மூலிகை சாம்பிராணி இப்படி தயார் செய்து போட்டால் சகல தெய்வங்களின் அருளும் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்கும்

sambrani
- Advertisement -

சுத்தம் இருக்கும் இடத்திலும், நல்ல நறுமணம் வீசும் இடத்திலும் தான் மகாலட்சுமி வாசம் கொண்டிருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. வீட்டை நறுமணமாக வைத்திருக்க செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி ஏற்றுவது, சாம்பிராணி புகை போடுவது போன்ற வழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் லட்சுமி கடாட்சத்தை வீட்டிற்குள் வரவழைக்கமுடியும். சாம்பிராணி புகை போடும் பொழுது அதனுடன் இந்த மூலிகைப் பொடியையும் சேர்த்து பயன்படுத்தி வர கோடி நன்மைகள் கிடைத்திடும். அது என்ன மூலிகை பொடி? அதில் என்னென்ன மூலிகைகள் சேர்க்க வேண்டும் என்பதை பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகிறோம்.

sambrani

36 வகையான மூலிகை பொருட்களை கொண்டு தயார் செய்யப்படும் இந்த பொடியில், ஒவ்வொரு மூலிகை பொருளுக்கென்று தனித்தனி சிறப்புகள் உள்ளன. இவற்றில் உள்ள பொருட்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தினாலே நிறைய இறை பலன்கள் கிடைக்கும். ஆனால் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பயன்படுத்தும் பொழுது உங்கள் வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்து, நீங்கள் நினைப்பவையெல்லாம் நிறைவேறும்.

- Advertisement -

மூலிகை பொடி தயார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
முதலில் வீட்டிலேயே அறைத்துக்கொள்ளும் பொருட்களை பற்றி பார்ப்போம். முதல் பொருள், நல்ல நறுமணத்தை தரக்கூடிய வெள்ளை குங்கிலியம் மற்றும் கருப்பு குங்கிலியம், இவை இரண்டையும் நன்றாக இடித்து பொடி செய்து, பின்னர் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். இவற்றுடன் லட்சுமி தேவிக்கு விருப்பமான மருதாணிப் பொடி, காரிய தடைகளை நிவர்த்தி செய்யும் துளசிப் பொடி, சிவனுக்கு விருப்பமான வில்வ இலைப் பொடி, உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படும் நொச்சி இலைப் பொடி, நினைத்ததை நிறைவேற்றும் தும்பை இலைப் பொடி, மகான்களின் அருள் நிறைந்திருக்கும் கரிசலாங்கண்ணிப் பொடி, பணவரவை தன்னிடம் ஈர்க்கும் சீந்தல் பொடி, விநாயகர் அருள் நிறைந்த அருகம்புல் பொடி, இறையருளை நிரந்தரமாக தன்னிடம் கொண்டிருக்கும் தூதுவளைப் பொடி, அம்மனுக்கு உறிய வேப்பிலை பொடி இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக அரைத்துகொள்ள வேண்டும்.

sambrani

இனி வரும் மற்ற பொருட்களெல்லாம் கட்டைகள் போன்று மிகவும் உறுதியாக இருக்குமென்பதால், இவற்றை மிக்சியில் அரைக்க முடியாது, எனவே மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, அரவை மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் ஆவாரம் பூ, மற்றும் கோரைக்கிழங்கு, தோட்டத்தை துளங்கச்செய்யும் வெட்டிவேர், தோஷங்களை அகற்றும் பேய் விரட்டி, பைரவருக்கு உகந்த நாய்கடுகு, கண் திருஷ்டியை அகற்றும் வெண்கடுகு, குழந்தைகளின் ஞாபகத் திறனை அதிகரிக்கும் சடாமஞ்சி, மகாலட்சுமிக்கு விருப்பமான மருதாணி விதை, ராஜ வசியத்தை உண்டாக்கும் நன்னாரி, மகாலட்சுமியின் வாசம் நிறைந்த பச்சைக் கற்பூரம்.

mahalakshmi

அடுத்ததாக வீட்டில் உள்ள தீய சக்திகளை அகற்றும் வலம்புரி காய், இடம்புரி காய், அகில், துகில், கருங்காலிப்பட்டை, தேவதாரம் பட்டை, அரசங்குச்சி, நாவல் மர குச்சி மற்றும் ஆலங்குச்சி இவை அனைத்தையும் நன்றாக சிறு துண்டுகளாக உடைத்து, சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இவை அனைத்தையும் மெஷினில் கொடுத்து நன்றாக அரைத்து விட்ட பிறகு, இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த பொடியையும் ஒன்று சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இவற்றுடன் ஜவ்வாது, புனுகு, சந்தனம், தசாங்கம்பொடி போன்றவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

sambrani

இவ்வாறு கலந்து வைத்துள்ள பொடியை வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமையில் சாம்பிராணி புகை போடும் பொழுது, அதனுடன் ஒரு ஸ்பூன் சேர்த்து தூபம் போட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவர உங்கள் வீட்டில் இறைசக்தி இருப்பதை உங்களால் உணர முடியும். நிறைய நல்ல காரியங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.

- Advertisement -