தொண்டைக்கு இதமான காரசாரமான மிளகு ரசம் இப்படி வச்சா எப்பேர்ப்பட்ட சளி, இருமலும் காணாமல் போயிடுமே! ரசம்னா இப்படித்தான் வைக்கணும்.

- Advertisement -

விதவிதமான ரச வகைகளில் மிளகு ரசம் ரொம்பவே ஆரோக்கியம் மிக்கதாக இருந்து வருகிறது. சளி, இருமல் தொந்தரவை விரட்டியடிக்க கூடிய சக்தி இந்த ஒரு மிளகு ரசத்திற்கு உண்டு. மிளகை தூக்கலாக சேர்த்து இந்த அளவுகளில் நீங்கள் ஒரு முறை ரசம் வச்சு பாருங்க இருமலும், சளியும் எங்க போச்சுன்னு உங்களுக்கே தெரியாது. சுவையான பாரம்பரிய மிளகு ரசம் ரெசிபி எளிதாக செய்வது எப்படி? என்பதை இனி பார்ப்போம் வாருங்கள்.

மிளகு ரசம் வைக்க தேவையான பொருட்கள்:
மிளகு – ஒன்றரை டேபிள் ஸ்பூன், சீரகம் – முக்கால் டேபிள்ஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – ஒன்று, பச்சை கறிவேப்பிலை – ஒரு கொத்து, பூண்டு பற்கள் – ஏழு, புளி – எலுமிச்சை பழ அளவு, பழுத்த தக்காளி பழம் – ஒன்று, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, நறுக்கிய மல்லி மற்றும் கருவேப்பிலை – சிறிதளவு.

- Advertisement -

மிளகு ரசம் செய்முறை விளக்கம்
மிளகு ரசம் செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவிற்கு மிளகு, முக்கால் ஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகு ரசம் என்பதால் மிளகை அதிகமாக சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் வாசனைக்கு வர கொத்தமல்லி எனப்படும் தனியா சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் காரத்திற்கு ஒரு வரமிளகாயை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகு காரம் தரும் என்பதால் மிளகாயை அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதனுடன் ஏழெட்டு பூண்டு பற்களை தோலுடன் அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சையாக ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி சேருங்கள். பின்னர் இதனுடன் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மிக்ஸியை இயக்கி கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு பெரிய எலுமிச்சை அளவிற்கு புளியை ரெண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் பழுத்த பெரிய தக்காளி ஒன்றை நறுக்கி சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். கரைத்த புளியை சக்கைகள் எல்லாம் நீக்கி கையில் வடித்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்போது எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு தண்ணீரை நீங்கள் ருசி பார்த்து சேர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
ஒரு கப் இட்லி மாவு இருந்த போதும். பத்தே நிமிஷத்துல மொறு மொறுன்னு நல்ல கிரிஸ்பியான உளுந்து வடை சுட சுட ரெடி ஆயிடும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பத்து கருவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் காரைத்து வைத்துள்ள ரசத்தை சேர்த்து கொதிக்க விடாமல் நுரை பொங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள். நறுக்கிய மல்லி தழையை தூவி இறக்குங்கள். சுடச்சுட காரசாரமான மிளகு ரசம் டேஸ்டியாக ரெடி! இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் எப்பேர்பட்ட சளி, இருமலும் காணாமல் ஓடிவிடும். இதே மாதிரி நீங்களும் ரசம் வச்சு பாருங்க, நீங்களும் ஆரோக்கியமாக இருக்கலாமே!

- Advertisement -