கம்ப்யூட்டர் சாம்பிராணி பயன்பாடு முடிந்த பின் கிடைக்கும் சாம்பலை இனி தூக்கி போடாதீர்கள்! இதற்கு பயன்படுத்துங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

computer-sambrani-pooja-items
- Advertisement -

நாம் தினமும் பிரார்த்தனை செய்யும் பொழுது பூஜை அறையில் கம்ப்யூட்டர் சாம்பிராணி ஒன்றை ஏற்றி வைத்து வழிபடுவது உண்டு. இந்த கம்ப்யூட்டர் சாம்பிராணி எரிந்து முடிந்ததும் குப்பைக்கு தான் செல்லும், இதன் சாம்பல்! இந்த சாம்பலை வைத்து இவ்வளவு பெரிய விஷயத்தை செய்ய முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கப் போகிறது இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பதிவு!

நாம் பூஜை செய்யும் பொழுது முந்தைய காலங்களில் எல்லாம் இயற்கையான சாம்பிராணியை போட்டு வீடு முழுவதும் புகை காட்டுவோம், ஆனால் இப்பொழுதெல்லாம் நவீனமான வகையில் கம்ப்யூட்டர் சாம்பிராணிகள் விற்கப்படுகின்றன. இந்த கம்ப்யூட்டர் சாம்பிராணிகள் இன்ஸ்டன்டாக புகைத்து நறுமணத்தை கொடுக்கிறது. தெய்வீக மணத்தை கொடுக்கக் கூடிய இந்த கம்ப்யூட்டர் சாம்பிராணியின் புகை, வீடு முழுவதும் பரவும் பொழுது தெய்வீக அருள் கிடைக்கிறது. இது முழுவதுமாக எரிந்து முடிந்த பின்பு கிடைக்கும் சாம்பலை இனி தூக்கி குப்பையில் போட்டு விடாதீர்கள். இதை ஒரு டப்பாவில் போட்டு சேகரித்துக் கொண்டே வாருங்கள்.

- Advertisement -

வாரம் முழுவதும் கிடைக்கும் கம்ப்யூட்டர் சாம்பிராணியின் இந்த சாம்பல் கொண்டு பூஜை பாத்திரம் முழுக்கவே தேய்த்து விடலாம். வாங்கிய புதிதில் எப்படி பளபளன்னு பித்தளை பாத்திரங்கள் மின்னியதோ, அதே போல மின்ன இந்த கம்ப்யூட்டர் சாம்பிராணியின் சாம்பல் பெருமளவு உதவி செய்கிறது. இதனுடன் இன்னொரு பொருளையும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது தான் இதனுடைய ரிசல்ட் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும்.

முதலில், சேகரித்த கம்ப்யூட்டர் சாம்பிராணியின் சாம்பலை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு எலுமிச்சை பழத்தினுடைய சாற்றை பிழிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி சேர்க்கும் பொழுது அதில் நுரைத்து பொங்க ஆரம்பிக்கும். இதை ஒரு பேஸ்ட் போல கலந்து வைத்து, பின்னர் பூஜை பாத்திரங்களை தேய்க்க பயன்படுத்தலாம்.

- Advertisement -

பூஜைக்கு பயன்படுத்திய பித்தளை பாத்திரங்கள் அனைத்தையும் ஒன்றொன்றாக எடுத்து அதில் இருக்கக்கூடிய குங்குமம், மஞ்சள் எல்லாவற்றையும் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது துணியை கொண்டு துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடியில் தங்கி உள்ள எண்ணெய் கரையையும் துடைத்து விடுங்கள். பிறகு நீங்கள் கலந்து வைத்துள்ள இந்த பேஸ்ட்டை, ஒரு ஸ்க்ரப்பரில் தொட்டு பூஜை பாத்திரங்களை லேசாக தேய்த்து கொடுத்தால் போதும், மங்கலான தன்மை, கருமை அனைத்தும் பித்தளை பாத்திரத்தில் இருந்து நீங்கி புதிதாக வாங்கியது போல சூப்பராக தங்கம் போல ஜொலிக்கும்.

இதையும் படிக்கலாமே:
என்ன! வீணாக தூக்கி கீழே போடும் இந்த கொட்டாங்குச்சியை வைத்து இத்தனை வேலைகளை சுலபமாக செய்யலாமா? அது என்னனு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க.மிஸ் பண்ணிடாதீங்க.

சாம்பலுடன் வினை புரியக்கூடிய சிட்ரிக் ஆசிட் எலுமிச்சை பழத்தில் உண்டு. இந்த எலுமிச்சை பழத்துடன் சேரும் பொழுது இதனுடைய கலவை ஒரு விதமான மூலக்கூறை உருவாக்குகிறது. இதை கொண்டு பித்தளை பாத்திரங்களை தேய்க்கும் பொழுது அதன் மீது உள்ள கருமை நீங்கி புதிதாக மின்னுகிறது. இதற்காக புளி, சபினா என்று எதுவுமே பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. வீணாக போகக்கூடிய இந்த சாம்பலை கொண்டு, அத்தனை பித்தளை பாத்திரங்களையும் ரொம்ப சுலபமாக கை வலிக்காமல் தேய்த்து கழுவி சுத்தம் செய்து விடலாம். சுத்தம் செய்த பின்பு ஒரு முறை நல்ல தண்ணீர் ஊற்றி கழுவிக் கொள்ளுங்கள். பிறகு உடனே ஈரம் போக துடைத்து காய விட்டு விடுங்கள். இப்படி செய்யும் பொழுது சீக்கிரமாக பித்தளை பாத்திரங்கள் மீண்டும் கருமையை அடையாது, நீண்ட காலம் நன்றாக இருக்கும்.

- Advertisement -