வாஷிங் மெஷினில் பவுடரை இப்படி போட்டு பாருங்க. பவுடர் திட்டு திட்டாக துணிகளில் ஒட்டவே ஒட்டாது.

washing-mechine
- Advertisement -

பொதுவாகவே வாஷிங்மெஷினில் பவுடர் போட்டு துவைப்பதை விட, லிக்விட் ஊற்றி துவைப்பதுதான் நல்ல ரிசல்ட் கொடுக்கும். ஆனால், பவுடரை விட லிக்விட் பல மடங்கு விலை அதிகம். விலை அதிகமாக கொடுத்து வாங்கினாலும் அது நமக்கு நீண்ட நாட்களுக்கு வராது. சீக்கிரமே காலியாகிவிடும்.

இதையெல்லாம் சமாளிக்க பல பேர் வாஷிங்மெஷினில் பவுடரையே போட்டு துணி துவைப்பாங்க. ஆனா அந்தப் பவுடர் சில துணிகளில் அப்படியே வெள்ளை வெள்ளையாக திட்டு திட்டாக ஒட்டி இருக்கும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு எளிமையான வீட்டுக் குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

வாஷிங் மெஷினில் துணி துவைக்க டிப்ஸ்

இந்த குறிப்புக்கு நீங்கள் துணி துவைக்கும் பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு அதை ஒரு காட்டன் துணியில் வைத்து ரப்பர் பேண்ட் போட்டு இந்த முடிச்சை வாஷிங்மெஷினில் போட்டு துவைத்தால், அந்த வெள்ளை திட்டு மற்ற துணிகளில் ஒட்டாமல் இருக்கும்.

அப்படி இல்லை என்றால் பழைய ஷாக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். காலில் போடக்கூடிய சாக்ஸ் இருக்கும் அல்லவா, அதன் உள்ளே பவுடரை போட்டு அந்த ஷாக்சை ஒரு முடிச்சு போட்டு அப்படியே வாஷிங்மெஷினில் போட்டு விட்டால் அந்த பவுடர் திட்டு மற்ற துணிகளில் ஒட்டாமல் இருக்கும் இது ஒரு ஐடியா.

- Advertisement -

இரண்டாவதாக ஒரு ஐடியாவும் இருக்குது. தேவை என்பவர்கள் இதையம் பின்பற்றி பார்க்கலாம். குளிக்கின்ற சோப்பு, துணி துவைக்கும் சோப்பு, இந்த இரண்டு சோப்பையும் நன்றாக துருவி கொள்ளுங்கள். இரண்டையும் சம அளவில் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதில் கொஞ்சமாக தூள் உப்பு சேர்த்து கலந்தால், ஒரு கலவை உங்களுக்கு கிடைக்கும்.

இந்த கலவையோடு கொஞ்சமாக வாசனைக்காக ஜவ்வாதுபொடி கூட சேர்க்கலாம். இப்போது இதை பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும். ஷாக்ஸ் உள்ளே நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பொடியை தேவையான அளவு போட்டு முடிச்சாக கட்டி இதை அப்படியே வாஷிங்மெஷினில் போட்டு துணி துவைத்து பாருங்கள்.

- Advertisement -

சாதாரணமாக துணி துவைக்கும் பவுடர் போட்டு துணியை துவைப்பதை விட, இந்த மெத்தடில் துணியை துவைத்தால் துணிகளில் இருக்கும் அழுக்கும் சுத்தமாக நீங்கும். அதேசமயம் துணிகள் மிக மிக வாசமாகவும் இருக்கும். எளிதில் அழுக்கு நீங்கும். இதற்கு புது சோப்பை தான் பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது.

இதையும் படிக்கலாமே: டாய்லெடிலும் சிங்கிலும் இருக்கும் அடைப்பை நீக்க எளிமையான குறிப்பு

காலியாகும் சமயத்தில் சின்ன சின்ன துண்டு சோப்புகள் இருக்கும் அல்லவா அந்த சோப்புகளை துருவி கூட மேல் சொன்ன குறிப்பை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். இதனால் உங்களுக்கு காசு பணமும் மிச்சமாகும். துணியும் நல்லா வெளுத்த மாதிரி ஆகும். இது ஒரு எளிமையான வீட்டு குறிப்பு தான். தேவை என்பவர்கள் பின்பற்றி பார்க்கலாம். வீட்டில் பயன்படுத்தாத சாக்ஸ் இருக்கும் அல்லவா அதை நன்றாக துவைத்து பின்பு இந்த குறிப்புகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -