மிக்ஸி எளிமையாக சுத்தப்படுத்தும் முறை

mixy cleaning tips
- Advertisement -

இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு வீட்டில் எந்த பொருள் இருக்கிறதுதோ, இல்லையோ மிக்சி கட்டாயமாக இருக்க வேண்டும். சமையலறையில் மிக்ஸி இல்லை என்றால் சமையல் செய்யவே முடியாது என்கிற அளவுக்கு இந்த மிக்ஸியானது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு பங்காக மாறி விட்டது. அப்படி நம்மோடு இணைந்து விட்டு இந்த பொருளை நாம் பார்த்து பராமரிக்க வேண்டியது நம்முடைய கடமை தானே.

மிக்சியை எப்பொழுதும் பளிச்சென்று சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல் மிக்ஸில் உள்ள ஜாரையும் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் அப்போது தான் அது நீண்ட காலம் உழைக்கும். இந்த வீட்டு குறிப்பு பதிவில் இரண்டையும் எளிமையாக எப்படி பராமரிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

மிக்ஸியை எளிமையாக சுத்தப்படுத்தும் முறை

மிக்ஸியை சுத்தப்படுத்துவது கொஞ்சம் கடுப்படிக்கும் வேலையாக தான் அனைவரும் யோசிப்பார்கள். அதிலும் வெள்ளை நிறத்திலான மிக்ஸி என்றால் கேட்கவே வேண்டாம் கொஞ்ச நாளிலே மஞ்சள் நிறமாக மாறி விடும். எந்த நிறியாக இருந்தாலும் இந்த முறையை பயன்படுத்தலாம் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு கிண்ணத்தில் முகத்திற்கு போடும் ஃபேஸ் வாஷ் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு பழைய டூத் பிரஷில் தொட்டு தண்ணீர் இல்லாமல் மிக்ஸியின் மீது தேயுங்கள். அதன் பிறகு ஒரு காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து சுத்தமாக தேய்த்து விடுங்கள். கரைகள் அழுக்கு அனைத்தும் வந்து விடும்.

- Advertisement -

இதே முறையில் நீங்கள் ஃபேஸ் வாஷுக்கு பதிலாக நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டையும் பயன்படுத்தலாம். இதுவும் நல்ல பலனை தரும். வெள்ளை நிற மிக்ஸியை இந்த முறையில் சுத்தம் செய்யும் போது அதன் மஞ்சள் கறைகள் அனைத்தும் முழுவதுமாக நீங்கி விடும்.

மிக்ஸி ஜாரை சுத்தப்படுத்தும் முறை

மிக்ஸி சுத்தப்படுத்துவதை விட இந்த ஜாரை சுத்தப்படுத்துவது தான் கடினம். அதுவும் ஜாரின் பின்புறம் இருக்கும் கறைகள் அவ்வளவு சீக்கிரத்தில் நீக்க முடியாது. இந்த குறிப்பை பயன்படுத்தினால் அதையும் எளிமையாக செய்து விடலாம். முதலில் மிக்ஸி ஜாரில் காய்ந்த முட்டை ஓடு, பேக்கிங் சோடா, வினிகர் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த முறையிலே ஜாரில் பிளேட் ஷார்ப்பாகி விடும். மிக்ஸி உள்ளேயும் சுத்தமாகி விடும். அதன் பிறகு இந்த கலவை ஒரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து இதை மிக்ஸி ஜாரின் பின்புறம் ஊற்றி சிறிது நேரம் கழித்து பிரஷ் வைத்து தேய்த்துப் பாருங்கள். இப்பொழுது பின்புறம் இருக்கும் கறைகள் அனைத்தும் நீங்கி பளிச்சென்று இருக்கும்.

இதே போல சிறிதளவு அரிசி பேக்கிங் சோடா இரண்டையும் சேர்த்தும் மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து அதையும் இதே போல தண்ணீரில் கரைத்து மிக்ஸி ஜாரில் சுத்தப்படுத்தலாம். இதே கலவையை வைத்து மிக்ஸி ஜாரின் ஒயர் கூட சுத்தப்படுத்தலாம். இந்த முறையிலும் மிக்ஸி ஜாரின் பின்புறம் உள்ள கறைகளை எளிமையாக நீக்கலாம்.

இதையும் படிக்கலாமே: சிங்கில் இருக்கும் உப்பு கறை நீங்க வீட்டு குறிப்பு

மிக்ஸியும் மிக்ஸி ஜாரையும் சுத்தப்படுத்த பயன்படுத்தும் இந்த முறைகள் மிகவும் எளிமையானது தான். நம்முடைய அன்றாட வேலைகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் மிக்ஸியை நாம் கொஞ்சம் நேரம் எடுத்து அடிக்கடி இது போல சுத்தம் செய்தால் மிக்ஸி எப்போதுமே புதுசு போல இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -