தேநீர் இடைவெளியின் போது அம்பயரிடம் விளையாடிய கோலி – வீடியோ

pant 1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (02-01-2019) சிட்னி நகரில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி துவங்கியது. தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக அகர்வால் மற்றும் ராகுல் களமிறங்கினர். இறங்கிய வேகத்திலேயே 9 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார் ராகுல்.

அதன் பிறகு புஜாராவும் அகர்வாலும் நல்ல அடித்தளத்தை அமைத்தனர். சிறப்பாக விளையாடிய அகர்வால் 77 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் பிறகு களமிறங்கினார். இந்த போட்டியில் சதமடித்து இந்த புது வருடத்தினை துவங்குவார் என்று அவரது அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், நன்றாக ஆடிக்கொண்டிருந்த கோலி 59 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.

இந்த தொடர் முழுவதுமே கோலி எதாவது செய்தால் அது பெரிதாக மாறிவிடுகிறது. கோலி தனது ரசிகர்களை சந்திப்பது, போட்டியின் இடையே வார்தைப்போரில் ஈடுபடுவது மற்றும் வெற்றிகொண்டாட்டத்தில் ரசிகர்களுடன் டான்ஸ் ஆடுவது என அவர் எது செய்தாலும் வலைத்தளங்களில் ட்ரெண்டிங் தான். இன்று கோலி தேநீர் இடைவெளியின் போது அமபயரிடம் இருந்து பந்தை பிடுங்கி பேட்டில் வைத்து விளையாடினார். அதன் வீடியோ :

இந்த வீடியோ இப்பொது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அம்பயரிடம் இருந்து பந்தை பரித்த கோலி அதை தனது பெட்டில் வைத்து விளையாடுகிறார். உடனே அம்பயர் மீண்டும் பந்தை திரும்ப வாகிக்கொள்வது போல உள்ளது அந்த வீடியோ

இதையும் படிக்கலாமே :

பிங்க் பேட் மற்றும் பிங்க் கிளவுஸ் உடன் களமிறங்கிய கோலி – உருக்கமான பின்னணி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்