மீனம் ராசியினர் மிகுந்த செல்வம் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள்

meenam-rasi

புராணங்களில் அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கும் எப்போதும் பகை இருந்து கொண்டே இருந்ததை நாம் அறிவோம். இதில் அசுரர் குலத்தின் குருவாக நவகிரகங்களில் சுக்கிர பகவானும், தேவர்களின் குருவாக பிரகஸ்பதி எனப்படும் குரு பகவானும் இருந்தனர். இதில் சுபகிரமான குரு பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஒரு ராசியாக “மீனம் ராசி” இருக்கிறது. இந்த மீனம் ராசியினர் தங்களின் வாழ்வில் மிகுதியான செல்வங்களையும், உயர்வுகளையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

guru-bagawan

ஜாதகத்தில் இருக்கும் 12 ராசிகளில் 12 ஆவதும், இறுதியான ராசியாகவும் வருவது மீனம் எனப்படும் ராசியாகும். இந்த மீனம் ராசியின் அதிபதியாக நவகிரங்களில் முழுமையான சுபகிரகம் ஆன குரு பகவான் இருக்கிறார். கல்வி, கலைகளில் மிகுந்த ஞானம் பெற்றவர்களாக மீனம் ராசியினர் இருக்கின்றனர். மற்ற எல்லா ராசியினரை விடவும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபடும், அது குறித்த ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர்களாக மீனம் ராசியினர் இருக்கின்றனர். இந்த ராசியினர் தங்களின் வாழ்வில் பல்வேறு நிலைகளிலும் மேன்மையடைய கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

மீன ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் மிகுந்த செல்வத்தையும், உயர்வுகளை பெறுவதற்கு வியாழக்கிழமைகள் தோறும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வர வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை திருச்செந்தூர், ஆலங்குடி ஆகிய கோயில்களுக்கு சென்று குரு பகவானை வழிபட வேண்டும். உங்களின் தாய் தந்தையரை வாழ்நாள் முழுவதும் உங்களுடனே வைத்து பராமரிப்பது குரு பகவானின் பூரண அருளை உங்களுக்கு பெற்று தரும்.

Guru baghavan

கோயில் சம்பந்தமான காரியங்களில் உங்களால் முடிந்த சேவைகளை செய்வதும், துறவிகளுக்கு அன்னதானம் வழங்குவதும் உங்களின் குரு தோஷத்தை போக்கும். உங்கள் கைகளால் ஆலம், அரச மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை வேதமறிந்த ஒரு பிராம்மணருக்கு ஆடைகள் தானம் செய்வது நல்லது. வலது கை மோதிர விரலில் தங்க மோதிரம் அணிந்து கொள்ளலாம். கோயில் யானைகளுக்கு வியாழக்கிழமைகளில் வாழைப்பழங்கள் உண்ண கொடுப்பது உங்களுக்கு குருவின் அனுக்கிரகம் கிடைக்கச் செய்யும்.

இதையும் படிக்கலாமே:
மகம் நட்சத்திர பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Meenam rasi pariharam in Tamil. It is also called as Jothida rasi pariharam in Tamil or Meenam rasi In Tamil or Rasi pariharam in Tamil.