மழைக்காலத்தில் ஈர துர்நாற்றத்தில் இருந்து தப்பிக்க குறிப்பு

bed
- Advertisement -

மழைக்காலம் தொடங்கி விட்டாலே வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களிலும் ஈரப்பதம் இறங்கிவிடும். எதைத் தொட்டாலும் ஜில்லுனு இருக்கும். எல்லா பொருட்களில் இருந்தும் ஒரு மாதிரி ஈர வாடை வீசும். இந்த துர்நாற்றத்தை போக்குவது அவ்வளவு சுலபமல்ல. நல்ல வெயில் அடிக்கும் வரை இந்த துர்நாற்றத்தை நாம் சமாளித்து தான் ஆக வேண்டும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்கள் வீட்டில் இருந்தால் அதிலிருந்து வெளிவர என்ன செய்யலாம். எளிமையான ஒரு வீட்டுக் குறிப்பு இதோ உங்களுக்காக.

மழைக்காலத்தில் வீசும் துர்நாற்றத்தை நீக்க வீட்டு குறிப்பு

முதலில் மெத்தை தலையணைக்கு வருவோம். பெட்ஷீட்டை எல்லாம் எடுத்து துவைக்க போட்டுட்டீங்க. அப்படி இருந்தும் மெத்தையிலிருந்தும் தலையணையிலிருந்தும் துர்நாற்றம் வீசுது என்ன செய்வது. ஒரு சின்ன கிண்ணத்தில் ஆப்ப சோடா எடுத்துக்கணும். பேக்கிங் சோடா என்று சொல்லுவோம் அல்லவா அதை 2 ஸ்பூன் எடுத்துக்கோங்க.

- Advertisement -

1/2 ஸ்பூன் வாசனை நிறைந்த முகத்துக்கு போடும் எதோ ஒரு பவுடர் போட்டு கலந்துருங்க. இந்த பொடியை சுத்தமாக தூசு தட்டிய மெத்தை மேல் அப்படியே தூவி விடுங்கள். ஒரு சல்லடையில் போட்டு சலித்து விட்டால் கூட அந்த பேக்கிங் சோடா மெத்தை முழுவதும் பரவி இருக்கும். அவ்வளவுதான். இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் அதை அப்படியே விட்டு விடுங்கள்.

இதே போல தலையணைக்கு மேலும் தூவலாம். அந்த மூன்று மணி நேரத்தில் கெட்ட வாடையை எல்லாம் இந்த ஆப்ப சோடா மாவு வெளியே எடுத்து விடும். பிறகு உங்கள் கையில் ஒரு காட்டன் துணியை வைத்து தூவிய அந்த பேக்கிங் சோடாவை எல்லாம் நன்றாக தேய்த்தபடி ஒன்றாக திரட்டி எடுத்து விடுங்கள். மெத்தையில் தலையணையில் இருக்கும் துர்நாற்றம் நீங்கும்.

- Advertisement -

அதேபோல உங்கள் டோர் மேட், துடைப்பம், இதில் எல்லாம் ஈர வாடை வீசும் போது இந்த பொடியை அப்படியே அதன் மேலே தூவி விட்டு விட்டால் அதில் இருக்கும் துர்நாற்றத்தை இந்த பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளும். வாசனை நிறைந்த எசன்ஸ் இப்போது கடைகளில் நமக்கு நிறைய கிடைக்கிறது. அதில் உங்களுக்கு பிடித்த வாசனை உள்ள எசன்ஸை வாங்கிக்கோங்க.

ஒரு சின்ன டப்பாவில் பேக்கிங் சோடாவை போட்டு, அதில் இந்த எசன்ஸ் நான்கு ஐந்து சொட்டுகள் ஊற்றி, கலந்து அந்த டப்பாவுக்கு மேலே ஒரு டிஷ்யூ பேப்பர் போட்டு, ரப்பர் பேண்ட் போட்டுக்கோங்க. அந்த பேப்பருக்கு மேலே சின்ன சின்ன ஓட்டைகளை போட்டு, இதை பீரோவில் வைத்தால் இந்த எசன்ஸ் வாசம் பீரோ முழுவதும் நிரம்பி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வாஷிங் மெஷினில் பவுடரை இப்படி போட்டு பாருங்க. பவுடர் திட்டு திட்டாக துணிகளில் ஒட்டவே ஒட்டாது.

பீரோவுக்கு உள்ளே இருக்கும் துணிகளில் ஈர கெட்ட வாடை வீசாது. செருப்பு வைக்கும் கபோர்ட்டில் இந்த டப்பாவை வைக்கலாம். பாத்ரூமில் கூட தயார் செய்த இந்த டப்பாவை வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டப்பா இருக்கும் இடத்தில் எல்லாம் ஈரவாடை வீசாது. நல்ல அந்த எசன்ஸின் வாசம் நிறைந்திருக்கும். இந்த மழைக்காலத்துக்கு இந்த வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பார்த்து பலன் பெறவும்.

- Advertisement -