பெண்கள் மருதாணியை இப்படி இட்டுக் கொண்டால், அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பாங்க! இப்படி மருதாணி வைத்துக் கொள்ளும் பெண்கள் மகாலட்சுமி சொரூபமாகவுப் மாறிடுவாங்க!

பெண்களுக்கும், மருதாணி இலைக்கும், புராண காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்பு உண்டு. நம்முடைய புராண கதையில் சீதாதேவி, இராவணனிடம் சிறைப்பட்டிருந்த பொழுது, தன்னுடைய கஷ்டத்தை, தன் அருகில் இருக்கும் மருதாணி செடியிடம் தான் சொல்லி, தன்னுடைய துயரத்தை போக்கி கொள்வார்கள், என்றும் சீதாதேவியின் கஷ்டத்தை அந்த மருதாணி செடி தான் பொறுமையாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கேட்டு, சீதாதேவியின் துயரத்தை பகிர்ந்து கொண்டதாகவும் கதைகள் உள்ளது.

maruthani2

தன் துயரத்தை கேட்டுக்கொண்டிருந்த மருதாணி செடி செடிக்கு ஏதாவது வரம் அளிக்க வேண்டுமென்று சீதாதேவி நினைத்தார்கள். வரத்தை வழங்குமாறு ராமரிடம் பணிவோடு கேட்டுக் கொண்டார்கள். ராமரும் அப்படியே ஆகட்டும் என்ற படி, மருதாணி செடியிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்! அதற்கு அந்த மருதாணி செடி ‘என்னுடைய இலைகளை பறித்து, எந்தப் பெண் தன்னுடைய கையில் வைத்துக் கொண்டாலும், அவர்களுடைய மனது எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அவர்களுடைய வீட்டில் கஷ்டமே வரக்கூடாது.’ என்றவாறு சொல்லி, அந்த மருதாணி செடி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இடமிருந்து இப்படிப்பட்ட வரத்தைப் பெற்றுக் கொண்டதாம்.

இதனால்தான், மருதாணியை எந்த ஒரு பெண் தன் கைகளில் வைத்துக் கொண்டாலும், அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும் என்று நம்முடைய முன்னோர்களாளும், நம்முடைய சாஸ்திரத்தின் மூலமும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த மருதாணி இலைகளை பெண்கள் வியாழக்கிழமை தினத்தில் தங்களுடைய கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் வெள்ளிக்கிழமை மருதாணி வைத்த கைகளை பார்க்கும் போது, பெண்களுக்கு எப்படித்தான் மனதளவில் சந்தோஷம் வருகின்றதோ தெரியாது. அந்த சந்தோஷத்தில் அவர்கள், மன நிறைவோடு வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் தீபம் ஏற்றி பூஜை செய்தால் அவர்களுடைய வீட்டில் செல்வவளம் பெருகும். வீட்டில் சந்தோசம் நிலைத்திருக்கும். நிம்மதியான குடும்ப சூழ்நிலை அமையும்.

maruthani

எந்த ஒரு வீட்டில் பெண்களின் மனசு கஷ்டப்படாமல் சந்தோஷமாக இருக்கின்றதோ, அந்த வீடு சுபிட்சம் அடையும் என்பதில் சந்தேகமே கிடையாது. எந்த ஒரு வீட்டில் பெண்கள் மன கஷ்டத்தோடு வேதனையோடு இருக்கின்றார்களோ, அந்தக் குடும்பத்தில் பிரச்சனைகள் தொடர்ந்து வரும் என்பதிலும் சந்தேகமே இல்லை. இதோடு மட்டுமல்லாமல் பெண்களின் நகக்கணுகளில் மருதாணி இருந்தால் அவர்களை கெட்ட சக்தி நெருங்கவே முடியாது. கண் திருஷ்டியும் நெருங்காது என்பதும் உண்மையான ஒரு விஷயம்தான்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்கள் கையில் மருதாணி வைப்பது, அந்த வீட்டிற்கு அதிகப்படியான நன்மையைத் தேடித் தரும். உங்களுடைய உறவினர்கள், உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற பெண் குழந்தைகளுக்கு எவரொருவர் மருதாணியை அடிக்கடி வாங்கி தானமாக கொடுத்தீர்களோ, தானமாக கொடுப்பவர்களும் நன்றாக இருப்பார்கள்.

தானமாகப் பெற்று, அதை கைகளில் இட்டுக் கொள்பவர்களுக்கும் வாழ்வு சுபிட்சம் அடையும். முடிந்தால் ஒரு சிறிய அளவு மருதாணி செடியை உங்களது வீட்டு வாசலில் வைத்து வளர்ப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
செவ்வாய்க்கிழமையில் இதை தவறியும் செய்யக்கூடாது என்று சொல்வதன் ஜோதிட காரணம் என்ன தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.