- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்செட்டிநாட்டு ஸ்பெஷல் மிளகு தொக்கை நல்ல சுருக்குன்னு காரசாரமா இப்படி செஞ்சு வைச்சிட்டீங்கனா, பத்து நாள்...

செட்டிநாட்டு ஸ்பெஷல் மிளகு தொக்கை நல்ல சுருக்குன்னு காரசாரமா இப்படி செஞ்சு வைச்சிட்டீங்கனா, பத்து நாள் ஆனாலும் கெட்டே போகாது வெச்சு சாப்பிடலாம்.

- Advertisement -

உணவு வகைகளில் செட்டிநாடு உணவுகளுக்கென்று எப்பொழுதுமே ஒரு தனி ருசி உண்டு. செட்டிநாடு சமையல்கள் எப்போதும் காரசாரமாகவும் அதிக ருசியுடனும் இருக்கும். எத்தனை ருசிக்கு காரணம் அவர்கள் சமையலில் சேர்க்கும் மசாலா பொருட்கள் தான். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவிலும் செட்டிநாடு ஸ்டைலில் சூப்பரான ஒரு மிளகு தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி இந்த மிளகு தொக்கு பத்து நாள் ஆனாலும் கூட கெட்டி போகாது. வெளியூர் பிராயணங்களின் போது எடுத்து செல்ல ஒரு அருமையான உணவாக இதை செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

மல்லி – 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு – 1டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 1 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 3, சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், கருவேப்பிலை – 1கொத்து, புளி – 1 சின்ன எலுமிச்சை பழ அளவு, நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், கடுகு -1/4 டேபிள் ஸ்பூன், உளுந்து – 1/4 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் – 1சிட்டிகை, சின்ன வெங்காயம் – 10, மஞ்சள் தூள் -1 1/4 ஸ்பூன், கல் உப்பு – 1/2 டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

முதலில் இந்த தொக்கிற்கு தேவையான மசாலாவை வறுத்து அரைத்துக் கொள்வோம். அதற்கு அடுப்பில் பேனை வைத்து அதில் மல்லி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, வர மிளகாய், சீரகம் மற்றும் கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இதில் சீரகம் கருகி விடாமல் வறுக்க வேண்டும்.

இவை அனைத்தையும் நன்றாக வறுத்த பிறகு ஆற வைத்து கொள்ள வேண்டும். அடுத்து அதே பேனை வைத்து தேங்காய் துருவலை மிதமான தீயில் ஈரப்பதம் போகும் வரை வறுத்து ஏற்கனவே வறுத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து ஆற வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த சமயத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் புளியை ஊற வைத்து நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது வறுத்த மசாலா பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு, எடுத்து வைத்த புளித்தண்ணீரை ஊற்றி நைசாக அரைத்து கொள்ளுங்கள்.

இப்போது குழம்பை தாளித்து விடுவோம் அதற்கு அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி (இந்த குழம்பை வெளியூருக்கு எடுத்துச் செல்வதாக இருந்தால் எண்ணெயை கொஞ்சம் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்) காய்ந்த பிறகு கடுகு, உளுந்து, பெருங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பெருங்காயம் நன்றாக பொரிந்தவுடன், அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதங்கிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதனுடன் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: 2 ஸ்பூன் சாம்பார் பொடி இருந்தா போதும் ஒரே நிமிசத்துல இட்லி தோசைக்கு இன்ஸ்டன்டா ஒரு சூப்பர் சட்னி ரெடி பண்ணிடலாம். இந்த சட்னியை எப்படி செஞ்சீங்க நீங்க சொல்லாம யாராலும் கண்டு பிடிக்கவே முடியாது.

அதன் பிறகு அதில் மஞ்சள் தூள், கல் உப்பு இரண்டையும் சேர்த்து மசாலாவின் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி அதனுடன் குழம்பு மிளகாய் பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக பிரிந்து வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைக்க கொதிக்க விட வேண்டும்.

எண்ணெய் நன்றாக பிரிந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம். சுவையான மிளகு தொக்கு தயார். இந்த தொக்கை நாம் குளிர்காலத்தில் பயன்படுத்தும் பொழுது நமக்கு ஏற்படக்கூடிய சளி தொந்தரவுகள் அனைத்தும் நீங்கும் சரி செய்யும் மருந்த குழம்பாக கூட சாப்பிடலாம்.

சற்று முன்