இந்த ஐடியா கூட நல்லதான் இருக்கு. மழைக்காலத்தில் ஜில்லுனு இருக்கும் துணியை 1 நிமிடத்தில் காயவைத்து போட்டுக் கொள்ளலாம்.

cloths
- Advertisement -

தொடர்ந்து இப்போது மழை பெய்து கொண்டே இருக்கிறது. எங்கு தொட்டாலும் ஈரப்பதம். இதில் இந்த துணியை துவைத்து காய வைப்பது இல்ல தரிசைகளுக்கு ஒரு பெரிய சவால்தான். குறிப்பாக குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு போட்டுச் செல்லும் பள்ளிச் சீருடையை (யூனிபார்ம்) துவைத்து காய வைப்பதிலும் சிரமம் தான். தினமும் அவர்கள் அதே ஆடையை பள்ளிக்கு போட்டுச் செல்ல வேண்டும் அல்லவா. இப்படிப்பட்ட துணிகளை ஒரே நிமிடத்தில் காய வைக்க என்ன வழி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கு இந்த குறிப்புகள் பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம்.

பெரும்பாலும் இப்போது நான் எல்லோர் வீட்டிலும் துணி துவைக்க வாஷிங் மெஷின் இருக்கிறது. வழக்கம் போல வாஷிங் மிஷினில் போட்டால் துணியை துவைத்து, அதுவே பிழிந்து கொடுத்து விடும். அந்த துணியை எடுத்து வீட்டிற்கு உள்ளேயே ஏதோ ஒரு இடத்தில் காய வைத்து விடுவோம். துணியில் இருக்கும் ஈரம் காய்ந்து விடும். ஆனால் அந்த ஈரப்பதம் அப்படியே இருக்கும் அல்லவா.

- Advertisement -

அடுப்பில் சமைத்து முடித்துவிட்டு கேஸ் ஆஃப் பண்ணிடுவீங்க. பர்னருக்கு மேலே கொஞ்சம் சூடு இருக்கும். அந்த சூட்டுக்கு மேலே ஒரு பெரிய தாம்பூல தட்டை எடுத்து வைத்து விடுங்கள். சில்வர் தாம்பூல தட்டு நம் வீட்டில் இருக்கும் அல்லவா. ஒரு நிமிடத்தில் அந்த சில்வர் தாம்பூல தட்டு அந்த பரனர் சூட்டிலேயே சூடாகிவிடும். ஈரப்பதமாக இருக்கும் துணிகளை அந்த தட்டின் மேல் வைத்து எடுங்கள்.

அப்படி இல்லை என்றால் தினமும் எல்லோர் வீட்டிலும் தோசை வார்போம். தோசை கல் நன்றாக சூடாக இருக்கும். அதன் மேலே ஒரு தாம்பல தட்டை வைத்து அந்த தாம்பூல தட்டு சூடானதும் அதன் மேலே ஈரப்பதமாக இருக்கக்கூடிய சின்ன சின்ன துணிகள் ஷாக்ஸ்கள் இவைகளை வைத்து எடுக்கலாம். சில கனமான துணிகளில் துர்நாற்றம் கூட வீசும் அல்லவா. அப்படிப்பட்ட துணிகளை கூட இப்படி சூடு செய்தால், அந்த நாற்றம் ஒரு நிமிடத்தில் நீங்கிவிடும்.

- Advertisement -

குறிப்பாக சின்ன பிள்ளைகள் போடக்கூடிய யூனிஃபார்முக்கு, காலில் போடும் சாக்ஸ் இவைகளை காய வைக்க இந்த குறிப்பு ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். (அடுப்பு எரியும் போதே தோசை கல்லை அதன் மேல் வைத்துவிட்டு, அதன் மேல் ஒரு தாம்பூல தட்டை வைத்து விட்டு, அந்த சூட்டில் கூட துணிகளை போட்டு எடுக்கலாம். ஆனால் அடுப்பு எரியும்போது இந்த குறிப்பை மிக மிக ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். துணி நெருப்பில் பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் தேவை.)

இதற்கு துணிகளை நாம் அயன் செய்தே போட்டுக் கொள்ளலாம் என்று சில பேருக்கு தோணலாம். ஆனால் எல்லா துணிகளையும் இப்படி தேய்த்துக் கொண்டிருப்பதை விட இந்த மெத்தட் சுலபமாக இருக்கலாம். (பெரிய ஜீன்ஸ் பேண்ட், பெட்ஷீட், இவர்களை கூட காய்ந்த பிறகு மடித்து இப்படி சூடு செய்து எடுத்தால் அந்த துணியில் சுத்தமாக இருப்பதம் இருக்காது.) குறிப்பு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -