மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தம் புளியோதரை ரகசியம் தெரியுமா? ஒரு முறை உங்கள் வீட்டிலும் இப்படி செய்து பாருங்கள்

puliyotharai
- Advertisement -

புளியோதரை என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவாகும். இதனை வீட்டில் செய்யும் பொழுது ஒரு வித சுவையடனும், கோவில்களில் பிரசாதமாக கொடுக்கும் புளியோதரையின் சுவை வேறு விதமாகவும் இருக்கும். கோவில்களில் கொஞ்சமாக கொடுக்கப்படும் புளியோதரை இன்னும் அதிகம் வேண்டும் என்ற அளவிற்கு சற்று அதிகமான சுவையுடன் இருக்கிறது. அதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் கொடுக்கும் புளியோதரை ஒரே பாத்திரத்தில் மோத்தமாக செய்யப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் மசாலாவினால் இதன் சுவை மிகவும் அருமையானதாக இருக்கிறது. வாருங்கள் இந்த ஒன் பாட் புளியோதரையை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Puliyotharai

தேவையான பொருட்கள்:
அரிசி – ஒரு கப், புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு, காய்ந்த மிளகாய் – 8, நல்லெண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், எள் – ஒரு ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை தண்ணீரில் ஊறவைத்து, சிறிது நேரம் கழித்து அதனை கரைத்து, வடிகட்டி அரசி அளந்த அதே கப்பின் அளவிற்கு புளிக்கரைசல் எடுத்து கொள்ள வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய்களை காம்பை கிள்ளி இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

puli1

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு குக்கரை வைத்து, மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் புளிக்கரைசலை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் மீண்டும் 2 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும். பச்சை அரிசியில் புளியோதரை செய்வதாக இருந்தால் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீரும், புழுங்கல் அரிசியாக இருந்தால் ஒரு கப் அரிசிக்கு புளி கரைசலுடன் சேர்த்து மொத்தம் மூன்று கப் தண்ணீரும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

puli-sadam4

பிறகு இவை நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கழுவி வைத்துள்ள அரிசியை இதனுடன் சேர்த்து, மூடி போட்டு மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேகவிட்டு, 7 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அனைத்துவிட வேண்டும். பச்சை அரிசியாக இருந்தால் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு, 5 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அனைக்கவேண்டும்.

puliyotharai 2

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கால் ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் எள்ளை வறுத்து கொண்டு, இவை இரண்டையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை திறந்து இந்த பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறி கொடுக்க வேண்டும்.

- Advertisement -