இதுவரைக்கும் நீங்க சுவைத்திடாத வித்தியாசமான சுவையில் அதே சமயம் ஆரோக்கியம் நிறைந்த ரெசிபி தாங்க இந்த மிளகு அவல். இதை செய்ய அடுப்பே பற்ற வேண்டாம்ன்னா பாத்துக்கோங்களேன்.

milagu aval
- Advertisement -

அன்றாட வாழ்வில் அடுப்பில்லாமல் எதுவும் செய்ய முடியாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். சிலிண்டர் காலி ஆகி விட்டால், ஹோட்டலுக்கு சென்று உணவுகளை வாங்கி உண்ணும் பழக்கம் நம்மில் பல பேருக்கு உள்ளது. அவ்வாறு இல்லாமல் அடுப்பு இல்லாமலும் ஆரோக்கியமான உணவை நம்மால் செய்ய முடியம். அந்த வகையில் அடுப்பின் உதவியே இல்லாமல், சத்தான சுவை மிகுந்த மிளகு அவல் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

கெட்டி அவல் – 1/2 கிலோ, தேங்காய் – 1 மூடி, மிளகு – 10 கிராம், சீரகம் – 10 கிராம், உப்பு – தேவையான அளவு, கருவேப்பிலை – தேவையான அளவு, மல்லித்தழை – தேவையான அளவு

- Advertisement -

செய்முறை

முதலில் அவலில் இருக்கும் உமியை நீக்கி அதை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த சுத்தம் செய்த அவலை மிக்ஸியில் போட்டு ரவை போல் உடைத்துக் கொள்ள வேண்டும். இதை செய்வதற்கு அவலை அப்படியே முழுதாக கூட பயன்படுத்தலாம். பிறகு அவலை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். கழுவிய பிறகு அந்த நீரை வடிகட்டி விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் (தண்ணீர் இல்லாமல்).

பிறகு தேங்காயை நன்றாக பூ போல துருவி கொள்ள வேண்டும். அதன் பிறகு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து எடுத்து  வைத்து கொள்ள வேண்டும். அதே போல் சீரகத்தையும் ஒன்றிரண்டாக உடைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி, கருவேப்பிலையை கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரை மணி நேரம் கழித்து, ஊற வைத்த அவலை எடுத்து, அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து கிளற வேண்டும். பிறகு நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை அதில் சேர்த்து கலக்க வேண்டும்.  அவலும், தேங்காயும் நன்றாக கலந்த பிறகு, அதில் நாம் ஏற்கனவே ஒன்று இரண்டாக உடைத்து வைத்திருக்கும் மிளகையும், சீரகத்தையும் சேர்த்து அவற்றை நன்றாக கிளற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கோதுமை ரவை கஞ்சி செய்முறை

இவை அனைத்தும் நன்றாக கலந்த பிறகு, அதில் கருவேப்பிலை மற்றும் மல்லித் தழைகளை போட்டு கிளற வேண்டும். இப்பொழுது சுவையான மிளகு அவல் தயாராகி விட்டது. குழந்தைகளுக்கு இன்னும் கூட ஆரோக்கியமாய் குடுக்க நினைத்தால் கடைசியாகி கொஞ்சம் முந்திரி கூட சேர்த்து கொள்ளலாம். சத்தான இந்த மிளகு அவலை ரொம்பவே வித்தியாசமாக அதுவும் அடுப்பின்றி சமைத்து உண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

- Advertisement -