சீக்கிரம் சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாக இவற்றை செய்யுங்கள்

Bairavar
- Advertisement -

நாம் வாழும் இவ்வுலகில் பறவைகளும், விலங்குகளும் கூட தங்களுக்கென்று ஒரு வசிப்பிடத்தை ஏற்படுத்திக்கொள்ளும் போது, மனிதர்களும் தங்கள் குடும்பத்தோடு வசிப்பதற்கு ஒரு வீடு கட்டிக்கொள்வதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அனைவருக்குமே இந்த சொந்த வீடு கனவு நினைத்தவுடன் நிறைவேறிவிடுவதில்லை. மக்கள் அனைவரும் தங்களுக்கென்று ஒரு வீடு கட்டி வசிப்பதற்கு ஆன்மீக பெரியோர்கள் சில பரிகார முறைகளை கூறியுள்ளனர். அவற்றை மிகுந்த நம்பிக்கையுடன் செய்வதால் உங்களின் வீடு குறித்த விருப்பங்கள் நிறைவேறும். அப்பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

home

சொந்த வீடு கட்ட பரிகாரம்

சொந்த வீடு, நிலம் மற்றும் வீட்டு மனை வாங்குவதற்கு நவகிரகங்களில் “பூமிகாரகனான்” ஆகிய செவ்வாய் பகவானை செவ்வாய் கிழமைகளில் செந்நிற பூக்களை சமர்ப்பித்து, செவ்வாழைப்பழங்களை நிவேதனமாக வைத்து “ஓம் அங்காரக்காய நமஹ” என்று 108 முறை கூறி வழிபட்டு வர வேண்டும். இதே செவ்வாய் கிழமைகளிலில் முருகன் கோவிலுக்கு அதிகாலையில் சென்று முருகனுக்கு செய்யப்படும் முதல் பூஜை, அபிஷேகங்கள் செய்வதை தரிசித்து வணங்க வேண்டும்.

- Advertisement -

சொந்த இல்லம் கட்டுவதற்கு செவ்வாய் பகவானின் அருளை பெற தரமான செம்பு உலோகத்தில் ஒரு மோதிரத்தை செய்து, செவ்வாய் கிழமையன்று காலையில் செவ்வாய் பகவானை வணங்கி அணிந்து கொள்ள வேண்டும். இந்த செவ்வாய் பகவான் தான் நமது சகோதர, சகோதரிகளுக்கும் காரகனாகிறார். எனவே கஷ்டங்களில் இருக்கும் உங்கள் சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது செவ்வாய் பகவானின் நல்லருளை பெற்று தரும்.

bairavar

கங்கை, காவிரி போன்ற எந்த ஒரு புனித நதியிலும் ஒரு வெள்ளை துணியில் சிறிது அரிசி சிறிது கற்கண்டுகளை போட்டு முடிந்து, அந்த ஆறுகளில் அந்த முடிப்பை போட்டு விடுவது உங்கள் சொந்த இல்லம் கட்டுவதில் தடையாக இருக்கும் தோஷங்கள் நீங்கும். சிவனின் வடிவமானவர் தான் “பைரவ மூர்த்தி”. இவரின் வாகனமாக இருப்பது நாய். தெருவில் இருக்கும் நாய்களுக்கு உங்களால் முடிந்த போது உணவளித்து வர பைரவரின் அருள் உங்களுக்கு கிடைத்து சொந்த வீடு கட்டும் விருப்பம் நிறைவேறுவதற்கான சூழல் உருவாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
வழக்குகளில் வெற்றி பெற பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Veedu katta Pariharam in Tamil. It is also called as Sondha veedu vanga pariharam in Tamil.

- Advertisement -