பாலுடன் இந்த 1 பொருளை சேர்த்து முகத்துக்கு தடவி பாருங்க ஒரே வாரத்தில் பளிச்சென்று எரியும் மின்விளக்கு போல உங்க முகம் பிரகாசமாக எரியுமே!

face-hot-milk
- Advertisement -

நம் முகம் எப்பொழுதும் பளிச்சென்று எரியும் மின்விளக்கு போல பிரகாசமாக இருக்கவே அனைவரும் விரும்புகிறோம். ஆனால் லோ வோல்டேஜ் பல்பு போல தான் என்னவோ சோர்ந்து போய் காணப்படுகிறோம். இந்த நிலையிலிருந்து மாறி சினிமாவில் வரும் ஹீரோயின் போல கண்ணாடி மாதிரி மின்னுவதற்கு பாலுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தினால் போதும். அது என்ன பொருள்? எப்படி பயன்படுத்துவது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சருமத்தில் இருக்கும் நுண்ணிய துவாரங்களுக்குள் செல்லும் அழுக்குகள் நாளடைவில் வெளிவர முடியாமல் அடைத்துக் கொள்வதற்கு காரணம் நாம் பூசும் முக பூச்சுக்கள் மற்றும் பவுடர்கள் தான். முகத்துக்கு நீங்கள் பவுடர் கூட பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. துவாரங்களை இத்துகள்கள் அடைத்துக் கொள்வதால் அழுக்குகள் வெளியேற முடியாமல் மாட்டிக் கொண்டு விடும். இதனால் சரும பிரச்சனைகள் தோன்றுகிறது.

- Advertisement -

பால் ஒரு சிறந்த க்ளன்சராக பயன்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான பொருளாக இருக்கிறது. நம் முகத்தை உள்ளிருந்தே சுத்தம் செய்து இறந்த செல்களையும் நீக்கி புத்துணர்வுடன் வைத்துக் கொள்வதற்கு தினமும் பச்சை பசும்பாலை பஞ்சில் நனைத்து முகத்தில் எல்லா இடங்களிலும் தடவி நன்கு உலர விட்டு பின்பு குளிர்ந்த நீரினால் கழுவி வரலாம்.

இளம் சூடான பால் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்பு இதை முகம் கழுத்து போன்ற பகுதிகளில் மென்மையாக தடவி மசாஜ் செய்யுங்கள். ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்து பின் அப்படியே உலர விட்டு விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்படி செய்யும் பொழுது முகத்திற்கு நல்ல ஒரு ஈரப்பதம் கிடைக்கும். மாய்ஸ்ரைஸ் செய்தது போல புத்துணர்வுடன் காணப்படும். வறண்ட தன்மையை நீக்கும். முகத்தை மிருதுவாக வைத்துக் கொள்ள உதவும். முகத்தில் இருக்கக் கூடிய பிரச்சனைகளை சரி செய்யக் கூடிய ஆற்றல் இவற்றுக்கு உண்டு இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சரும பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படும். முக சுருக்கங்களை போக்கி முகத்தை நன்கு இறுகச் செய்யும். இதனால் முகம் இளமையுடன் தோற்றம் அளிக்கும்.

இதையும் படிக்கலாமே:
என்ன செய்தாலும் தலையை விட்டு பேன் போகமாட்டேன் என்கிறதா? இத ட்ரை பண்ணி பாருங்க ஒரு பேன் கூட உங்க தலையில் இனி இருக்கவே செய்யாது!

இளம் சூடான பாலில் தேனுக்கு பதிலாக நீங்கள் மஞ்சள் தூளையும் பயன்படுத்தலாம். மஞ்சள் தூள் கால் ஸ்பூன் அளவுக்கு கலந்து முகம் முழுவதும் தடவி உலர விட்டு விடுங்கள். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் முகத்தில் இருக்கக் கூடிய சுருக்கங்கள் நீங்கி, முகம் நீண்ட காலம் இளமையுடனே தக்க வைத்துக் கொள்ள உதவும். பால் மற்றும் மஞ்சள், பால் மற்றும் தேன் இந்த இரண்டையும் உடலுக்கு உள்ளே மட்டும் அல்லாமல், உடலுக்கு வெளியேயும் இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் சரும பிரச்சனைகளை ஒழித்து, நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க முடியும்.

- Advertisement -