மேஷ ராசிக்காரர்கள் யோகங்களை பெற செய்ய வேண்டிய பரிகாரம்

mesham-logo
- Advertisement -

பிற நாட்டு ஜோதிட கலையிலும், நமது இந்திய ஜோதிட சாத்திரத்தின் படியும் ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மனிதர்கள் அனைவருமே இந்த 12 ராசிகளுக்குள் தான் பிறக்கின்றனர். பன்னிரண்டு ராசிகளில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்பன்னிரண்டு ராசிகளில் முதலாவதாக வருவது “மேஷம்” ராசி. மேஷ ராசியின் தன்மை குறித்தும், அவர்கள் நற்பலன்களை பெறுவதற்கானான பரிகாரங்கள் குறித்தும் இங்கு காண்போம்.

mesham

மேஷ ராசி பரிகாரம்

“மேஷம்” என்றால் “கிடாய் ஆடு” என்று பொருள். கிடாய் ஆடு நவகிரகங்களில் “செவ்வாய்” பகவானுக்குரிய விலங்காகும். செவ்வாய் பகவான் போர்க்கிரகம் ஆவார். தமிழ் கடவுளான “முருகப்பெருமான்” செவ்வாய் பகவானின் அம்சம் கொண்டவர். எனவே இந்த ராசியினர் இயற்கையாகவே தைரியம் மற்றும் வீரம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். உஷ்ண உடலை பெற்றவர்கள். பல நற்பலன்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள் என்றாலும் அவர்கள் கீழ்கண்ட பரிகாரங்களை செய்வதன் மூலம், அவர்களின் வாழ்வில் எப்போதும் நன்மைகள் அதிகம் ஏற்படும்.

- Advertisement -

மேஷ ராசியினர் தங்கள் வாழ்வில் பல யோகங்கள் மற்றும் நற்பலன்களை தொடர்ந்து பெறுவதற்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டு வர வேண்டும். வாராவாரம் சென்று வழிபட முடியவிட்டாலும் மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை அல்லது முருகனுக்குரிய விஷேஷ தினங்களான கிருத்திகை, சஷ்டி தினங்களில் வழிபட்டு வர வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு தேவையான உதவிகள் செய்வதும் மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் பகவானின் அருளை பெற்று தரும்.

sevvai

ரத்தம் செவ்வாய் பகவான் ஆதிக்கம் நிறைந்ததாகும். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மேஷ ராசியினர் ரத்த தானம் செய்வது மிகவும் சிறந்ததாகும். அசைவ உணவு உண்பவராக இருந்தால் எக்காரணம் கொண்டும் இந்த ராசியினர் செவ்வாய்க்கிழமைகளில் அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. பைரவரின் வாகனமான நாய்களுக்கு உணவு, பிஸ்கட் போன்றவற்றை உணவாக கொடுத்து வந்தாலும் பைரவரின் ஆசி கிட்டும். வருடத்திற்கு ஒரு முறை நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்குரிய தலமான வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ வைத்தியநாதர் மற்றும் தையல் நாயகி அம்பாளை வழிபடுவது மேஷ ராசியினருக்குரிய சிறந்த பரிகாரம் ஆகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு கட்ட பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mesha rasi pariharam in Tamil. we explained everything about Mesha rasi and its parihram in Tamil. It is also called as Mesha rasi remedies in Tamil.

- Advertisement -