என்ன செய்தாலும் தலையை விட்டு பேன் போகமாட்டேன் என்கிறதா? இத ட்ரை பண்ணி பாருங்க ஒரு பேன் கூட உங்க தலையில் இனி இருக்கவே செய்யாது!

pen-lice-vasambu
- Advertisement -

தலையில் பேன் இருந்தால் தலையே வெடித்து விடும் போல நமக்கு கடுப்பாக வரும். தலையில் பேன் இருந்தால் அடிக்கடி கை தலைக்குத் தான் செல்லும். இப்படி கை எப்பொழுதும் தலையில் இருந்து கொண்டே இருப்பது அசவுகரியத்தை ஏற்படுத்தும். இந்த பேன் தொல்லையிலிருந்து எளிதாக விடுதலை கிடைக்க என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பல்வேறு தலைமுடி பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க முதலில் தலையில் இருக்கும் பேனை ஒழித்து கட்ட வேண்டும். பேன் இல்லாத தலையில் கூட திடீரென பேன் வருவதற்கு காரணம் அவர்கள் வேறு ஒரு இடத்தில் படுப்பது தான் காரணமாக இருக்கும். எப்பொழுதும் ஒரே இடத்தில் படுத்து பழகியவர்களுக்கு வேறு ஒரு இடம் அல்லது வேறு ஒரு ஊரில் போய் தங்கினால் இது போல பிரச்சனை வரும். வாரம் ஒரு முறையாவது தலையணை உறையை நீங்கள் துவைத்து பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

தலைமுடியில் இருக்கக்கூடிய பேன்களை ஒழித்துக் கட்ட வீட்டில் இருக்கக்கூடிய சிறு சிறு பொருட்கள் மட்டுமே போதும். முதலில் இதற்கு வெள்ளை மிளகை பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த பவுடரை பாலில் குழைத்து தலை முடியில் வேர்க்கால்களில் மட்டும் எல்லா இடங்களிலும் படும்படி தடவி, தலைமுடியை கொண்டை போல கட்டிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் ஊற விட்டுவிட்டு பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு அலசுங்கள். ஒரு பேன் கூட உங்கள் தலையில் இருக்காது, எல்லாமே கீழே கொட்டி விடும்.

வீட்டில் வினிகர் வைத்திருந்தால் வினிகரை தலை முழுவதும் தடவி ஒரு துண்டு போட்டு கட்டிக் கொள்ளுங்கள். அப்படியே இரவு தூங்க சென்று விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் அலசினால் தலைமுடியில் இருக்கக்கூடிய பேன்கள் ஒழியும்.

- Advertisement -

நாட்டு மருந்து கடைகளில் வசம்பு என்று கேட்டு வாங்கி கொள்ளுங்கள். வசம்பை உரலில் இட்டு இழைத்து இதை தலை முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். பின்னர் அரை மணி நேரம் கழித்து தலைக்கு அலசினால் பொடுகு, பேன் அனைத்தும் நீங்கிவிடும்.

வேப்பம்பூ அல்லது மருதாணி பூ இவைகள் கிடைத்தால் தலையில் வைத்து துணியை சுற்றி கட்டிக்கொண்டு தூங்க செல்லுங்கள். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் பேன் அனைத்தும் ஓடி விட்டிருக்கும். இதில் வேப்பம்பூ பயன்படுத்தும் போது லேசாக ஒரு நிமிடம் வாணலியில் போட்டு வறுத்து பின்னர் பயன்படுத்துங்கள்.

- Advertisement -

துளசி, கருந்துளசி கிடைத்தால் அதை நன்கு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலை முழுவதும் தடவி ஒரு பத்து நிமிடம் ஊற விட்டுவிட்டு பின்னர் ஷாம்பு பயன்படுத்தாமல் சீயக்காய் தூள் போட்டு குளித்து பாருங்கள். பேன் எல்லாம் மாயமாய் மறையும்.

இதையும் படிக்கலாமே:
ஒரு முடி கொட்டிய இடத்தில் கட்டாயம் 10 முடி வளரும். பக்காவான ஹேர் குரோத் ஐடியா இதோ உங்களுக்காக.

சீதா பழத்தில் இருக்கக்கூடிய கொட்டைகளை எடுத்து இரண்டு நாள் நன்கு காய வைத்து பவுடர் போல அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பவுடருடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தலைக்கு தடவி தூங்க செல்லுங்கள். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் தலையை அலசினால் உங்க தலையில் ஒரு பேன் கூட இனி தங்காது.

- Advertisement -