உதாசினப்படுத்திய பும்ரா, கோலி. கண் கலங்கியபடி நகரமுடியாமல் நின்ற ரோஹித் – வைரல் வீடியோ

Bumrah

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று (24-02-2019) விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய இந்திய விளையாடத்துவங்கியது.

Toss

இந்திய அணி தனது இன்னிங்க்ஸை 20 ஓவர்களில் வெறும் 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் ராகுல் மட்டுமே அரைசதம் 50 அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பாக மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 56 ரன் குவித்தார்.

இந்த போட்டியில் 19ஆவது ஓவரை வீச பும்ரா வந்தார். அப்போது ரோஹித் அவரிடம் சில ஆலோசனைகளை வழங்கினார். ஆனால், கோலி வந்தவுடன் கோலி மற்றும் பும்ரா ரோஹித்தை கண்டும் காணாமலும் சென்றனர். இதனால் கோலி செய்வது அறியாது திகைத்து நின்றார். இவர்களின் இந்த செயல் அநாகரீகமானது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

துணைக்கேப்டன் என்ற முறையில் அவருக்கு சிறிது மரியாதை கூட தராமல் இருவரும் சென்றதால் அவர்கள் இருவரையும் ரோஹித் ரசிகர்கள் இணையத்தில் வசைபாடி வருகின்றனர். பும்ரா இந்திய அணியில் இடம் பிடிக்க முக்கிய காரணமே ரோஹித் தான். ரோஹித்தின் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் பும்ரா அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பைக்கு முன் இந்த இரண்டு வீரர்களுக்கும் அதிக வாய்ப்புகளை நானே வழங்க உள்ளேன்- கோலி ஓபன் டாக்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்