதய பிரச்சனை, கொலஸ்ட்ரால், பிபி, சுகர் என்று ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் எந்த எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த எண்ணெயை எடுத்துக் கொள்ளக் கூடாது, என்பதை மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வது நல்லது. பொறித்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தும் போது வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் இனிமேல் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் முக்கியம் என்பதை நினைவில் கொண்டு சமையல் எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே: வாஷிங் மெஷின்அதிக நாள் உழைக்கனும்னா, இதை சரியாக செய்தாலே போதும். உங்க மெஷின் எப்பவும் புதுசு போலவே இருக்கும்.

பின்குறிப்பு: அப்பளத்தை பொரிக்கும்போது முழுசாக பொறிக்காதீங்க. நான்கு துண்டுகளாக அப்பளத்தை உடைத்து குறைந்த எண்ணெயில் பொரித்து எடுத்து கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயில் அன்றைக்கே பொரியல் குழம்பு செய்து விடுங்கள். பூரியை ரொம்பவும் பெரியதாக தேய்க்காமல் மிகக் குறைந்த அளவில் தேய்த்து குறைந்த எண்ணெயில் சுட்டு எடுத்துக்கோங்க. மீதம் இருக்கும் எண்ணெயை அடுத்த இரண்டு நாட்களுக்குள் அதிக சூடு செய்யாமல் பயன்படுத்தி முடித்து விடுங்கள். மீன் பொரிப்பதற்கு தோசை கல்லில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி பயன்படுத்துங்கள். இப்படியும் ஆரோக்கியமான சமையலை செய்யலாம்.

- Advertisement -