ஒரு கப் இட்லி மாவு இருந்த போதும். பத்தே நிமிஷத்துல மொறு மொறுன்னு நல்ல கிரிஸ்பியான உளுந்து வடை சுட சுட ரெடி ஆயிடும்.

- Advertisement -

நம்முடைய உணவு கலாச்சாரத்தில் இந்த வடைகளுக்கு என்று தனி இடம் உண்டு. எந்த விசேஷமானாலும் ஏதாவது ஒரு வடை கண்டிப்பாக இருக்கும். திடீரென வீட்டில் விருந்தினர் வந்து விட்டாலும் சரி, மாலை வேளையில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் சரி, இந்த வடை தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். பெரும்பாலும் கடைகளுக்கு சென்று ஒரு டீ மட்டும் குடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, சைடு டிஷ் ஆக ஒரு வடை வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு வடை என்பது நம் வாழ்வில் இணைந்து ஒன்றாகி விட்டது. அந்த வடை பல்வேறு வகைகள் உண்டு. அதில் இப்போது கொஞ்சமும் சிரமம் இல்லாமல் இட்லி மாவை வைத்தும் கூட இந்த வடையை சுட்டெடுக்கலாம் என்பதைப் சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இட்லி மாவு வடை செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி மாவு -1 கப், வெங்காயம் – 1 கப் , பச்சை மிளகாய் – 2, இஞ்சி -1 சின்னத்துண்டு, உப்பு – 1/4 டீஸ்பூன், சமையல் சோடா – 1/4 டீஸ்பூன், சீரகம் – 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லி -1கொத்து.

- Advertisement -

இட்லி மாவில் வடை செய்யும் முறை:
இந்த வடை செய்ய அதிகம் புளிக்காத இட்லி மாவு ஒரு கப் எடுத்து கொள்ளுங்கள். மாவு அதிகம் புளித்து இருந்தால் எண்ணெயும் அதிகமாக குடித்து விடும். வடையின் ருசியும் மாறி விடும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு அடி கனமான பேனை வைத்து சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து, ஒரு கப் மாவை அதில் ஊற்றி உப்பு, சமையல் சோடா, சீரகம், சேர்த்த பிறகு லேசாக கிண்டிக் கொண்டே இருங்கள். கொழுக்கட்டைக்கு மாவை கிண்டுவது போல பேனில் மாவு ஒட்டாமல் திரண்டு வரும் வரை கிண்ட வேண்டும். மாவை கிண்டும் போது கட்டிகள் சேராமல் கிளற வேண்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு பேனை மூடி போட்டு அப்படியே ஒரு ஐந்து நிமிடம் வரை விட்டு விடுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடத்தில் அடுப்பில் இருக்கும் மாவு இந்த சூட்டில் நன்றாக வெந்து இருக்கும். இப்போது வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி என அனைத்தையும் நல்ல பொடியாக அரிந்து இதில் சேர்த்து வடை மாவை பிசைவது போல் இதையும் பிசைந்து கொள்ளுங்கள். நீங்கள் அடித்து பிசையும் போது மாவு வடை சுடும் பக்குவத்திற்கு வந்து விடும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டு ஒவ்வொரு வடைகளாக போட்டு பொரித்து எடுத்து விடலாம். உளுந்த வடையை சுலபமாக சுட்டு எடுத்தாகி விட்டது.

இதையும் படிக்கலாமே: இனி கீரை வாங்கினால் இப்படி பக்கோடா செய்து கொடுத்து பாருங்கள். கீரை வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் கூட இன்னும் கொஞ்சம் இருந்தா தாங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

இதற்கென தனியாக உளுந்து ஊற வைத்து அரைத்து இனி இதற்கெல்லாம் நேரம் செலவு செய்ய வேண்டாம். ஒரு கப் மாவு இருந்தால் போதும் 10 நிமிடத்திற்கெல்லாம் வடை செய்து சாப்பிட்டு விடலாம்.

- Advertisement -