உங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா? – இதை செய்யுங்கள் நிச்சயம் பலன் உண்டு

money

பணம் எனும் செல்வத்தை தினமும் ஈட்டினாலும், அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை நமது எதிர்கால தேவைகளுக்கு சேர்த்து வைத்து கொள்வது பாதுகாப்பான வழிமுறையாகும். இன்று பெரும்பாலானோர்கள் ஏதாவது ஒரு வேலை, தொழில் செய்து சராசரியான வருமானத்தை ஈட்டினாலும் அடிக்கடி ஏதாவது ஒரு வகையில் செலவீனங்கள் ஏற்பட்டு, பணத்தை சேமிக்க முடியாத நிலை உண்டாகிறது. அப்படி அவதிப்படும் நபர்கள் இங்கு கூறப்பட்டிருக்கும் பரிகாரங்களை பின்பற்றுவதால் நன்மை உண்டாகும்.

money

எவ்வளவு பொருளீட்டினாலும் தொடர்ந்து ஏதாவது ஒரு செலவீனம் ஏற்படுவது, கடன் வாங்கும் சூழல் போன்ற பிரச்சனைகளால் தவிப்பவர்கள் ஒரு சிறிய அளவிலான மூடியுடன் இருக்கின்ற செம்பு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அப்பாத்திரம் நிரம்ப பச்சை பாசிப்பருப்பை நிரப்பி, மூடியிட்டு அசுத்தங்கள் இல்லாத தெளிந்த நீரோட்டம் இருக்கும் நீரோடையில் போட்டுவிட வேண்டும்.

உங்கள் வலது கரத்தில் எப்போதும் இருக்கும் வகையில் வெள்ளியினால் செய்யப்பட்ட வளையம் ஒன்றை அணிந்து கொள்வது சிறந்த பலனளிக்கும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வெற்றிலை மாலை அல்லது வெண்ணை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர பொருளாதார நிலையில் நல்ல மாற்றங்களை காணலாம்.

Money

நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் கோயில் மடப்பள்ளிக்கு உங்கள் சக்திக்கேற்ப மாதந்தோறும் உப்பு, கடலைப்பருப்பு, சர்க்கரை, தூய்மையான நெய், கோதுமை மாவு போன்றவற்றை தானம் செய்வது நல்லது. காய்ச்சாத பசும்பாலை உங்களுக்கு அருகாமையிலிருக்கும் ஆலமரத்தின் வேர்களுக்கு 7 நாட்களுக்கு ஊற்றி வர வேண்டும். மேற்கண்ட பரிகாரங்களை இறை நம்பிக்கையோடு, பொறுமை குணம் கொண்டு செயல்படுவதால் கூடிய விரைவில் பலன்கள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
போட்டிகளில் வெற்றி பெற தாந்திரீக பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Money loss pariharam in Tamil. It is also called as Panam sera pariharam in Tamil or Selavugal kuraiya in Tamil or Selvam thanga in Tamil or Veetil selvam thanga in Tamil.