சிங்கில் இருக்கும் உப்பு கறை நீங்க வீட்டு குறிப்பு

shink
- Advertisement -

சமையலறையில் இருக்கும் சிங்க் சுத்தமாக இருந்தாலே போதும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதி ஏற்பட்டு விடும். சிங்குக்கு உள்ளே இருக்கும் பாத்திரத்தை தேய்த்து சுலபமாக கழுவி எடுத்து விடலாம். ஆனால், நாளடைவில் சிங்கிள் படிந்து கிடக்கும் கறையை பார்க்கும் போதெல்லாம் நமக்கு கஷ்டமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் சிங்கை என்னதான் தேய்த்து கழுவினாலும் அது முழுமையாக சுத்தமடைந்த திருப்தியை தராது.

உப்பு கறை படிப்பதற்கு மேலேயே, பாத்திரம் தேய்க்கும்போது அந்த பாத்திரத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் அந்த உப்பு கறை மீது படியும். துரு கறை என்று அந்த சிங்கின் நிலைமை காலப்போக்கில் ரொம்ப ரொம்ப மோசமாகிவிடும். இதை சுத்தம் செய்ய கெமிக்கல் கலந்த எத்தனையோ பொருட்கள் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் நம்முடைய கைகளுக்கும் நல்லது இல்லை. சுவாசத்திற்கும் நல்லது இல்லை. அசத்தமாக இருக்கும் சிங்கை நிமிடத்தில் சுத்தம் செய்ய எளிமையான ஒரு வீட்டு குறிப்பு தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

சிங்கை சுத்தம் செய்ய எளிய வீட்டு குறிப்பு

ஒரு சின்ன பாத்திரம் எடுத்துக்கோங்க. அதில் ஏதாவது ஒரு மாத்திரை, எக்ஸ்பீரியானா மாத்திரையாக இருந்தாலும் பரவாயில்லை. அதிலிருந்து 2 மாத்திரைகளை எடுத்து நன்றாக தூள் செய்து அந்த கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்து காபித்தூள் 1 ஸ்பூன், லெமன் சால்ட் 1 ஸ்பூன், பேக்கிங் சோடா 1 ஸ்பூன், ஷாம்பு 1 ஸ்பூன், இந்த பொருட்களை கலக்க தேவையானது வினிகர் தான். தேவையான அளவு வினிகரை அதில் ஊற்றி கலந்தால் நுறை பொங்கி வரும்.

இதில் தண்ணீர் ஊற்றக்கூடாது. இந்த நுறை கலந்த லிக்விடை அப்படியே காய்ந்த சிங்கின் மேல் பரப்பி விடுங்கள். காய்ந்த சிங்கிள் இந்த லிக்விடை அப்ளை செய்யும்போது தான் ரிசல்ட் டக்குனு கிடைக்கும். ஈரமாக இருக்கும் சிங்கிள் இந்த நுறையை தடவினால் அவ்வளவு சீக்கிரத்தில் ரிசல்ட் தெரியாது.

- Advertisement -

ஒரு ஸ்டீல் நாரை வைத்து இந்த லிக்விடை சிங்கின் மேல் அப்படியே தேய்த்தபடி பரப்பி விடும் போதே சிங்கில் இருக்கும் அழுக்கு காணாமல் போக தொடங்கும். இந்த லிக்விடை சிங்க் முழுவதும் அப்ளை செய்துவிட்டு 1 நிமிடம் மட்டும் காத்திருங்கள். பிறகு மீண்டும் லேசாக தண்ணீரை தெளித்து அந்த ஸ்டீல் நாரை வைத்து தேய்த்தாலே போதும். உங்க சிங்க் பளீச் என மாறிவிடும்.

சில சமயம் சிங்குக்கு உள்ளே தண்ணி போகும் இடத்திலிருந்து துர்நாற்றம் அதிகமாக வீசிக்கொண்டே இருக்கும். நாம் அசைவம் சமைக்கும் சமயத்திலும் இந்த மாதிரி பிரச்சனையை எதிர்கொள்வோம். அந்த சமயத்தில் கொஞ்சமாக சுடுதண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து அந்த தண்ணீரை அந்த ஓட்டைக்குள் ஊற்றி விடுங்கள். துர்நாற்றம் வீசுவது குறையும்.

இதையும் படிக்கலாமே: மண் சட்டியை சுத்தம் செய்யும் முறை

அப்படி இல்லை என்றால் உங்களால் முடியும் என்றால் 1 ஸ்பூன் காபி தூளை அந்த ஓட்டையில் கொட்டி விடுங்கள். அதில் வீசும் துர்நாற்றம் உடனடியாக நின்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ரூபாய்க்கு கூட காபித்தூள் பாக்கெட் இருக்கிறது அல்லவா அதில் இருந்து ஒன்று வாங்கி பிரித்து அந்த சிங் ஓட்டையில் கொட்டி விடலாம். ஸ்டீல் சிங்கக்கு மட்டும் தான் இந்த குறிப்பு கிடையாது. மார்பல், கடப்பா கல்லில் போட்ட சிங்க்காக இருந்தாலும் இந்த குறிப்பை நீங்கள் பயன்படுத்தலாம்.

- Advertisement -