மழைக்காலம் வந்து விட்டாலே இந்த வீட்டு வேலைகளை நினைத்து அலறும் இல்லத்தரசிகள் இந்த குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் மழை நேரத்தை ஜாலியா என்ஜாய் செய்யலாம்

- Advertisement -

மழைக்காலம் வந்து விட்டாலே நாம் சாதாரணமாக செய்யும் ஒவ்வொரு வேலையும் மிகவும் சிரமப்பட்டு தான் செய்ய வேண்டியது இருக்கும். சாதாரண நாட்களில் எவ்வளவு துணி இருந்தாலும் துவைத்து எடுத்து விடும் நாம் மழை நாட்களில் ஒன்று இரண்டு துணி சேர்ந்தால் கூட துவைப்பது எப்படி என்று கடினமாக விடும். அதே போல் சமைப்பதில் இருந்து சமையல் பொருட்கள் பாதுகாப்பது வரை ஒவ்வொன்றுமே மழை நேரங்களில் அதை கவனமாக தான் கையாள வேண்டும். அதில் ஒரு சில குறிப்புகள் தெரிந்து வைத்துக் கொண்டால் இந்த மழைக்காலத்தை ஈஸியாக சமாளித்துக் கொள்ளலாம். அப்படி மிகவும் பயனுள்ள குறிப்புகளை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும் போது அதை ஒரு கிண்ணத்தில் வைத்து ஏற்றி விட்டு கிண்ணத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி வைத்தால் ஒரு நாள் எரியக்கூடிய மெழுகுவர்த்தி இன்னும் அதிகம் எரியும்.இதனால் பணமும் மிச்சமாகும்.

- Advertisement -

அடுத்து இந்த மழைக்காலங்களில் பாய்களில் பூஞ்சைப் போல வந்து விடும், துவைத்து காய வைக்கவும் முடியாது. துடைத்தாலும் போகாது. அதற்கு பாயை சுருட்டி வைக்கும் போது இடையில் நியூஸ் பேப்பர் விரித்து சுருட்டி வைத்தால் பூஞ்சை பிடிக்கவே பிடிக்காது. ஈரத்தை நியூஸ் பேப்பர் உறிந்து கொள்ளும்.

பீரோக்களில் துணிகளை வைத்திருக்கும் போது மழைக்காலத்தில் அங்குமே கூட ஈரப்பதம் இருப்பது போல தோன்றும். அந்த ஈரத்தை உறிஞ்சுவதற்கு சாக்பீஸ்களை வாங்கி நாலைந்து ஒன்றாக சேர்த்து ரப்பர் பேண்ட் போட்டு கட்டி ஆங்காங்கே வைத்து விட்டால், இந்த சாக்பீஸ் ஈரப்பதத்தை புரிந்து கொள்ளும். மழைக்காலத்தில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும் இதனால் பல வியாதிகள் நம்மை தாக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. இதிலிருந்து நம்மையும் குழந்தைகளையும் காக்க மாலை நேரத்தில் கட்டாயம் சாம்பிராணி போடுங்கள். அதை போடும் போது கொஞ்சம் பூண்டு தோலை சேர்த்துக் கொண்டால் அதன் வாடைக்கு பூச்சிகள், கொசு எதுவும் வராது அது மட்டுமல்லாமல் அந்த பூண்டு புகையானது நம் உடலுக்கும் நன்மை தரும்.

- Advertisement -

மழைக்காலத்தில் மேட் அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்தால் நல்லது. அதை துவைத்து போட்டால் காயாது. இது போன்ற சமயங்களில் வீட்டில் பழைய துணிகள் இருந்தால் அதை கிழித்து நான்காக மடித்து நான்கு முளையிலும் ஜம் கிளப் போட்டு பாத்ரூம் வாசல் போன்ற இடங்களில் போட்டு விடலாம். ஏனென்றால் இந்த இரண்டு இடங்களிலும் தான் ஈரம் அதிகம் இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று கூட என்று மாற்றிக் கொள்ளலாம் அதன் பிறகு ஜம் கிளிப்பை எடுத்து விட்டு துவைத்து விட்டு துவைத்து கொள்ளுங்கள்.இந்த துணி மெலிதாக இருக்கும் அதனால் உங்களுக்கு காய வைக்க சிரமமும் இருக்காது.

இப்படி உங்களிடம் பழைய துணிகள் எதுவும் இல்லை மேட் தான் யூஸ் பண்ண வேண்டும் என்றால் அந்த மேட்டிற்கு அடியில் நியூஸ் பேப்பர் அல்லது ஏதாவது ஒரு கார்ட்போர்ட் போட்டு வைத்து விடுங்கள். ஈரம் அனைத்தையும் அந்த கார்ட்போர்ட் எடுத்துக் கொள்ளும் சீக்கிரத்தில் மேட்டு ஈரமாகாமல் இருக்கும்.

