உங்க வீட்ல காய்கறி இல்லையா? யோசிக்காமல் 15 நிமிஷத்துல சட்டுன்னு இந்த மிளகு தொக்கு ரெடி பண்ணிடுங்க. சுட சுட எவ்வளவு சாதம் இருந்தாலும் அது ஒரு நொடியில் காலியாகிவிடும்.

mulagu-thokku
- Advertisement -

காய்கறி இல்லாத சமயத்தில் வீட்டில் இருக்கும் சில மசாலா பொருட்களை வைத்தே சூப்பரான ஒரு மிளகு தொக்கு எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிளகு, பூண்டு வெந்தயம், வரமல்லி எல்லா பொருட்களையும் சேர்த்து குழம்பு தானே வைப்போம். கொஞ்சம் வித்தியாசமாக தொக்கு போல செய்யப் போகின்றோம். அவ்வளவு தான் வித்யாசம். அந்த மிளகு பூண்டு சேர்த்த வித்தியாசமான ரெசிபியை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

milagai-chutney1

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் மிளகு – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், வரமல்லி – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். வருத்த இந்த பொருட்களோடு சேர்த்து தோல் உரித்த பூண்டுப்பல் – 20, சின்ன வெங்காயம் – 10 பல், நெல்லிக்காய் அளவு – புளி, சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும். இந்த விழுது அப்படியே இருக்கட்டும். இதை தாளித்து கொதிக்கவிட வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன் ஊற்றி, அதில் கடுகு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து, பூண்டும் வெங்காயமும் 5 நிமிடம் போல நன்றாக வதக்கவேண்டும். அடுத்தபடியாக இதில் குழம்புக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து ஒரு நிமிடம் போல வதக்கி விடுங்கள். அதன் பின்பு இறுதியாக மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் போட்டு முதலில் 2 நிமிடம் நன்றாக வதக்கி விடுங்கள்.

milagai-chutney2

அதன் பின்பு 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, இதை குழம்பை நன்றாக கலந்துவிட வேண்டும். குழம்பு தளதளவென கொதித்து வரும். மசாலா பொருட்கள் அரைக்கும்போது வெங்காயத்தையும் பூண்டையும் பச்சையோடு அரைத்து இருக்கின்றோம். அந்த பச்சை வாடை நீங்கும் வரை இந்த குழம்பு கொதிக்க வேண்டும். குழம்பு கொதித்து வந்து சுண்டி, எண்ணெய் எல்லாம் பிரிந்து வரத்தொடங்கும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு மூடி போட்டு கூட இந்தக் குழம்பை கொதிக்க வைத்துக் கொள்ளலாம். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உருண்டு திரண்டு மிளகு பூண்டு தொக்கு நமக்கு லேசாக கருப்பு நிறத்தில் கிடைத்திருக்கும். இதை அப்படியே சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுங்கள். தொட்டுக்கொள்ள ஒரு வடாம் வைத்துக்கொள்ளுங்கள்.

milagai-chutney3

அத்தனை ருசி. ஒரு குண்டான் சோறு இருந்தாலும் பத்தாது பாத்துக்கோங்க. உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியம் இது. உங்க வீட்ல வாரத்துக்கு ஒருநாள் தாராளமா செஞ்சு சாப்பிடலாம். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -