உங்கள் வீட்டில் மணிபிளான்ட் செடி இருக்கா? இந்த புதன்கிழமை இதை மட்டும் செஞ்சுதான் பாருங்களேன்!

வீட்டில் மணி பிளாண்ட் செடியை வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்த பதிவின் தலைப்பை பார்த்து சிந்திக்க தொடங்கி இருப்பீர்கள்! மணிபிளான்ட் செடியை புதன்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும்? என்ற சந்தேகம் எல்லோருடைய மனதிலும் எழுந்திருக்கும். சின்ன தந்திர வழிதான் இது. இதை நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்.

money plant

உங்கள் வீட்டில் மணி பிளாண்ட் வைத்திருக்கும் செடி தொட்டியானது எந்த நிறத்தில் இருக்க வேண்டும்? புதன் கிழமை அன்று அந்த செடியை எந்த திசையில் கொண்டு வைக்க வேண்டும்? அதன்பின்பு அந்த செடியின் வேரை எடுத்து என்ன செய்வது? என்பதைப் பற்றிய விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு, அதன்படி செய்து பாருங்கள் நிச்சயம் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

உங்கள் வீட்டில் இருக்கும் மணிபிளான்ட் செடியின் தொட்டி கட்டாயம் பச்சை நிற வண்ணத்தில் இருக்க வேண்டும். வேறு வண்ணத்தில் இருக்கக் கூடாதா என்ற சந்தேகம் வேண்டாம். பச்சை நிற வண்ணத்தில் இருந்தால் அதற்கு சக்தி அதிகம். உங்கள் வீட்டு மணிபிளான்ட் செடி தொட்டியை முதலில் பச்சை நிற வண்ணத்திற்கு மாற்றங்கள். அதன் பின்பு இந்த புதன்கிழமை அன்று, அந்தத் தொட்டியை உங்கள் வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். உங்க வீட்ல வடக்கு பக்கம் எதுவோ அந்த இடத்தில் கொண்டுபோய் இந்த மணிபிளான்ட் செடி தொட்டியை வைத்து விடுங்கள்.

money plant

செடியைப் வைத்த இந்த புதன் கிழமையை விட்டுவிட்டு, அடுத்த புதன் கிழமை அன்று அந்த மணிபிளான்ட் செடியின் வேர் பகுதியில் இருந்து, சிறு துண்டை கத்தி படாமல், விரல்களால் கிள்ளி எடுக்க வேண்டும். வேரை எடுப்பதற்கு முன்பு, செடியிடம் மானதார மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். என்னுடைய நலனுக்காகத்தான் இந்த வேர் எடுக்கப்படுகிறது என்றவாறு சொல்லுவது நல்லது.

- Advertisement -

செடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு மண்ணைத் தோண்டி, செடியிலிருந்து வேரை எடுத்துக்கொண்டு, அந்த வேரை சிறிது மஞ்சள் தண்ணீர் ஊற்றி கழுவி, ஒரு சிகப்பு துணியில் கட்டி புதன்கிழமை அன்று நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். பணம் ரீதியாக உங்களுக்கு இருக்கும் பல சிக்கல்களுக்கான தீர்வினை இந்த வேர் கொடுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு தான் செய்து பாருங்களேன்!

money plant

இந்தப் பரிகாரத்தை புதிய மணிபிளான்ட் செடியை வாங்கி வைத்து தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் வெளியில் சென்று செடி வாங்க முடியாது என்ற காரணத்தினால், உங்கள் வீட்டில் இருக்கும் பழைய மணிபிளான்ட் செடியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிலைமை சரியான பின்பு ஒருமுறை, புதிய மணி பிளான்ட் செடியை வாங்கி வைத்து அந்த பழைய வேரை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நாளை காலை அட்சய திதி! ஊரடங்கு காரணமாக, கடைக்கு சென்று, கல்லுப்பு வாங்க முடியாதவர்கள் லட்சுமிதேவியின் ஆசீர்வாதத்தை பெற என்ன செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Money plant payangal in Tamil. Money plant Tamil. Money plant benefits. Money plant vastu in Tamil. Money plant uses in Tamil.