ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இப்படி சூப்பரான மீல்மேக்கர் கிரேவி செய்து பாருங்கள். உங்களை வீட்டில் எல்லோரும் புகழந்து தள்ளி விடுவார்கள்.

mealmaker
- Advertisement -

இப்போது எல்லாம் வீட்டில் பிள்ளைகளுக்கு சமைத்து பாராட்டு பெறுவது என்பது, ஏதோ பரீட்சை எழுதி ரிசல்ட்டுக்கு காத்திருப்பது போல உள்ளது. அவர்களுக்கு பிடித்த உண்ணவை சமைத்து சாப்பிட வைப்பது என்பது அத்தனை சிரமமாக உள்ளது. ஆனால் இந்த மீல்மேக்கர் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்து பாருங்கள். உங்கள் குழந்தைகள் சாப்பிட வைக்க சிரமமே இருக்காது. அவர்கள் வேண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்
மீல்மேக்கர் – ஒரு கப், பொட்டுக்கடலை – கால் கப், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ரெண்டு, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், தனியா தூள் – ஒரு டீஸ்பூன், சோம்புத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன், கரம் மசாலா – கால் ஸ்பூன், கஸ்தூரி மேத்தி – கால் ஸ்பூன், எண்ணெய் – நாலு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை – சிறிதளவு.

- Advertisement -

முதலில் மீல்மேக்கரை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு அதில் இருக்கும் நீரை எல்லாம் வடித்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு பொட்டுக்கடலை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பவுடராக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

அதே ஜாரில் மீல்மேக்கரையும் போட்டு அரைத்த பின் இரண்டையும் ஒன்றாக சேர்த்து இத்துடன் கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு வாணலியில் நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி உருட்டி வைத்துள்ள மீல்மேக்கர் உருண்டைகளை அதில் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். (இது லேசாக நிறம் மாறி வந்தால் கூட போதும் நன்றாக பொரிந்து எடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை)

- Advertisement -

பிறகு மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு பெரிய வெங்காயத்தை அரைத்து சேர்க்கவும், பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, இவை இரண்டும் நன்றாக வதக்கிய பிறகு, தக்காளியை அரைத்து சேர்த்து கொள்ளுங்கள். இதுவும் நன்றாக வதக்கிய பின் இதில் மிளகாய் தூள், தனியா தூள், சோம்புத்தூள் டீஸ்பூன், மஞ்சள் தூள், உப்பு அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கிய பின், கால் கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் அப்படியே மூடி வைத்து விடுங்கள்.

ஐந்து நிமிடம் கழித்து பொரித்து வைத்துள்ள மீல்மேக்கர் உருண்டைகளை சேர்த்து வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் வெந்தவுடன் அதல் கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி இவைகளை சேர்த்து ஒரு பத்து நிமிடம் மூடி போட்டு கொதிக்க விடுங்கள். இறக்கும் போது இரண்டு சொட்டு எலுமிச்சை பழ சாறு பிழிந்து விட்டு இறக்கி விடுங்கள். ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சுவையான மீல்மேக்கர் கிரேவி ரெடி. இந்த முறையில் கிரேவி செய்தால் நீங்கள் பூரி, சப்பாத்தியை எத்தனை செய்து அடுக்கினாலும் பாத்தாது.

- Advertisement -