காலையில அவசர நேரத்துல கூட ரொம்ப ஈஸியா அட்டகாசமான ஒரு டிபன் சாம்பாரை சூப்பரா ரெடி பண்ணிடலாம். இதோ அந்த சிம்பிளான ஆந்திரா ஸ்பெஷல் சாம்பார் ரெசிபி உங்களுக்காக.

- Advertisement -

நம்முடைய உணவு கலாச்சாரத்தில் குழம்பு வகைகளில் சாம்பாருக்கு எப்பவுமே முதலிடம் தான். அதே போல் மற்ற மாநிலங்களிலும் இந்த சாம்பார் ஒரு முக்கியமான உணவாகவே கருதப்படுகிறது. இதன் செய்முறை ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தாற் போல மாறுபடும். அந்த வகையில் ஆந்திராவில் செய்யக் கூடிய ஒரு ஸ்பெஷல் சாம்பார் ரெசிபியை எப்படி செய்வது என்பதை இந்த குறிப்பில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த சாம்பார் செய்ய முதலில் 1 துண்டு மஞ்சள் பூசணிக்காவை தோல் நீக்கி சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் 10 சின்ன வெங்காயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். 2 பெரிய தக்காளியும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது சாம்பார் செய்ய முதலில் குக்கரில் கால் கப் துவரம் பருப்பை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் அரிந்து வைத்த தக்காளி, 3 பச்சை மிளகாய், 4 பல் பூண்டு 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் உப்பு, பூசணிக்காய் என அனைத்தையும் சேர்த்து பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது இந்த சாம்பாருக்கு ஒரு மசாலா அரைக்க வேண்டும். அதற்கு அடுப்பில் கடாய் சூடானதும் 1 டேபிள் ஸ்பூன் தனியா, 4 காய்ந்த மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளுங்கள் . அதன் பிறகு 1/4 டீஸ்பூன் சீரகம், 1/4 டீஸ்பூன் வெந்தயம் சேர்ந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். கடாயின் சூட்டிலே வெந்தயமும் சீரகமும் வறுபட்டு விடும். இவையெல்லாம் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதையும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்தவுடன்,கறிவேப்பிலை 2 காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்து அதுவும் பொரிந்த பிறகு, சின்ன வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். இது வதங்கும் நேரத்தில் குக்கரில் வேக வைத்த பருப்பு பூசணிக்காய் எடுத்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் ஓரளவுக்கு வதங்கிய பிறகு பருப்பை இந்த வெங்காயத்தில் ஊற்றி அரைத்து வைத்த அங்கு மசாலாவில் இருந்து 2 ஸ்பூன் மசாலாவை சேர்த்து 1/4 டீஸ்பூன் உப்பும் சேர்த்த பிறகு சாம்பாருக்கு தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: செட்டிநாட்டு ஸ்பெஷல் மிளகு தொக்கை நல்ல சுருக்குன்னு காரசாரமா இப்படி செஞ்சு வைச்சிட்டீங்கனா, பத்து நாள் ஆனாலும் கெட்டே போகாது வெச்சு சாப்பிடலாம்.

சாம்பார் நன்றாக கொதித்தவுடன் ஒரு கைப்பிடி கொத்தமல்லி பொடியாக நறுக்கி சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். நல்ல கம கம என்று வாசனையோடு சூப்பரான ஆந்திரா ஸ்பெஷல் டிபன் சாம்பார் தயார்

- Advertisement -