உங்கள் நகை திரும்ப திருப்ப அடமானம் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறதா? அப்படியானால் நகையை திருப்பும் போது இப்படி ஒரு முறை செய்து விட்டு வாங்குகள், இனி உங்கள் நகை அடமானத்திற்கு போகவே போகாது. தங்கம் வாங்கும் யோகமும் வரும்.

- Advertisement -

ஒவ்வொரு பொட்டு தங்கமும் சேர்ப்பது என்பது எத்தனை பெரிய கஷ்டம் என்று அதை பாடுபட்டு உழைத்து வாங்கும் சாதாரணமான மக்களுக்கு தான் புரியும். ஒரு சிலருக்கு ஒரு கிராம் தங்கம் இருந்தாலும் அது அவர்களுடைய சேமிப்பின் அல்லது அவர்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் சேர்க்கும் ஒரு பொருளாகவே கருதுவார்கள். அந்த அளவிற்கு தங்கமானது நம் சாதாரண வாழ்க்கையை நகர்த்த உதவும் ஒரு பெரும் ஊன்று கோலாகவே இருக்கிறது. இது சாதாரண நடுத்தர குடும்பத்தினருக்கு இந்த வார்த்தைகளின் வலி புரியும். அப்படி கஷ்டப்பட்டு, பாடுபட்டு வாங்கி சேர்க்கும் அந்த தங்கமும் சில சூழ்நிலைகளால் அடமானத்திற்கு செல்லும் போது அந்த வலியானதை வார்த்தையில் விவரிக்கவே முடியாது. அத்தனை வேதனை ஆக இருக்கும் சரி ஏதோ சூழ்நிலைக்கு வைத்து விட்டோம் என்றாலும் திருப்பிய உடனே மறுபடியும் வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காக மறுபடியும் அடமானம் செல்லும். இப்படி நீங்கள் ஒரு முறை அடமானம் வைத்த நகை உங்களிடம் வந்த பிறகு அடுத்த முறை அடமானத்திற்கு செல்ல கூடாது என்றால் அந்த நகையை திருப்பும் போது சில வழிமுறைகளை பின்பற்றி அதன்படி வாங்கினால் அது நம்மிடமே நிலைக்கும் என்று நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகிறது. அது எந்த மாதிரியான வழிமுறை நாம் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிய பதிவு தான் இது.

முதலில் நகையை நாம் எப்படி கையாளுகிறோம் என்ற ஒரு விதிமுறை உண்டு. நகையை நாம் எப்படி வேண்டுமானாலும் வைத்திருக்கக் கூடாது. ஒரு சிலர் நகைகளை கழற்றும் இடங்களில் அப்படியே வைத்து விடுவார்கள். வீட்டில் எங்கெல்லாம் தோணுகிறது அங்கே வைத்திருப்பார்கள் இன்னும் சில இடங்கள் அதாவது நகையை அக்கறை இல்லாமல் எங்காவது ஓரிடத்தில் அலட்சியமாக வைப்பது இந்த தவறை கண்டிப்பாக செய்யவே கூடாது தங்கத்தை அலட்சியம் செய்யும் போது தங்கம் நம்மிடம் கண்டிப்பாக நிலைக்காது.

- Advertisement -

சரி இப்போது நாம் அடமானத்தில் இருக்கும் நகையை எப்படி திருப்ப வேண்டும் என்று தெரிந்து கொள்ளுவோம். அடமானத்திற்கான நகையை நாம் திருப்பும் போது அதற்கான தொகையை நாம் நம் இரண்டு கைகளால் கொடுக்க வேண்டும். ஒரு கையில் பணத்தை கொடுக்கவே கூடாது இரண்டு கைகளால் அந்த பணத்தை கொடுத்து நகையை அவர்கள் திருப்பித் தரும் போதும் இரண்டு கைகளால் வாங்க வேண்டும். ஏனென்றால் நகை என்பது மகாலட்சுமியின் அம்சம். இப்படி திருப்பும் போது அவர்களிடம் இருக்கும் அந்த மகாலட்சுமி நாம் நம் வீட்டிற்கு அழைக்கும் விதமாக இப்படி செய்ய வேண்டும். இதனால் தங்கம் நம்மிடம் தங்க விருப்பப் படும் என்று சொல்லப்படுகிறது.

அப்படி திருப்பி வந்த நகையை உடனடியாக நாம் அணிந்து கொள்ளவே கூடாது திரும்ப வந்த நகையை முதலில் மஞ்சள் தண்ணீரில் அலசி, அதன் பிறகு ஒரு பேப்பரிலோ, துணியிலோ ஒரு சிறு மூட்டை போல் கட்டி கல் உப்பில் கொஞ்ச நேரம் வைத்த பிறகு, அதை எடுத்து பூஜையறையில் வைத்து விளக்கேற்றி சாமி கும்பிட்ட பிறகு தான் நீங்கள் அதை அணிய வேண்டும்.

- Advertisement -

இப்படி வாங்கிய நகைகளை நீங்கள் எடுத்து பத்திரப்படுத்தும் போது அந்த இடம் வாசம் நிறைந்தாக இருக்க வேண்டும். நாள் கிழமைகளில் சாமி கும்பிடும் அந்த நகைக்கும் ஊதுவத்தி காட்டி பூஜை செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது உங்களிடம் மேலும் நகை சேரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: இறந்து போன தாய், தந்தை கனவில் வராமல் திடீரென வருவது எதனால்? அவர்கள் கனவில் வராமல் போனதற்கு என்ன காரணம்?

இந்த முறைகளில் நகையை திருப்பி பத்திரப்படுத்தி வைக்கும் போது கண்டிப்பாக மகாலட்சுமி மனம் குளிர்ந்து உங்களிடம் நிரந்திரமாக தங்கி, நீங்கள் அந்த நகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் உங்களின் எண்ணங்களை புரிந்து உங்களிடம் தங்கம் சேரும் வாய்ப்புகளை அதிக படுத்துவாள். இனி நீங்கள் அடமானத்தில் வைத்த நகையை திருப்ப வேண்டு மென்றால் இந்த முறையில் திருப்பி பாருங்கள். மறுமுறை அந்த நகை அடமானத்திற்கு செல்லும் சூழ்நிலை ஏற்படாது. புதிதாக நகை வாங்கும் யோகமும் வரும்.

- Advertisement -