காரசாரமான கலர்ஃபுல்லான, மிளகு தக்காளி சட்னியை ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க. 5 நிமிடத்தில் இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள சூப்பர் சைட் டிஷ் தயார்.

chutney
- Advertisement -

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள வித்தியாசமான அருமையான ஒரு சட்னி ரெசிபியை தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறோம். மிக மிகக் குறைந்த பொருட்களை வைத்து குறைந்த நேரத்தில் இந்த சட்னியை அரைத்தால் போதும். தட்டில் வைத்த இட்லியும் தோசையும் காணாமல் போய்விடும். அவ்வளோ சூப்பர் சட்னி இது. நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

milagai-chutney1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ள வேண்டும். கடாய் சூடானதும், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் மிளகு – 2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் வறுபட்டு வாசம் வீசும் போது இறுதியாக 5 வர மிளகாய்களை போட்டு, மிளகாயையும் வறுத்து இந்த எல்லாப் பொருட்களையும் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய தக்காளி பழங்கள் – 4 சேர்த்து, 2 சிட்டிகை உப்பு போட்டு இந்த தக்காளியை பச்சை வாடை நீங்கும் வரை நன்றாக வதக்கவேண்டும். தக்காளி நன்றாக வதக்கிய பின்பு வதக்கிய இந்த தக்காளியையும் ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

chutney5

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து வறுத்த மிளகு வெந்தயம் வரமிளகாய் தக்காளி போட்டு சட்னிக்கு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த சட்னியை கொஞ்சம் கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த சட்னியை மிக்ஸி ஜாரில் இருந்து சிறிய பவுலுக்கு மாற்றிக்கொள்ளுங்கள். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து கொண்டால் போதும். இந்த சட்னி கொஞ்சம் கெட்டியாக தான் இருக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு உளுந்து கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து, சட்னியில் கொட்டி கலந்து பரிமாறுங்கள். அட்டகாசமான சுவை. சொல்லும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -