- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஒரு கப் மீந்த சாதம் இருந்தா அதை வெச்சி ரொம்ப டேஸ்ட்டான இந்த ஸ்நாக்ஸ் செஞ்சி...

ஒரு கப் மீந்த சாதம் இருந்தா அதை வெச்சி ரொம்ப டேஸ்ட்டான இந்த ஸ்நாக்ஸ் செஞ்சி பாருங்க. அப்புறம் உங்க வீட்ல இனி ஸ்நாக்ஸ்க்காக கடைக்கு போகவே மாட்டாங்க.

- Advertisement -

மாலை நேர சிற்றுண்டிக்கு எதுவும் இல்லை என்று நினைக்கும் பொழுது, நாம் மதியம் வடித்த சாதத்தை வைத்து சுவையான இந்த சிற்றுண்டியை செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தலாம். இதை மிகவும் எளிமையாக வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்தே செய்து விடலாம். இந்த சிற்றுண்டியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மீந்த சாதம் – 1 கப், முட்டை – 2, வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன், கோதுமை மாவு – 1 டேபிள் ஸ்பூன், துருவிய கேரட் -1கப், உப்பு – 1/4 டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

ஒரு பவுலில் மதியம் வடித்த சாதத்தை போட்டு கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதனுடன் சேர்க்க வேண்டும். பிறகு துருவி வைத்திருக்கும் கேரட்டையும் அதில் போட வேண்டும். மேலும் அத்துடன் மிளகுத் தூள், உப்பு இரண்டையும் அதில் சேர்க்க வேண்டும்.

குழந்தைகளாக இருந்தால் மிளகுத் தூள் மட்டுமே போதுமானதாக இருக்கும். பெரியவர்களாக இருந்தால் அவர்களுக்கு இதனுடன் 1/4 டீஸ்பூன் மிளகாய்த் தூளை சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் கோதுமை மாவையும் சேர்த்து கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக அடித்து கிளற வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து அதில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி அந்த தவா முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு ஸ்பூனில் நாம் அடித்து கிளறி வைத்திருக்கும் மாவை எடுத்து சிறியதாக ஊற்ற வேண்டும். ஒரு புறம் வெந்தவுடன் அதை திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஆந்திரா ஸ்பெஷல் டிபன் சாம்பார் செய்முறை

இதை மீதமான சாதத்தில் செய்த சிற்றுண்டி என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சுவையாகவும் அதே சமயம் சத்தான சிற்றுண்டி தயார்.

சற்று முன்