- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவு அதிகரிக்க ஏற்ற வேண்டிய தீபம்

பண வரவு அதிகரிக்க ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

நாம் கஷ்டப்பட்டு உழைப்பதற்கு முக்கியமான காரணம் பணத்தை ஈட்டுவது மட்டுமே தான். பணத்தை ஈட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. பலரும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அந்த உழைப்பிற்கேற்ற பணவரவை பெறாமல் இன்றளவும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ எந்தவித கஷ்டமும் படாமல் எளிதில் பணத்தை சம்பாதித்து விடுகிறார்கள். இன்னும் சிலரோ பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் வீண் விரயமாகி சேமிப்பாக உயராத நிலையும் ஏற்படுகிறது. இப்படி பணம் தொடர்பாக ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீர்வதற்கு தினமும் வீட்டில் ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணவரவை அதிகரிக்கக் கூடிய தெய்வமாக இருப்பவள் மகாலட்சுமி தான். அப்படிப்பட்ட மகாலட்சுமி வீற்றிருக்கக் கூடிய மலராக தான் தாமரை மலர் திகழ்கின்றது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான மலர்கள் உகந்த மலர்களாக இருந்தாலும் அனைத்து தெய்வத்திற்கும் உகந்த மலராக திகழ்வது தாமரை மலர் ஒன்றுதான். அப்படிப்பட்ட தாமரை மலரை நாம் எந்த அளவிற்கு ஆலயத்திற்கு வாங்கி தருகிறோமோ அந்த அளவிற்கு தெய்வ கடாட்சம் நமக்கு ஏற்பட்டு அதன் மூலம் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். அப்படிப்பட்ட தாமரையை எப்படி பயன்படுத்தினால் பண வரவு அதிகரிக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

நம்மில் பலரும் தினமும் தீபமேற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அப்படி தீபம் ஏற்றும் பொழுது பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தனியாக ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை அகல் விளக்கில் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு. ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெல்லை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அந்த அகல் விளக்கில் பாதி நெய் பாதி தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு அதில் தாமரை தண்டு திரியை போட்டு மூன்று சொட்டு தேனை விட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த முறையில் தினமும் நாம் தீபமீற்றி வழிபாடு செய்தோம் என்றால் அனைத்து தெய்வங்களின் அருளாலும் நமக்கு பணவரவு உண்டாகும்.

தாமரை தண்டு திரி கிடைக்கவில்லை என்பவர்கள் தாமரை விதைகளை அந்த எண்ணையில் போட்டு தீபம் ஏற்றலாம். தாமரை விதைகளை கடையிலிருந்து வாங்கி அப்படியே உபயோகப்படுத்துவதற்கு பதிலாக சுத்தமான காய்ச்சாத பசும்பாலில் கழுவி காயவைத்து பிறகு அதை எண்ணெயில் போட்டு தீபம் ஏற்றும் பொழுது தாமரை தண்டு திரியை போட்டு தீபம் ஏற்றுவதற்கு உரிய பலனை பெற முடியும். இந்த தீபத்தை வெள்ளிக்கிழமையிலோ அல்லது பெருமாளுக்கு உரிய ஏகாதசி போன்ற நாட்களிலோ ஏற்ற ஆரம்பிப்பது மிகவும் சிறப்பு. இந்த தீபத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றலாம் அல்லது ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு நல்ல நேரம் பார்த்து ஏற்ற ஆரம்பிப்பது நல்ல பலனை தரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: நோய் நொடிகளில் இருந்து விடுபட தன்வந்திரி மந்திரம்

எளிமையான இந்த தீப வழிபாட்டை முழுமனதோடு தினமும் ஏற்றுபவர்களுக்கு அவர்களுடைய பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும், வீண்விரயம் குறையும், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்