தீபாவளிக்கு மட்டும் தவறாமல் செய்யும் இந்த ஒரு விஷயத்தை நீங்கள் வாரம் ஒரு முறை செய்திருந்தால் உங்களுடைய தலை முடி ஒன்று கூட கொட்டி இருக்காதே! இனியாவது முழிச்சுக்கோங்க.

hair-coconut-oil
- Advertisement -

நம் தமிழர் பாரம்பரியத்தில் தொன்று தொட்டு தீபாவளி அன்று இந்த ஒரு விஷயத்தை தவறாமல் கடைபிடித்து வருகிறோம். ஆனால் அதை தீபாவளி அன்று மட்டும் செய்யாமல், வாரம் ஒரு முறையாவது செய்ய வேண்டும் என்பது தான் நியதி. ஆனால் காலம் மாற மாற இந்த பழக்கமும் மாறி போய்விட்டது. அதனால் தலைமுடி உதிர்தல் பிரச்சனை இன்று சிறு குழந்தைகளுக்கு கூட வந்து விடுகிறது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு மீண்டும் பாரம்பரிய முறையில் நாம் கடைபிடிக்க வேண்டியது என்ன? ரொம்பவே எளிதாக இந்த விஷயத்தை இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, இனி ஒரு முடி கூட உங்க தலையில் இருந்து உதிரவே செய்யாது. அப்படியான ஒரு எளிமையான தலை முடி சார்ந்த அழகு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் உடல் உள்ளேயும், வெளியேயும் ஒரே மாதிரியான உஷ்ண நிலையில் இருக்க வேண்டும். ஆனால் உள்ள ஒரு வெப்ப நிலையிலும், வெளியே ஒரு வெப்ப நிலையிலும் இருக்கும் பொழுது நமக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கிறது. சிலருக்கு உள்ளே குளிர்ச்சியான வெப்பநிலையும், வெளியில் கதகதப்பாக வெப்பமாகவும் இருக்கும். இந்த மாதிரி இருப்பவர்களுக்கு டக்குனு சளி பிடித்துக் கொள்ளும்.

- Advertisement -

இதே போல உள்ளே வெப்பமாகவும், வெளியில் குளிர்ச்சியாக இருந்தாலும் ஆபத்து தான். இந்த உடல் உஷ்ணத்தை சமநிலைக்கு கொண்டு வராவிட்டால், தலைமுடியில் இருந்து வேகமாக ஒவ்வொரு முடியாக உதிர ஆரம்பிக்கும். இது போதா குறைக்கு நம்மை சுற்றி இருக்கும் சூழலும் தலைமுடி உதிர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது எனவே உண்ணும் உணவு முதல் நாம் உடலை எப்படி வைத்திருக்கிறோம் என்பது வரை அனைத்துமே சரியாக இருக்கும் பொழுது தான் நம்முடைய தலைமுடியானது உதிராமல் இருக்கும்.

சரி, இப்படி தலை முடி வேகமாக உதிர்வதற்கு என்ன செய்யலாம்? இதை தடுத்து நிறுத்துவதற்கு ரொம்பவே எளிதாக ஒரு வழி உண்டு. அனைவரும் தீபாவளி அன்று ஒரு நாள் மட்டும் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பது உண்டு. இந்த எண்ணெயில் நம் முன்னோர்கள் சில பொருட்களை சேர்த்து காய்ச்சுவதை பார்த்திருக்கிறீர்களா? தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவலாம், ஆனால் நல்லெண்ணெய் ஆனது குளிர்ச்சியை அதிகப்படுத்தி விடும் என்பதால் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.

- Advertisement -

உங்கள் தலை முடிக்கு தேவையான அளவிற்கு தேங்காய் எண்ணெயை சூடு படுத்திக் கொள்ளுங்கள். லேசாக வெதுவெதுப்பாக ஆகும் பொழுது அதில் நான்கு ஐந்து அரிசி போடுங்கள். அதனுடன் நான்கைந்து பூண்டு பற்களை தோலோடு இடித்து சேருங்கள். கொஞ்சம் வெந்தயம், கொஞ்சம் சீரகம், மிளகாய் வத்தல் ஒன்று, சின்ன வெங்காயம் ரெண்டு ஆகியவற்றை போட்டு காய்ச்சி கொள்ள வேண்டும். இந்த எண்ணெய் நீங்கள் தலைமுடி முழுவதும் வாரம் ஒரு முறை மசாஜ் செய்யும் பொழுது, உங்களுடைய உடல் உஷ்ணம் தணியும்.

இதையும் படிக்கலாமே:
காஷ்மீர் குளிரே அடித்தாலும் 24 மணி நேரத்திற்கும் உங்களுடைய உதடு டிரை ஆகவே ஆகாது. தேங்காய் எண்ணெயை உதட்டின் மேல் இப்படி தடவுங்க.

மேலும் உடலுக்கு உள்ளே இருக்கும் பல பிரச்சனைகளும் நீங்கும். அது மட்டும் அல்லாமல் தலைமுடியானது உதிர்வது என்று வேகமாக, அடர்த்தியாக நீளமாகவும் வளரும். இதில் சீரகம் நம்முடைய ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். வெந்தயம் பொடுகு, இளநரை போன்றவற்றை தடுக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக்கும். சின்ன வெங்காயம் அலர்ஜி போன்றவற்றை நீக்கும். பூண்டு முகப்பருக்கள் வராமல் பாதுகாக்கும். மேலும் மிளகாய் ஆனது வழுக்கையை தடுத்து, இறந்த செல்களை நீக்கி நம்முடைய தலைமுடியை நன்கு வளர செய்யும்.

- Advertisement -