பொடுகு தொல்லையை நீக்கி, புதிய முடிகளை புதுப்பொலிவோடு வளரச் செய்யும் புதினா. தலை முடி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இதை செய்தால் போதும்.

hair7
- Advertisement -

தலைமுடியில் பேன் தொல்லை, பொடுகு தொல்லை அதிகமாக இருக்கிறது. தலையில் அரிப்பு இருக்கின்றது. இதனாலேயே தலையில் இருந்து முடி அதிகமாக உதிர்கின்றது. புதிய முடி வளர்ச்சி தடைபடுகின்றது என்பவர்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். அதிக செலவு செய்யப்போவது கிடையாது. நம் வீட்டுக்கு பக்கத்திலேயே எல்லா காய்கறி கடைகளிலும் புதினா கிடைக்கும் அல்லவா. அந்த புதினாவை வைத்து சூப்பரான ஒரு ஹேர் பேக் தயார் செய்வது எப்படி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஃபிரஷா புதினா கட்டை வாங்கி கீரைகளை தனித்தனியாக கிள்ளி வைத்துக் கொள்ளுங்கள். அந்த  புதினா கீரையை தண்ணீரில் போட்டு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகள். ஒரே ஒரு நெல்லிக்காய் இருந்தால் மட்டும் போதும். சுத்தம் செய்த புதினா இலைகளை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். கொட்டை நீக்கிவிட்டு நெல்லிக்காயை புதினாவோடு போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக இதை அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை வடிகட்டினால் பச்சை நிறத்தில் சாறு நமக்கு கிடைத்திருக்கும். இந்த சாறு போதும் நம் தலைமுடி பிரச்சனைக்கு தீர்வை சுலபமாக கொடுத்து விடும்.

- Advertisement -

இது சாறாக இருப்பதால் நம்முடைய ஸ்கேல்பில் நன்றாக இறங்கி சீக்கிரமே வேலை செய்யும். தலைமுடியில் எண்ணெய் வைத்து சிக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறை கையில் எடுத்து தலையில் போட கஷ்டமாக இருந்தால், ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஸ்கேல்பிலும் முடியின் நுனி வரையும் ஸ்பிரே செய்து, உங்கள் கையை வைத்து மசாஜ் செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு காட்டன் துணி காட்டன், பஞ்சில் இந்தச் சாறை தொட்டு உங்களுடைய ஸ்கால்ப்பில் படும்படி வைக்கலாம்.

புதினா ஒரு மூலிகை இலை என்பதால் இதை தலையில் போடுவதன் மூலம் சளி பிடிக்கும். சைனஸ் பிரச்சினை வரும் என்ற பயமும் நமக்கு தேவையில்லை. விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த இந்த நெல்லிக்காயும் நம்முடைய முடியின் வேர்க்கால்களை உறுதி செய்யும். வாரத்தில் ஒரு நாள் என்ற கணக்கில் மூன்று முறை மட்டும் இந்த குறிப்பை பின்பற்றுங்கள். படிப்படியாக பொடுகு, முடி உதிர்வு குறையும். (அதிகப்பட்சம் மாதத்தில் நான்கு நாள் இதை போடலாம்.) பிறகு தொடர்ந்து இதை பயன்படுத்த வேண்டாம். மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் தேவைப்பட்டால் இந்த பேக்கை திரும்பவும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

இந்த புதினாவை எண்ணெயில் போட்டு காய்ச்சியும் நாம் தலைமுடிக்கு தேய்த்து வரலாம். பேக்கை வாரம் ஒரு முறை தான் போடப் போகின்றோம். அதுவும் மூன்று முறை போட்டுவிட்டு நிறுத்தி விடப் போகின்றோம். பிறகு பொடுகு நம் தலையில் வராமல் இருக்க என்ன செய்வது ஒரு 100ml தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து லேசாக சூடு செய்யுங்கள். இதில் சுத்தம் செய்த புதினா இலைகள் 10 லிருந்து 15 போட்டு அடுப்பை சிம்மில் வைத்து காய வையுங்கள்.

புதினா இலையில் இருக்கும் எசன்ஸ் அந்த எண்ணெயில் இறங்கி, எண்ணெயின் நிறம் லேசாக மாறி வரும்போது, அடுப்பை அணைத்துவிட்டு, இந்த எண்ணெயை நன்றாக ஆரவைத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது. தலைக்கு குளிப்பதற்கு முன்பு பேக் போடாத நாட்களில் இந்த எண்ணெயை தலையில் வைத்து மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தாலும், பொடுகு பிரச்சனை வராது முடி உதிர்வு குறையும். குறிப்பு படித்தவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -