Astrology : மேஷம் ராசியினர் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கான எளிய பரிகாரங்கள்

அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். அந்த வகையில் மேஷம் ராசியினர் எப்போதும் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கான பரிகாரங்கள் இதோ

mesham
- Advertisement -

நமது இந்திய ஜோதிட சாத்திரத்தின் படியும் ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மனிதர்கள் அனைவருமே இந்த 12 ராசிகளுக்குள் தான் பிறக்கின்றனர். பன்னிரண்டு ராசிகளில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்பன்னிரண்டு ராசிகளில் முதலாவதாக வருவது “மேஷம்” ராசி. இந்த மேஷ ராசியின் எப்போதும் நன்மையான பலன்களையும், அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கான எளிய பரிகார முறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

mesham-logo

மேஷம் என்பது நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்குரிய ராசியாகும். எனவே இந்த ராசியினர் இயற்கையாகவே உஷ்ண உடலை பெற்றவர்களாகவும், வீரம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். மேஷ ராசியினர் தங்கள் வாழ்வில் ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் மிகச் சிறப்பான வெற்றிகளைப் பெறுவதற்கும், மிகுந்த செல்வ வளம் பெறுவதற்கும் கீழ்க்கண்ட பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.நவக்கிரக சந்நிதியில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி விளக்கேற்றி வழிபட்டு வரவேண்டும். ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற உடைகளை அணிந்து கொள்வது மேஷ ராசினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாகும்.

sevvai

ஆண்கள் செம்பு மோதிரம், வளையங்களை கையின் வலது கையில் அணிந்து கொள்வது நல்லது. மேஷ ராசியினர் தங்கள் வாழ்வில் பொருள் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடும்போது சூரியனுக்குரிய கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது நல்ல பலன்களைத் தரும். செவ்வாய் பகவான் சகோதர உறவுக்கு காரகனாக இருக்கிறார். எனவே உங்களின் சகோதர உறவுகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை அவ்வப்போது செய்து வருவது செவ்வாய் பகவானின் ஆசிகளை உங்களுக்கு பெற்று தந்து உங்கள் வாழ்வில் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்படும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
பணம் வீட்டில் தங்கவில்லையா – இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mesha rasi tips in Tamil. It is also called as Mesha rasi in Tamil or Mesha rasi pariharam in Tamil or Rasi pariharam in Tamil or Mesham rasi in Tamil.

- Advertisement -