இதை மட்டும் வீட்டில் வைத்தால் பணக்கஷ்டமே இருக்காது

money

இக்காலத்தில் ஏழை முதல் பணக்காரர் வரை அனைவருக்குமே செல்வம் அதிகம் ஈட்ட வேண்டும் என்கிற ஆசை இருப்பதை காண முடிகிறது. நமது நாட்டின் பண்டைய கட்டிட கலையான வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள வீட்டில் செல்வம் சேருவதற்கான வழிமுறைகள் மற்றும் வீண் பொருள் விரயங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகளையும் பலர் பின்பற்றுகின்றனர். அந்த வகையில் தற்போது பலராலும் வீட்டில் செல்வம் சேர்வதற்காக வளர்க்கப்படும் மணி பிளான்ட் எனும் செடியை வளர்ப்பதை பற்றிய சில விடயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

money

ஒருவரின் வீட்டில் அதிகம் செல்வம் சேர மணி பிளான்ட் எனப்படும் செடியை வீட்டில் வளர்க்க சீன வாஸ்து கலை அறிவுறுத்துகிறது. ஒரு சிலருக்கு இந்த மணி பிளான்ட் செடியை தங்கள் வீட்டில் வளர்க்கலாமா? வேண்டாமா? என்கிற ஐயம் எழுகிறது. தாராளமாக மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்க்கலாம் என்பதே வாஸ்து கலை நிபுணர்களின் அறிவுரையாக இருக்கிறது.

மிகவும் பழமையான சாஸ்திரங்களும், விதிகளும் கொண்ட பாரத தேசத்தின் நடைமுறைகள் பிற நாட்டு சாஸ்திரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. எனினும் பிற நாட்டு கலைகளில் உள்ள நல்ல விடயங்களை தன்னகத்தே ஏற்றுக்கொள்ளும் உன்னதமான நாடாக பாரதம் என்றுமே இருந்து வந்துள்ளது. எனவே தான் நம் நாட்டு கலாச்சாரம், பண்பாடுகளை ஒத்த நடைமுறைகளை கொண்டிருக்கும் சீன நாட்டின் பல விடயங்கள் பாரத நாட்டிலும் பின்பற்றப்படுகின்றன. அவற்றை பின்பற்றி கடைபிடித்தவர்களுக்கு பல நன்மைகளும் ஏற்பட்டுள்ளன.

மணி பிளான்ட் செடியை வளர்ப்பதன் மூலம் நமது வீட்டில் எப்படி செல்வம் அதிகரிக்கும் என்கிற கேள்வி பலரின் மனதில் எழுந்து இருக்கும் என்பது நிச்சயம். மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்க்கும் போது அந்த செடி வீட்டில் இருப்பவர்களுக்கு உளவியல் ரீதியான உத்வேகத்தை கொடுக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இந்தச் செடி வளரும் வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி இந்த மணி பிளான்ட் செடியை பார்க்கும் போது, அவர்களை அறியாமலேயே அவர்களின் மனதிற்குள் ஏதாவது தொழில், வியாபாரம் செய்து அதிக அளவில் செல்வம் ஈட்ட வேண்டும் என்ற தொடர் உந்துதல் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

- Advertisement -

money plant

இப்படி அதிகம் பொருள் சம்பாதிக்க வேண்டும், சம்பாதித்த பொருளை சேமித்து வாழ்க்கைக்குத் தேவையான விடயங்களை செய்ய வேண்டும் என்கின்ற நேர்மறையான எண்ணம் உங்கள் மனதில் பதிந்து, தொடர்ந்து அதையே சிந்தித்துக் கொண்டிருக்கும் போது பிரபஞ்ச சக்தியானது உங்களை பெரும் செல்வம் ஈட்டுவதற்கான பாதைகளில் வழிநடத்த தொடங்கும். அப்படி பிரபஞ்ச சக்தி காட்டுகின்ற வழிகளில் உங்களுக்கு ஏற்ற நியாயமான வழிகளை தேர்ந்தெடுத்து, பணம் சம்பாதித்து பெருஞ்செல்வம் சேர்க்கலாம் என்பதே இந்த செடி வளர்ப்பதால் ஏற்படும் பயன் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

money plant

இத்தகைய அற்புதமான தன்மையை கொண்ட மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்க்க விரும்புபவர்கள் வீட்டின் வட கிழக்கு மூலையில் அல்லது தென் மேற்கு மூலையில் இந்த செடியை தொட்டியில் வைத்து வளர்க்கலாம். மணி பிளான்ட் செடி சூரிய வெளிச்சம் அதிகம் தேவைப்படாத ஒரு செடியாக இருப்பதால், நமது வீட்டிற்கு உள்ளே வைத்தும் வளர்க்கலாம். எனினும் சூரிய ஒளி அதிகம் இல்லாத காரணத்தால் வீட்டிற்குள் வைக்கப்பட்டு வளர்க்கப்படும் மணி பிளான்ட் செடி மெதுவாகவே வளரும். அதே நேரம் வீட்டிற்கு வெளியே சூரிய வெளிச்சம் படும்படி மணி பிளான்ட் செடியை வளர்க்கும் போது, இச்செடி வேகமாக வளரும். இந்தச் செடி வேகமாக வளர, வளர உங்கள் வீட்டிலும் வேகமாக மிகுதியான செல்வம் சேரும் எனவும் கூறப்படுகிறது.இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு செய்வினை உள்ளதா என கண்டறியும் வழிகள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Money saving vastu tips in Tamil. It is also called as Money plant in Tamil or Pana kastam neenga in Tamil or Selvam sera tips in Tamil or Veetil selvam selikka in Tamil.