உங்க வீட்டுல இந்த தவறுகளை நீங்க செய்தால் கட்டாயம் கஷ்டம் உங்களை விடாமல் பிடித்துக் கொண்டுதான் இருக்கும்.

- Advertisement -

நம்முடைய வீட்டில் செய்யக்கூடாத தவறுகள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கின்றது. அதில் சில வகையான தவறுகளை தெரியாமல் நாம் செய்வதால், அதற்கான தண்டனை பெரியதாக கிடைக்காது. ஆனால் சில தவறுகளை நாம் தெரிந்தே செய்து வருகின்றோம்.  அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் தண்டனை நிச்சயம் அதிகம்தான் இருக்கும். அந்த வரிசையில் நம்முடைய வீட்டில் தினந்தோறும் நாம் செய்யும் தவறுகளில், குறிப்பிட்ட சில தவறுதளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

home

அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் காலை எழுந்ததும் யாருமே, அவரவருடைய படுக்கையை சரி செய்வதே கிடையாது. அந்த காலத்தில் எல்லாம் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ள ஒரு விஷயம் என்னவென்றால், படுக்கையை விட்டு எழுந்த உடன், அந்த படுக்கையை முதலில் எடுத்து, மடித்து, சுருட்டி ஒரு ஓரமாக வைக்க வேண்டும் என்பது தான். சரி. இந்த காலத்தில் யாரும் தரையில் பாய் விரித்து படுப்பதே இல்லை. மெத்தையில் படுத்தாலும், கலைந்து கிடக்கும் தலையணையையும் விருப்பையும் சரி செய்யும் பழக்கம் உங்களிடம் உள்ளதா?

- Advertisement -

இப்படி சொல்லி வைத்ததற்கு ஒரு காரணமும் உள்ளது. இரவு முழுவதும் கை கால்களானது எந்த ஒரு அசைவும் இல்லாமல், ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கின்றோம். அப்படி அசைவு இல்லாத உடல் பாகங்கள், திடீரென்று எந்த ஒரு வேலையையும் செய்வதற்கு ஒத்துழைக்காது. இதனால் தான் நான் கண்விழித்ததும், குனிந்து நிமிர்ந்து கைகளை தூக்கி, இறக்கி நம்முடைய படுக்கையை சரி செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இந்தப் பழக்கம் அறிவியல் ரீதியாக நம் உடல் நலத்திற்கும் நல்லது. படுக்கையை கண் விழித்தவுடன், சரி செய்து விட்டோமேயானால், வீட்டில் தரித்திரம் இருக்காது. இது ஆன்மீகத்திற்கும் நல்லது. இதில் இத்தனை உண்மை அடங்கி இருக்கும் பட்சத்தில் நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கிறோம்?

sleep1

அடுத்ததாக சில வீட்டில் பெண்கள் கண்விழித்ததும், சமையலறைக்கு சென்று அடுப்பை பற்றவைத்து, குடிப்பதற்கு காஃபியோ, டீ யோ போடத் தொடங்கிவிடுவார்கள். உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் எச்சில் பாத்திரங்களை சுத்தம் செய்து இருந்தால் மட்டும் சமையலறைக்குள் சென்று, முதலில் அடுப்பைப் பற்ற வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

- Advertisement -

இரவு சாப்பிட்ட எச்சில் பாத்திரம் உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் பட்சத்தில் அதை சுத்தம் செய்யாமல் அடுப்பைப் பற்ற வைப்பது மிகவும் தவறான ஒன்று. முடிந்தால் இரவு நேரத்திலாவது, அதை சுத்தம் செய்து விட்டு படுக்க வேண்டும். இல்லை என்றால் காலையில் சீக்கிரம் எழுந்து அந்த பாத்திரங்களை சுத்தம் செய்து வைத்த பின்புதான் அடுப்பைப் பற்ற வைப்பது சரியான முறை.

kitchen

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் எச்சில் பாத்திரங்களை இரவு நேரத்தில் சமயலறையில் வைக்கவே மாட்டார்கள். அவர்களுக்கு இட வசதி இருந்தது. பின் பக்கத்திலோ அல்லது சமையலறையை தவிர்த்து வேறு ஏதாவது வெளி இடங்களில் எச்சில் பாத்திரத்தைப் போட்டு வைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இன்று நமக்கு இடப்பற்றாக்குறை இருப்பதன் காரணமாக, சமையலறையிலேயே எச்சில் பாத்திரத்தை வைத்து விடுகின்றோம். முடிந்தவரை இரவு நேரத்திலேயே எச்சில் பாத்திரங்களை கழுவி வைப்பது தான் மிகவும் சரியான ஒன்று. அந்தப் பாத்திரங்களில் இருந்து வீசும் கெட்ட வாடையோடு காலையில் முதல் சமையலை தொடங்குவது என்பது தவறு என்று சொல்லப்பட்டுள்ளது.

kitchen

சில பேர் வீட்டில் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாட்டை, உருண்டை பிடித்து வைத்து சாப்பிடும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இது மிகப்பெரிய தவறாக நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய குழந்தைகள் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் பழக்கத்தை வைத்திருந்தால் அதை திருத்திக் கொள்ள சொல்லுங்கள். பெரியவர்களும் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடக் கூடாது. இதேபோல் நாம் சாப்பிட்ட எச்சிலான, தட்டில் மீதம் வைத்த சாப்பாட்டையோ, எச்சில் இலையையோ பசுமாட்டிற்கு கொடுக்கக்கூடாது. அதாவது, சிலபேர் எச்சில் இலைகளை பசுமாட்டிற்கு சாப்பிடுவதற்காக மாட்டுத் தொட்டிலில் கொண்டுபோய் போடும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். இது மிகப்பெரிய தவறாக சொல்லப்பட்டுள்ளது. இது பல பேருக்கு தெரிவதில்லை. தெரியாமல் செய்திருந்தால் பரவாயில்லை. இனி அந்த தவறை திருத்திக் கொள்ளுங்கள். பசு மாடானது, தானாக சாலையில் சென்று, எச்சில் இலைகளை சாப்பிடுவது என்பது வேறு. நம் கையால் எச்சில் பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கக் கூடாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

cow

குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு இந்த நல்ல பழக்கத்தை சொல்லித் தர வேண்டியது மிகவும் அவசியமானது.  நம்முடைய வீட்டில் நாம் செய்யும் இந்த சின்ன சின்ன தவறுகள் கூட வரக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

- Advertisement -