- Advertisement -

மழை நேரத்தில் சாதம் வடித்து மீந்து விட்டால் அதை அடுத்த நேரம் சாப்பிட முடியாது. சூடாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும் இது போன்ற சமயங்களில் தண்ணீர் சூடு படுத்தி அதில் சாதம் போட்டு வடிக்கும் முறை பலருக்கும் தெரியும் ஆனால் இதில் சிலர் அதை சாதத்தை குழைய விட்டு விடுவார்கள். அப்படி சரியான முறையில் வடிக்க வராதவர்கள் இந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து மேலே ஒரே ஒரு இட்லி தட்டை மட்டும் வைத்து மிந்த சாதத்தை ஒரு கிண்ணத்தில் கொட்டி அதை இட்லி தட்டில் வைத்து வேக வைப்பது போல் ஐந்து நிமிடம் விட்டால் போதும் சாதம் நல்ல சூடாக ஆகிவிடும்.

மழைக்காலத்தில் இருப்பதிலேயே மிக மிகப் பெரிய பிரச்சனை துணியைக் காய வைப்பது தான் அந்த பிரச்சனையை சுலபமாக முடிக்க பாத்திரம் தேய்த்த பிறகு போடும் கூடை எல்லோர் வீட்டிலும் இருக்கும். அந்த கூடையில் இரண்டு பக்கத்திலும் கம்பி கட்டி வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் தொங்க விட்டு விடுங்கள். அந்த கூடையை சுற்றி உள்ள பகுதிகளில் துணி போடும் ஆங்கர்களை (20 ஆங்கர் வரை கூட போடலாம்) போட்டு அதில் உங்கள் துணிகளை காய வைத்து கொள்ளுங்கள் இடமும் அதிகம் அடை க்காது துணியும் காய்ந்து விடும்.

துணி காய வைக்க இன்னொரு ஈஸியான குறிப்பு உள்ளது. இதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும். அனைவர் வீட்டிலும் கட்டப்பை இருக்கும் அந்தப் பைக்கு இடையில் ஒரு பிளாஸ்டிக் கட்டை கொடுத்து இருப்பார்கள் நிறைய பேர் வீட்டில் பை கிழிந்த பிறகு அந்த பிளாஸ்டிக் கட்டைகள் அப்படியே தான் இருக்கும் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் இரு முனைகளில் வருவது போல் ஒரு பெரிய கயிறு எடுத்து அந்த கயிறு இருமுனைகளிலும் முடி போட்டு ஊஞ்சல் போல் கட்டி தொங்க விட்டு விடுங்கள். அதன் பிறகு அந்த பிளாஸ்டில் ஹங்கர்களை நேராக மாற்றி தொங்க விட்டால் போதும். துணி காய வைக்க சிரமமே ஏற்படாது. இதற்கு பதில் பைப் வைத்து கூட கட்டலாம்.

அடுத்தது இந்த மழை நேரத்தில் எத்தனை தீப்பெட்டி வாங்கினாலும் பற்றாது அனைத்துமே நமத்து போய்விடும் அப்படி ஆகாமல் இருக்க தீப்பெட்டி வாங்கி வந்த உடன் ஸ்வீட் பாக்ஸ் போல ஏதாவது பிளாஸ்டிக் இருந்தால் அதில் உடனே இந்த தீப்பெட்டி போட்டு வைத்துக் கொள்ளுங்கள் தேவைப்படும்போது பயன்படுத்திவிட்டு மறக்காமல் மறுபடியும் அதில் வைத்து விடுங்கள்.

இது இன்னொரு புதிய வழியும் இருக்கிறது ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் தீக்குச்சிகள் அனைத்தையும் கொட்டிக்கொண்டு பிளாஸ்டிக் டப்பாவில் மோடியின் உள்புறம் செலோடேப் வைத்து தீப்பெட்டியில் மருந்து இருக்கும் பக்கத்தை ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் எத்தனை தீப்பெட்டி வாங்கினாலும் அதன் குச்சிகளை இப்படி கொட்டி வைத்து இது ஒன்று போதும் உங்களுக்கு எப்போதுமே தீப்பெட்டி பிரச்சனை இருக்காது. இந்த குறிப்புகள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதை பயன்படுத்தி கொள்ளுங்கள் பயன் அடையுங்கள்.

- Advertisement -