மிக்ஸியை அடிக்கடி இப்படி சுத்தம் செய்யவில்லை என்றால், நீங்கள் அரைக்கிற சட்னி கூட சீக்கிரம் கெட்டுப் போகத்தான் செய்யும். எல்லா இல்லத்தரசிகளும் அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய குறிப்பு இது.

mixie
- Advertisement -

சில பேர் வீட்டில் காலையில் அரைத்த சட்னி 2 மணி நேரத்திலேயே கெட்டுப் போகும். சுத்தமாகத்தான் செய்வார்கள். ஆனால் என்ன தவறு என்று தெரியாது. மிக்ஸியை அடிக்கடி இப்படி பராமரிக்காமல் விட்டாலும், நீங்கள் மிக்ஸியில் அரைக்கும் உணவுப்பொருட்கள் சீக்கிரம் கெட்டுப் போகத்தான் செய்யும். மிக்ஸி ஜாரை முறையாக எப்படி பராமரிப்பது என்பதை பற்றிய பயனுள்ள ஒரு வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக. இந்த வீட்டு குறிப்பை பின்பற்றி வந்தால் உங்களுடைய மிக்ஸி ஜார் சுத்தமாவதோடு சேர்த்து, உங்களுடைய ஆரோக்கியத்திற்கும் எந்த ஒரு குறைபாடும் வராது.

மிக்ஸி ஜார் சுத்தம் செய்யும் முறை:
ஒருமுறை பயன்படுத்திய மிக்ஸி ஜாரை, கழுவும் போது நாம் சில விஷயங்களை கவனிப்பதே கிடையாது. அப்படியே சிங்கில் போட்டு தண்ணீர் ஊற்றி நார் போட்டு தேய்த்து கழுவி கவிழ்த்து விடுவோம். ஆனால் மிக்ஸி ஜார் பிளேடுக்கு அடியில் சிக்கிக் கொண்டிருக்கும் உணவு பொருட்களை நாம் கவனிப்பது இல்லை. மிக்ஸிக்கு மேலே மூடுவோம் அல்லவா, அந்த மூடி, மூடியை சுற்றி ஒரு ரப்பர் கொடுத்து இருப்பாங்க, அந்த ரப்பருக்கு இடையே சிக்கி இருக்கும் உணவு பொருட்களை நாம் கவனிப்பதை கிடையாது.

- Advertisement -

காலை அவசர அவசரமாக மிக்ஸி ஜாரை கழுவி வைத்தாலும், வாரத்தில் ஒரு முறை அதை டீப் கிளீன் செய்ய வேண்டும். மிக்ஸி ஜாரின் உள்ளே கொஞ்சமாக பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஊற்றி தண்ணீரை கொஞ்சமாக ஊற்றி, கொஞ்சமாக கல் உப்பு போட்டு, மிக்ஸியில் வைத்து, மூடி போட்டு இரண்டு ஓட்டு ஓட்டி எடுக்க வேண்டும். இப்படி சோப்பு போட்டு மிக்ஸி ஜாரை ஓட விட்டு கழுவும்போது பிளைட்டுக்கு, இடுக்கில் சிக்கி இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் எல்லாம் வெளியே வந்துவிடும்.

அடுத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது மிக்ஸி ஜார் மூடியை, ரப்பரை வெளியே எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். ரயபரை கழட்டி விட்டு பாத்திரம் தேய்க்கும் லிக்விடை ஊற்றி, பல் தேய்க்கும் பிரஷை வைத்து அந்த ரப்பரையும், அந்த பிளாஸ்டிக் மூடியையும் இடுக்குகளில் எல்லாம், நன்றாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக மிக்ஸி ஜார் மூடியில் இருக்கும் கருப்பு ரப்பருக்கு நடுப்பகுதி என்று ஒன்று இருக்கும். அந்த நடுப்பகுதியில் பிரஷை வைத்து நன்றாக தேய்த்து சுத்தம் செய்யுங்கள். அதன் உள்ளே நிறைய உணவு பொருட்கள் கெட்டுப் போய் ஒட்டி இருக்கும்.

- Advertisement -

இப்படி கவனம் எடுத்து உங்கள் மிக்சி ஜாரை சுத்தம் செய்யவில்லை என்றால் அந்த உணவு பொருட்கள், அதாவது நீங்கள் அரைத்த தேங்காய் மசாலா எதுவாக இருந்தாலும், அந்த மிக்ஸி ஜாரிலேயே ஒட்டி, மிக்ஸி ஜாரில் கெட்ட வாடை வீச தொடங்கிவிடும். நீங்கள் மீண்டும் மீண்டும் மிக்ஸி ஜாரில் சட்னி அரைக்கும்போது, அந்த கெட்டுப்போன உணவுப் பொருட்கள் புதிய பொருட்களிலும் கலந்து சீக்கிரமே நீங்கள் சமைக்கும் பொருளைவீணடித்து விடும்.

ஆக உங்கள் ஆரோக்கியம் கெடுவதற்கும் நீங்கள் சமைத்த பொருள் கெடுவதற்கும் இதுவும் ஒரு காரணம்தான். ஒரே ஒரு முறை உங்களுடைய சுத்தமாக இருக்கும் மிக்ஸி ஜாருக்குள் 1 சொட்டு விம் லிக்விட் ஊத்துங்க. 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றுங்கள். ஜாரை, மிக்ஸியில் வைத்து சும்மா ஒரு ஓட்டு ஓட்டி பாருங்க. அதிலிருந்து எவ்வளவு அழுக்கு வெளி வருகிறது என்று உங்களுக்கே தெரியும். கண்கூடாக மிக்ஸியில் இருக்கும் பிரச்சனையை அங்கே நீங்கள், அந்த மிக்ஸி ஜாருக்குள் இருக்கும் தண்ணீரில் பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: வாரம் 1 முறை பாத்ரூமை இப்படி சுத்தம் செய்தால் உப்பு கறை படியவே படியாது. வீசிங் பிரச்சனை உள்ளவர்கள் கூட இந்த குறிப்பை முயற்சி செய்யலாம். இருமல் வருவதற்கு வாய்ப்பே கிடையாது.

மிக்ஸி ஜார் மூடியில் இருக்கு அல்லவா, அந்த ரப்பரை கழட்டி ரப்பருக்குள் சுற்றி பாருங்கள். ஒரு பிரஷை வைத்து தேய்த்து பாருங்கள் எவ்வளவு அழுக்கு வெளி வருகிறது என்பது உங்களுக்கே தெரியும். இது ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கக்கூடிய பிரச்சனைகள் இதற்கு பின்னால் இருக்கிறது. கொஞ்சம் சிரமப்படாதீர்கள். இல்லத்தரசிகள் இனி வீட்டில் இந்த விஷயத்தையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயனுள்ள குறிப்பு.

- Advertisement -