மென்மையான பட்டு போன்ற கைகளை பெற நூற்றுக்கணக்கில் செலவு செய்து மெனிக்யூர் செய்யணுமா என்ன? வீட்டிலேயே 10 பைசா செலவில்லாமல் செய்யலாமே!

- Advertisement -

மென்மையான பட்டு போன்ற கைகள் எல்லோருக்கும் அமைவது கிடையாது. இதற்காக நூற்றுக்கணக்கில் செலவு செய்து பார்லருக்கு சென்று மெனிக்யூர் செய்து தான் பஞ்சு போல பார்க்கவே அழகான கைகளை பெற முடியும் என்றில்லாமல் நம் வீட்டிலேயே எப்படி 10 பைசா செலவு செய்யாமல் சுலபமாக மெனிக்யூர் செய்து கைகளை ஆரோக்கியமாக மென்மையாக்குவது? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

மெனிக்யூர் செய்வதற்கு முன்பு உங்களுடைய கைகளில் நீங்கள் நெயில் பாலிஷ் வைத்திருந்தால் அதை ரிமூவர் கொண்டு ரிமூவ் செய்து கொள்ளுங்கள். நகங்களில் அழகான ஷேப் கிடைப்பதற்கு நகவெட்டியின் பின்புறத்தில் இருக்கக்கூடிய கோடு கோடான பகுதியை கொண்டு நகத்தின் இரு புறங்களிலும் லேசாக தேய்த்து கொடுங்கள். உங்கள் நகங்களை ‘யு’ ஷேப்பில் கொண்டு வாருங்கள். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரை சுட வைத்து எடுத்து வாருங்கள்.

- Advertisement -

கைகள் உள்ளே போகும் அளவிற்கு ஒரு பவுலில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு பாக்கெட் ஷாம்பூவை கத்தரித்து சேருங்கள். நீங்கள் தலைக்கு தேய்க்க பயன்படுத்தும் எந்த பிராண்டட் ஷாம்புவாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு கைகளை அதில் மூழ்குமாறு செய்து 10 நிமிடம் அப்படியே ஊற வையுங்கள். இப்படி செய்யும் பொழுது உங்களுடைய சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் நீங்கும். அடுத்து ஸ்க்ரப் செய்யும் பொழுது இறந்த செல்கள் வெளியேறும்.

பத்து நிமிடம் ஊற வைத்த பிறகு கைகளை வெளியே எடுத்து நன்கு துடைத்துக் கொள்ளுங்கள். ஈரம் இல்லாமல் துடைத்த பிறகு, நகங்களில் மட்டும் நீங்கள் பல் தேய்க்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை நகத்தில் மேற்புற பகுதியில் பத்து நகங்களிலும் தடவி விடுங்கள். நகத்திற்கு உள்ளே படும்படியும் தடவுங்கள். பிறகு மீண்டும் அதே தண்ணீரில் ஐந்து நிமிடம் ஊற வையுங்கள்.

- Advertisement -

பிறகு கைகளை வெளியில் எடுத்து ஒரு டூத் பிரஷ் வைத்து நகங்களை நன்கு தேய்த்துக் கொடுங்கள். நகங்களுக்கு இடுக்கில் கூட பல் குத்த பயன்படுத்தும் குச்சியை வைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதற்கு நகவெட்டியை கூட உபயோகப்படுத்தலாம். பின்னர் மீண்டும் கைகளை தண்ணீரில் கழுவி துடைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு பௌலில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு, அரை டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பயன்படுத்தி, கைகளை 10 நிமிடம் நன்கு ஸ்கிரப் செய்ய வேண்டும். லேசாக அழுத்தம் கொடுக்காமல் தேய்த்துக் கொடுப்பது தான் ஸ்க்ரப். இப்படி செய்யும் பொழுது உங்களுடைய கரடு முரடான சருமம் வெண்மையாக மாறும். கைகளில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் கூட நீங்கி கைகள் நல்ல ஒரு டைட்டனிங் பெறும். இதனால் கைகள் பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
வெயிலில் சுற்றி கைகளும், கழுத்தும் மட்டும் கருமையாக இருக்கிறதா? செலவில்லாமல் இதை செய்யுங்கள், ஒரே வாரத்தில் ரிசல்ட் தெரியும்!

கடைசியாக ஒரு முறை கைகளை நன்கு கழுவி ஒரு மெல்லிய டவல் கொண்டு துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஈரப்பதம் போனதும் காற்றில் உலர விட்டுவிட்டு ஏதாவது ஒரு மாஸ்ரைசர் லோஷன் தடவிக் கொள்ளலாம். பின் உங்களுடைய நகங்களுக்கு அழகாக நெயில் பாலிஷ் போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், ரொம்பவே சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே மெனிக்யூர் செய்தாயிற்று! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, செம ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -