வாரம் 1 முறை பாத்ரூமை இப்படி சுத்தம் செய்தால் உப்பு கறை படியவே படியாது. வீசிங் பிரச்சனை உள்ளவர்கள் கூட இந்த குறிப்பை முயற்சி செய்யலாம். இருமல் வருவதற்கு வாய்ப்பே கிடையாது.

bathroom
- Advertisement -

பொதுவாகவே பாத்ரூமில் இருக்கும் உப்பு கறையை சுலபமாக நீக்க வேண்டும் என்றால் ஆசிட், ஹார்பிக், ப்ளீச்சிங் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் போது வீசிங் பிரச்சனை உள்ளவர்களுக்கு, இருமல் மூச்சு திணறல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த பொருட்களை எல்லாம் பயன்படுத்தாமல் மிக மிக எளிமையான முறையில் பாத்ரூமில் படியும் உப்பு கறையை நீக்கவும், வெள்ளை திட்டுகளை நீக்கவும் ஒரு எளிமையான குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த பாத்ரூம் சுத்தம் செய்யும் லிக்விடை தயார் செய்து விடுங்கள். பாத்ரூமில் இருக்கும் உப்பு கறையும் நீங்கும். அதே சமயம் மீண்டும் மீண்டும் பாத்ரூமில் உப்பு கறை படியாமலும் இருக்கும். பாத்ரூமை சுத்தம் செய்யக்கூடிய பயனுள்ள அந்த வீட்டுக் குறிப்பை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பாத்ரூமில் உப்பு கறை நீங்க எளிமையான குறிப்பு:
முதலில் அகலமான ஒரு கிண்ணம் அல்லது பிளாஸ்டிக் ஜக் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பீதாம்பரி பவுடர் 1 டேபிள் ஸ்பூன், ஷாம்பு 2 டேபிள் ஸ்பூன், தலைமுடிக்கு பயன்படுத்தும் கண்டிஷனர் 2 டேபிள் ஸ்பூன், ஆப்ப சோடா 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு 2 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டுவிட்டு சூடாக இருக்கும் தண்ணீர் 1/2 லிட்டர் அளவு ஊற்றி இதை நன்றாக கரைக்க வேண்டும். (பச்சைத் தண்ணீர் ஊற்றி கரைக்கக் கூடாது. இந்த 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கின்ற நல்ல தண்ணீராக இருக்கட்டும். உப்பு தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.)

எந்த பிராண்ட் ஷாம்பூ, எந்த பிராண்ட் கண்டிஷனர் வேண்டுமென்றாலும் நீங்கள் பயன்படுத்தலாம். கரைத்த இந்த கலவையை உங்கள் கையால் தொட்டால் கூட கைக்கு பாதிப்பு வராது. இந்த கலவையின் மூலம் மூக்குக்கு எந்த ஒரு நெடியும் வீசாது. கைக்கு கிளவுஸ், மூக்குக்கு மாஸ்க், இல்லாமலேயே இந்த லிக்விடை பயன்படுத்தலாம். கரைத்த இந்த லிக்விடில் ஸ்பாஞ்சினார் அல்லது பழைய துணி, பழைய சாக்ஸ் உங்களிடம் எது இருக்கிறதோ, அதில் நினைத்து அப்படியே உங்களுடைய பாத்ரூம் சுவற்றில் தேய்க்க வேண்டும். தரையில் அதிகமாக உப்பு கறை படிந்தால் இருந்தால், பாத்ரூம் தரையிலும் இந்த லிக்விடை நன்றாக தேய்த்து விடலாம்.

- Advertisement -

அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டாம். இந்த லிக்விட் தரையில் படும்படி தடவி கொடுங்கள் போதும். இந்த லிக்விடை அப்ளை செய்யும்போது சுவரிலும், தரையிலும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த லிக்விடை கறை உள்ள இடங்களில் தடவி விட்டு பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு ஸ்டீல் நார் அல்லது பிரஷ் உங்களிடம் எது இருக்கிறதோ, அதை தண்ணீரில் தொட்டு தொட்டு கறை படிந்த இடத்தை லேசாக தேய்த்துக் கொடுத்தாலே, உப்பு கறை முழுமையாக நீங்கிவிடும்.

இதில் நாம் கண்டிஷனர் பயன்படுத்தி சுத்தம் செய்ததால் மீண்டும் மீண்டும் அந்த இடத்தில் உப்பு கறை சீக்கிரம் படியாமல் இருக்கும். கண்டிஷனர் பயன்படுத்துவதன் மூலம் பாத்ரூம் வழுக்கும் என்ற கவலையும் படாதீங்க. நன்றாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து விட்டால் பாத்ரூம் நிச்சயம் வழுக்காது.

- Advertisement -

உங்களுடைய பாத்ரூமில் நிறைய இடங்களில் இப்படி உப்பு கறை வெள்ளை திட்டுக்கள் படிந்து இருந்தால் மொத்த இடத்தையும் ஒரே சமயத்தில் சுத்தம் செய்யாதீங்க. கை வலி கழுத்து வலி வந்து விடும். பகுதி பகுதியாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு நான்கு டைல்ஸ் என்று சுத்தம் செய்து வர எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் பாத்ரூம் முழுமையாக சுத்தமாகிவிடும். பின்பு வாரம் ஒரு முறை குளியலறை முழுவதும் இந்த முறையில் சுத்தம் செய்து கொள்ளலாம். குளியல் அறையில் இருக்கும் கதவில் உப்பு கறை படிந்திருந்தாலும் இந்த லிக்விடை பயன்படுத்தி பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: ஒரு உருளைக்கிழங்கு இருந்தா போதும். மீந்த சாதத்தை வைத்து ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி பண்ணிடலாம். காசு கொடுத்து வாங்குனா கூட இவ்வளவு ஹெல்தியான ஸ்நாக்ஸ் உங்களுக்கு கிடைக்காது.

இந்த முறையில் பாத்ரூம் டைல்ஸ்சை சுத்தம் செய்துவிட்டு உடனடியாக ஒரு காய்ந்த பழைய துணியை கொண்டு டைல்ஸ் முழுவதும் துடைத்து விட வேண்டும். கதவிலும் இந்த லிக்விடை போட்டு சுத்தம் செய்து விட்ட பிறகு காய்ந்த துணியை போட்டு துடைத்து எடுங்கள். அதில் இருக்கும் வெள்ளை நிற உப்பு பூத்த கறை அனைத்தும் அந்த துணியோடு ஒட்டி நமக்கு நீங்கிவிடும். துடைக்காமல் அப்படியே விட்டுவிட்டால், காய்ந்த பிறகு மீண்டும் வெள்ளை திட்டுக்கள் தெரிய தான் செய்யும். மேலே சொன்ன இந்த எளிமையான வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -