- Advertisement -

கடன் தீர சிவ மந்திரம்

- Advertisement -

கடன் தொல்லை தீர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்ற வார்த்தையை கேட்கும்பொழுது பலருக்கு ஏதோ பல ஜென்ம புண்ணியத்தை ஒன்றாக பெற்றது போல இருக்கும் அப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இந்த கடனானது பெரும் பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சூழ்நிலை காரணமாக ஏதோ ஒரு வகையில் கடனில் சிக்கிக் கொண்டவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் தினந்தினம் படும் வேதனைகள் சொல்லி மாளாது.

அதிலும் ஒரு சிலரால் வாங்கிய கடனை அடைக்கவே முடியாமல் திணறிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலருக்கோ வருமானம் வந்தும் கூட, சிலரிடம் வாங்கிய கடனை அடைத்து மீண்டுவர முடியாது. ஏனெனில் கடனில் நாம் துன்பப்படுவதும் கூட நம்முடைய கர்மாக்களில் ஒருவகை என்று தான் என சொல்கிறார்கள். அப்படியான கடன் என்னும் கர்மா நீங்கி நிம்மதியாக வாழ வேண்டும் எனில் நாம் அடிப்படைய வேண்டிய கடவுள் சிவபெருமான் தான். அப்படியானவரை நாளைய பிரதோஷ தினத்தில் எப்படி வழிபாடு செய்தால் நம்முடைய இந்த கடன் பிரச்சனை தீரும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர்ந்து நிம்மதியாக வாழ பிரதோஷ வழிபாடு

இந்த வழிபாட்டை நாளைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும் முடியாதவர்கள் ஏழு மணிக்குள்ளாக செய்து விடுங்கள் மாலை நேரத்தில் செய்பவர்கள். பிரதோஷ நேரத்தில் இருந்து இரவு ஏழு முப்பது மணிக்குள்ளாக செய்து விடுங்கள். இது இந்த வழிபாட்டிற்கு உகந்து நேரம். இந்த நேரத்தில் முதலில் பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு சிவபெருமான் படம் அல்லது லிங்கம் இரண்டில் எது இருந்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

சிவபெருமான் படம் இருந்தால் துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்து வாசனை மிக்க மலரை வைக்க வேண்டும். படம் இல்லாமல் லிங்கம் வைத்திருந்தால் நிச்சயமாக இந்த லிங்கத்திற்கு மஞ்சள் அபிஷேகம் செய்ய வேண்டும். இன்றைய தினத்தில் மஞ்சள் அபிஷேகம் செய்வது மிக மிக உகந்ததாக சொல்லப்படுகிறது. படம் அல்லது லிங்கம் எதுவும் இல்லை என்பவர்கள் சிவபெருமானை நினைத்து தீபத்தை ஏற்றினாலும் போதும்.

- Advertisement -

அதே போல் நாளைய தினத்தில் இந்த வழிபாடு செய்யும் போது அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் தான் ஏற்ற வேண்டும். சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக பால் சாதம் அல்லது தயிர் சாதம் இதில் ஏதேனும் ஒன்று வையுங்கள் திங்கட்கிழமை ஆனது சந்திரனுக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது. சந்திரனுக்கு உகந்த நிறம் வெள்ளை. அதே போல் சிவ வழிபாட்டிற்கு உகந்த தினம் திங்கட்கிழமை. இந்த திங்கட்கிழமையில் பிரதோஷமும் இணைந்து வந்திருப்பது மிகவும் விஷேசம்.

ஆகையால் நாளைய தினத்தில் இந்த நெய்வேத்தியத்தை வைத்து சிவ வழிபாடு செய்யும் பொழுது நிச்சயம் நம்முடைய துன்பங்களும் துயரங்களும் நீங்குவதோடு கடன் என்னும் அரக்கனிடம் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த தீபம் ஏற்றி வைத்து விட்டு தீபத்தின் முன்பாக நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள் தீபம் கிழக்கு நோக்கி எறிய வேண்டும் நீங்கள் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கீழ்வரும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

ஓம் நமச்சிவாய வாழ்க
நாதன் தாழ் வாழ்க

என்ற இந்த மந்திரத்தை சிவபெருமானை நினைத்து 108 முறை சொல்ல வேண்டும். இந்த நேரத்தில் உங்களுடைய கடன் நீங்கி செல்லும் பெருக வேண்டும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விடுங்கள். நாளை பிரதோஷ விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் மாலை பிரதோஷ நேரம் முடிந்த பிறகு உணவு எடுத்துக் கொள்ளுங்கள் இல்லாதவர்கள் இந்த வழிபாடு முடிந்தவுடன் சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பு அதிகரிக்க செய்ய வேண்டிய தானம்

பொதுவாகவே தேய்பிறை வழிபாடு என்பது நம்முடைய துன்பங்கள் நீங்கி இன்பத்தைத் தேடிக் கொள்வதாக அமையும். அந்த வகையில் நாளை மிக மிக அற்புதமாக அமைந்திருக்கிறது. சிவனுக்கு உகந்த தினம் அன்றைய தினத்தில் பிரதோஷம் அதுவும் தேய்பிறை பிரதோஷம். இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த நாளை தவற விடாமல் வழிபாடு செய்பவர்கள் நிச்சயம் கடன் நீங்கி இன்பமாய் வாழலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் நாளைய தினம் இந்த வழிபாட்டை செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்