2 ஸ்பூன் சாம்பார் பொடி இருந்தா போதும் ஒரே நிமிசத்துல இட்லி தோசைக்கு இன்ஸ்டன்டா ஒரு சூப்பர் சட்னி ரெடி பண்ணிடலாம். இந்த சட்னியை எப்படி செஞ்சீங்க நீங்க சொல்லாம யாராலும் கண்டு பிடிக்கவே முடியாது.

garlic chutney idly
- Advertisement -

இந்த இட்லி தோசைக்கு ஏதாவது ரொம்ப சிம்பிளா அதே நேரத்துல சுவையா ஏதாவது செய்யணும்னு தோணும், அந்த நேரத்துல என்ன செய்யறதுன்னு ஒரே குழப்பமா இருக்கும். இந்த சட்னி ரெசிபி உங்களுக்கு தெரிஞ்சா போதும் அந்த கவலையை இனி உங்களுக்கு இருக்காது. இந்த சட்னி நல்ல காரசாரமா இருக்கிறதோடு, ரொம்பவும் சுவையாகவே இருக்கும். வாங்க இந்த சட்னி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பூண்டு – 10 பல், கருவேப்பிலை -1கொத்து, சாம்பார் பொடி – டீஸ்பூன், சீரக பொடி – 1 டீஸ்பூன், உப்பு -1/4 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்வதற்கு முதலில் பூண்டை தோல் உரித்து இடி உரலில் சேர்த்து பஞ்சு போல இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை மிக்ஸியில் சேர்த்து அரைக்க கூடாது. அப்படி அரைத்தால், இது பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும். சட்னியும் சரியாக வராது.

இடித்த இந்த பூண்டை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை நல்ல பொடியாக அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் சாம்பார் பொடி, சீரகப் பொடி, உப்பு என அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து தாளிப்பு கரண்டி வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக காய விடுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு இதை அப்படியே எடுத்து நாம் ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் பொடியில் ஊற்றி ஒரு முறை கலந்து விட்டால் போதும். நல்ல சுவையான இன்ஸ்டன்ட் பூண்டு சட்னி தயார்.

இதையும் படிக்கலாமே: மொறு மொறு மெதுவடை செய்முறை விளக்கம்

இதை செய்வது ரொம்ப மிக சுலபம். இதில் பூண்டு, சீரகம் எல்லாம் சேர்த்து இருப்பதால் ரொம்பவே சுவையாகவும் அதே நேரத்தில் சாம்பார் பொடி, நல்லெண்ணெய் சேர்த்து செய்வதால் வித்தியாசமாகவும் இருக்கும். இந்த சட்னி ரெசிபி உங்களுக்கு பிடிச்சி இருந்தா மிஸ் ட்ரை பண்ணி பாருங்

- Advertisement -