உங்க வீடு இந்த திசையில் இருந்தால் நீங்கள் எந்த மிதியடியை பயன்படுத்த வேண்டும் தெரியுமா? வாஸ்துபடி இதை செய்து பாருங்கள் அதிர்ஷ்டம் தானாக வரும்.

mat-vasthu-tamil
- Advertisement -

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தை பண்ணிப் பார் என்று சும்மாவா சொன்னார்கள்? ஒரு திருமணம் அல்லது வீட்டை கட்டி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். உங்களுடைய ஜாதகப்படி மற்றும் வாஸ்துபடி இந்த திசையில் உங்களுக்கு வீடு அமைய பெற்று இருந்தால், உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது நியதி! அந்த வகையில் உங்கள் வீடு இருக்கும் திசையை பொறுத்து நீங்கள் மிதியடிகளை பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் வருமாம். அப்படியான அதிர்ஷ்டம் தரக்கூடிய மிதியடிகளின் சாஸ்திரம் என்ன? என்பதைத் தான் இந்த வாஸ்து சார்ந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வடமேற்கு திசை பார்த்த வீடு:
வடமேற்கு திசையில் உங்கள் வீடு அமைய பெற்று இருந்தால் நீங்கள் வெளியில் பயன்படுத்த வேண்டிய மிதியடியின் நிறம் மஞ்சள் அல்லது வெளிர் நீலமாக இருப்பது. இது வீட்டில் இருப்பவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் மேலும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும்.

- Advertisement -

தென்மேற்கு திசை பார்த்த வீடு:
தென்மேற்கு திசையில் உங்கள் வீடு அமையப் பெற்று இருந்தால் நீங்கள் வெளியில் பயன்படுத்த வேண்டிய மிதியடியின் நிறம் வெளிர் மஞ்சள் அல்லது கிரீம் நிறத்தில் இருப்பது மகிழ்ச்சியையும், குடும்ப செழிப்பையும் அதிகரிக்க செய்யும். குறைவில்லாத தன வரவு இருக்க இது போல செய்யலாம்.

தென்கிழக்கு திசை பார்த்த வீடு:
தென்கிழக்கு திசை பார்த்தபடி உங்களுடைய வீடு அமைய பெற்று இருந்தால் நீங்கள் வெளியில் சிவப்பு நிற மிதி அடியை போட்டு பயன்படுத்தலாம். இது உங்களுடைய குடும்பத்திற்கு வரக்கூடிய திருஷ்டிகளை அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. மேலும் உங்களுடைய முன்னேற்றத்திற்கும், நன்மைக்கும் உறுதுணையாக இருக்கும்.

- Advertisement -

வடகிழக்கு திசை பார்த்த வீடு:
உங்களுடைய வீடு வடகிழக்கு திசையை நோக்கி அமையப் பெற்று இருந்தால் நீங்கள் வீட்டிற்கு முன்பு மஞ்சள் நிற மிதியடியை பயன்படுத்தினால் நன்மை அதிகரிக்கும். வடக்கு திசை வீடுகளில் மஞ்சள் மிதியடிகள் நிதி நிலையை மேம்படுத்தி, குடும்பத்தில் இருப்பவர்களின் எதிர்மறை ஆற்றல்களையும் விரட்டி அடிக்கும்.

கிழக்கு திசை பார்த்த வீடு:
உங்களுடைய வீடு கிழக்கு திசை பார்த்தபடி அமைந்து இருந்தால் நீங்கள் வெளியில் மிதயடியை வெளிர் நிறத்தில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த வெளிர் நிற மிதியடிகள் உங்களுடைய முன்னேற்றத்திற்கும், செல்வ செழிப்பிற்கும் வழிவகை செய்யும். இந்த திசையில் வீடு உள்ளவர்கள் கருப்பு மற்றும் பச்சை, நீலம் போன்ற அடர் நிறங்களில் மிதியடிகளை பயன்படுத்தக் கூடாது இதனால் பிரச்சனைகள் வரலாம் கவனம் வேண்டும்.

வடக்கு திசை பார்த்த வீடு:
வடக்கு திசையை பார்த்தபடி உங்களுடைய வீடு அமைய பெற்று இருந்தால் நீங்கள் வெளிர் நீல மிதியடிகளை பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் வரும். வடக்கு திசையை பொறுத்தவரை குபேரனுடைய திசையாக கருதப்படுகிறது எனவே இந்த திசையில் தான் பண சேர்க்கை உண்டாகிறது. நீங்கள் எப்பொழுதும் வீட்டை மூடி வைக்காமல் திறந்து வைத்திருப்பது நல்லது. வீட்டிற்கு முன்பு கேட் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதற்கு பூட்டு போட்டுக் கொள்ளலாம். ஒரேயடியாக கதவை மூடி வைத்தால் குபேர வாசம் குறையும்.

- Advertisement -